Transport department warns omni bus | அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை எச்சரிக்கை

Updated : செப் 11, 2013 | Added : செப் 10, 2013 | கருத்துகள் (9)
Advertisement
ஆம்னி பஸ்கள், பறிமுதல், போக்குவரத்து துறை, எச்சரிக்கை,Transport department,omni  bus

"பண்டிகை நாட்களில், அனுமதியின்றி இயங்கும் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்' என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

கடந்த, 7ம் தேதி, சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ஆம்னி பஸ்சில், அதிக கட்டணமாக, 1,500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. திருச்சி அருகே, பஸ் டயர் பஞ்சர் ஆனது; ஓட்டுனர் மாயமானார். இந்த சம்பவம், பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதிக லாபம்:

பண்டிகை நாட்களில், வெளி மாவட்டங்களில் இயங்கும் பஸ்களை, சென்னையில் இருந்து இயக்கும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள், அதிக லாபம் பார்ப்பதுடன், பயணிகளை தவிக்க விடுகின்றனர். மேலும், சில டிராவல்ஸ் நிறுவனங்கள், "சிறப்பு பஸ்கள்' என்ற போர்வையில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.


அனுமதி இல்லை:

ஆம்னி பஸ் நிலையங்களில், பண்டிகை நாட்களில் மட்டும் முளைக்கும், இதுபோன்ற பஸ்களை, சென்னையில் இருந்து இயக்க, அனுமதி இல்லை. இருப்பினும், அடாவடியாக பஸ்களை இயக்கி, புரோக்கர்கள் உதவியுடன், பயணிகளிடம் பணத்தை கறக்கின்றனர்.வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வந்து செல்லும், ஆம்னி பஸ்களில், பயணிகளுக்கான வசதிகள் மறுக்கப்படுகின்றன. இப்படி, பல்வேறு வழிகளில், முறைகேடாக இயங்கும் ஆம்னி பஸ்களில் பயணிப்போர், தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.விநாயகர் சதுர்த்தி பண்டிகைக் காக, ஆம்னி பஸ்களில் சென்றவர்களிடம், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. நவ., 2ம் தேதி, தீபாவளி பண்டிகைக்காக செல்லும் பயணிகளிடம், கட்டண வசூலிப்பு, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த சூழலில், ஆம்னி பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்துவதோடு, உறுதியான நடவடிக்கைகளை, போக்குவரத்து துறை எடுக்க வேண்டும் என, பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டு உள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.


பறிமுதல்:

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருச்சியில், பயணிகளை தவிக்கப்பட்ட பஸ் குறித்து, விசாரித்து வருகிறோம். ஆம்னி பஸ்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் பஸ்களின் எண்ணிக்கை குறித்த பட்டியல் வைத்து உள்ளோம். ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினரிடம் ஆலோசித்த பின், அனுமதி இல்லாமல் இயங்கும் பஸ்களை, பறிமுதல் செய்து விடுவோம்.தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம். அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்களின், "பர்மிட்' ரத்து செய்யப்படும். வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வந்து செல்லும் பஸ்களில், பயணி களுக்கு இடையூறு இருப்பின், அதற்கு தீர்வு காணும் வரை, குறிப்பிட்ட பஸ்சை இயக்க, அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201309:59:38 IST Report Abuse
Baskaran Kasimani கப்பமேல்லாம் சரியாக கட்டிவிடுங்கள் என்று எச்சரிக்கை விடுவது புரிகிறது....
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
11-செப்-201309:18:28 IST Report Abuse
rajan ஐயா நீங்க விடுற எச்சரிக்கை எல்லாம் லஞ்சத்தை வளர்க்கும். உடனடியா வெளிக்கு தெரியாம அக்ஷன்ல இறங்கி பஸ்ஸ பறிமுதல் கடும் அபராதம் எல்லாம் விதித்து உங்க கடைமைய செய்யுங்க. எல்லாவனும் வழிக்கு வருவானுக. அதை விட்டு விட்டு நீங்களும் அரசியல்வாதிகளை போல வீணையை மீட்டுறீன்களே. இந்த டிராவல்ஸ் தொழில்ல எத்தனை அரசியல்கனவான்கள் பினாமி குடும்பங்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நல்ல தெரியும்லா. அதுக்கு எத்த மாதிரி உங்களையும் பாதுக்காத்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Salai Mutharasan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201308:41:47 IST Report Abuse
Salai Mutharasan அரசு அதிகாரிகள் தயவு செய்து கீழ்க்கண்ட இணைய முகவரிகளை கவனிக்கவும். வேறு எந்த புகாரும் தேவையில்லை. அதிக கட்டண வசூல் அம்பலபடுத்த இது போதும். www.redbus.in & www.makemytrip.com
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
11-செப்-201302:51:40 IST Report Abuse
Panchu Mani இப்படி அனுமதியில்லாம ஓடற பஸ் லேந்து டீஸல் எடுத்து கவர்மென்ட் பஸ் க்கு ஊத்தி ஓட வைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
11-செப்-201302:39:37 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருச்சியில், பயணிகளை தவிக்கப்பட்ட பஸ் குறித்து, விசாரித்து வருகிறோம், அந்த பஸ் கிடைத்தால் சொளையாக ஒரு தொகையை வசூலித்து விடுவோம் ஆம்னி பஸ்களை இயக்கும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் பஸ்களின் எண்ணிக்கை குறித்த பட்டியல் வைத்து உள்ளோம். ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினரிடம் ஆலோசித்த பின், அனுமதி இல்லாமல் இயங்கும் பஸ்களிடம் தேவையான லஞ்சத்தை வசூல் செய்து விடுவோம்.தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம். அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மாமூல் தரும்வரை , "பர்மிட்' ரத்து செய்யப்படும். வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வந்து செல்லும் பஸ்களில், பயணி களுக்கு இடையூறு இருப்பின், அதற்கு தீர்வு காணும் வரை, குறிப்பிட்ட பஸ்களிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்போம்
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
11-செப்-201302:33:18 IST Report Abuse
Kunjumani போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுவது போட்டி கருதி இல்லை பொட்டி கருதி என்று ஆம்னி பஸ் முதலாளிகளுக்கு தெரியாதா என்ன? ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது, ஜாம்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
11-செப்-201301:55:48 IST Report Abuse
jagan அரசு பஸ் கம்பெனி நடத்த கூடாது......அரசு போக்குவரது துறையை கலைத்துவிடுவது நல்லது.......
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
11-செப்-201306:54:06 IST Report Abuse
K.Sugavanamபஸ் அரசுடைமையே ஒரு கம்பெனிமேல இருந்த காண்டால தானே நடந்தது...
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
11-செப்-201306:57:52 IST Report Abuse
K.Sugavanamஒரு ஆம்னி பச்சையாவது பிடித்து நடவடிக்கை எடுக்க முடியுமா??பணம் பாதாளம் வரை பாய்கிறது..உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால்,ஆம்னிபச் கேலம்பறத்துக்கு முன்பே செக் செய்து பின்தான் பயணிகளிடம் பணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்..பர்மிட் இல்லாத வண்டிய உடனே பறிமுதல் செய்யணும்.கைய சொரியாம..இது அத்தைக்கு மீசை மொளச்ச கதைதான்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை