கூடங்குளத்தில் இருந்து தமிழகத்திற்கு 562 மெகா வாட் மின்சாரம் : விரைவில் கிடைத்தால் துயர் குறையும்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் அலகில், மின் உற்பத்தி துவங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால், கூடங்குளம் மின்சாரத்தை பெற, மின்சார வாரியம் ஆர்வமுடன் காத்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில், தலா, 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.முதல் அணு உலையில் மின் தயாரிப்பு பணிகள் தீவிரமாக உள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் அலகில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 462.50; கர்நாடகா, 221; கேரளா, 133; புதுச்சேரி, 33.50 மெகா வாட் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, கூடங்குளம் அணு மின் நிலைய முதல் அலகில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும், தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா, சில மாதங்களுக்கு முன், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.இதில், திட்டமிட்டபடி, மின் உற்பத்தி துவங்கப்படுவதில் தாமதமாகி வருகிறது. அதனால் எந்தத் தேதியில் இருந்து முறையான முழு உற்பத்தியும், வினியோகமும் துவங்கும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலைய முதல் அலகில் இருந்து, தமிழகத்துக்கு கூடுதலாக, 100 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்ய, மத்திய எரிசக்தி துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்திற்கு, 562.50 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். மற்ற மாநிலங்களுக்கு தரப்படும் மின்சார ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை. எஞ்சியுள்ள, 50 மெகா வாட் மின்சாரம் சுழற்சி முறையில் ஒதுக்கப்படும் என, தெரிகிறது.மின்தடை: தமிழகத்தில், தற்போது, காற்றாலை மின்சாரம் குறைந்துள்ளதால், சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில், சுழற்சி முறையில், இரண்டு மணி முதல் மூன்று மணி நேரம் வரை, அறிவிக்கப்படாமல், மின்தடை செய்யப்படுகிறது.இதனால், கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரத்தை பெற, மின்வாரியம் ஆர்வமுடன் காத்திருக்கிறது.

இதுகுறித்து, மின் வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், "கூடங்குளத்தில், மின் உற்பத்தி துவங்கினால், மின் தடை ஓரளவிற்கு குறைய வாய்ப்புள்ளது' என்றார்.


கல்பாக்கம் ஒதுக்கீடு எவ்வளவு?

சென்னை அடுத்த கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், தலா, 220 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் உள்ளன. முதல் மற்றும், இரண்டாவது அணு உலைகளில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 75 சதவீதமான, 330 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. எஞ்சிய மின்சாரம் கேரளா, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.சில மாதங்களுக்கு முன், இரண்டாவது அணு உலையில் உள்ள, ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால், தற்போது, முதல் அணு உலை மூலம், 170 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது.

- நமது நிருபர் -

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
11-செப்-201310:43:51 IST Report Abuse
N.Purushothaman அதான் நம்ம நாரவாய் நாராயணசாமி 15 நாளில் வந்துடும்ன்னு சொன்னாரே....
Rate this:
Share this comment
Cancel
siva - Chennai,இந்தியா
11-செப்-201309:35:11 IST Report Abuse
siva இதுவரைக்கும் மூன்றுமுறை பழுதாகியபோது அதைப்பற்றி ஒரு செய்திகூட வரவில்லையே ? இன்னமும் பழுது சரிசெய்ய படவில்லை என்பதையும் தெளிவாக சொல்லாமல் மறைப்பது ஏனோ ? இதை கட்டியத்தில் எவ்வளவு ஊழலோ நிச்சயம் ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201309:22:29 IST Report Abuse
Pugazh V கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து ஜெயலலிதா சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திருத்துவாரா? அல்லது மீண்டும் தீய சக்திகளைக் கொண்டு போராட்டத்தை தூண்டிவிட்டு தமிழகத்தை இருளில் தள்ளப் போகிறாரா?
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-செப்-201309:03:22 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் தமிழ் நாட்டில் "மெழுகுவர்த்தி எரிகின்றது.எதிர்காலம் தெரிகின்றது (?)"
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201308:51:34 IST Report Abuse
Srinivasan Kannaiya நாராயணசாமி தான் தினம் தினம் காயத்திரி மந்திரம் போல் சொல்லிக்கொண்டு காமெடி பண்ணுவார்,..ஆனால் மின்சாரம் வந்த பாடில்லை...துயரம் தீர்ந்தபாடில்லை..
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-செப்-201308:15:29 IST Report Abuse
villupuram jeevithan பாராளுமன்றத்த் தேர்தல் வரை இதற்கு வாய்ப்பு கிடையாது?
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
11-செப்-201307:48:34 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு எதைத்தின்னா பித்தம் தெளியும்?
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
11-செப்-201307:47:13 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் 15 நாள் ஜோசியர் நாராயண சாமி என்ன சொல்லுறார்?
Rate this:
Share this comment
Krishnaswamy - coimbatore ,இந்தியா
11-செப்-201309:39:41 IST Report Abuse
Krishnaswamyமூணு மாச ஜோசியர் சொல்றத விட இது எவ்வளவோ பரவாயில்லை. இவராவது ஏதாவது செஞ்சுட்டு சொல்றார். நம்ம தான் ஒண்ணுமே செய்யாம காது குத்தறதுல கேட்டியாசே. இன்னைக்கு புதுசா ஒரு அறிக்கை- மத்திய அரசு தமிழக மின்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று....
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
11-செப்-201306:35:35 IST Report Abuse
Thangairaja ஜெயலலிதா இதில் அரசியல் செய்யாதிருந்திருந்தால் இத்திட்டத்தின் பலன் எப்போதோ கிடைத்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
11-செப்-201302:49:43 IST Report Abuse
Panchu Mani இது வாஸ்து பிரகாரம் கட்டலை. வாயு மூலை ரைட் பக்கம் இருக்கணும். கதவு மேல் பக்கம் இருக்கணும். ஜன்னல் இல்லாம இருக்கிறது மகா தப்பு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்