Advertisement
திருப்பதிக்கு பக்தர்கள் வரவேண்டாம்: மீண்டும் 48 மணி நேர முழு அடைப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 செப்
2013
00:04
பதிவு செய்த நாள்
செப் 11,2013 00:03

திருப்பதி: திருமலையில், மீண்டும், 48 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தை, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், "திருப்பதிக்கு வரவேண்டாம்' என, பக்தர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

ஆந்திராவில், தனித் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, "வரும், 13ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல், 15ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி வரை, திருப்பதியில் இருந்து, திருமலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது' என, போராட்டம் நடத்தும் கூட்டமைப்புக் குழுவினர் அறிவித்து உள்ளனர். இதனால், திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல இயலாது.

இதுகுறித்து, போராட்டக் குழுவினர் கூறியதாவது: மத்திய அரசு எங்கள் உணர்வை புரிந்து கொள்ள மறுக்கிறது. தனித் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதுநாள் வரை, தேவஸ்தானத்தின் வேண்டுகோளின்படி, திருமலைக்கு வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இனி, அவர்கள் வருவது தடை செய்யப்படும். எனவே, பக்தர்கள், எங்கள் மன உணர்வை அறிந்து, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்; போராட்ட நாட்களில், பக்தர்கள் யாரும் திருமலைக்கு வரவேண்டாம். தேவஸ்தானம் மீண்டும் வற்புறுத்தினாலும், எங்களுடைய முடிவு இறுதியானது. எந்த வாகனத்தையும் இயங்க விட மாட்டோம். மேலும், வரும், 13ம் தேதி இரவு, திருப்பதி நகரம் முழுவதும், மின் வினியோகம் நிறுத்தப்பட்டு, "மெழுகுவர்த்தி ஊர்வலம்' நடத்தப்படும். இவ்வாறு, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.

இதே போன்று, சில நாட்களுக்கு முன், திருப்பதியை ஒட்டிய பகுதிகளில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, திருமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தற்போது நடக்க உள்ள போராட்டத்தின் போது, பக்தர்களின் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை, என, அறிவிக்கப்பட்டு உள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suprajaa Sridaran - Kualalumpur,மலேஷியா
11-செப்-201311:17:43 IST Report Abuse
Suprajaa Sridaran மத்தியில் ஆளும் காங்கிரஸ் கம்பெனி திருப்பதி கோவில் சொத்தை கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறது.அது தோல்வியிலும் கட்சியின் அழிவிலும் முடியும்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
jayaraj - Coimbatore,இந்தியா
11-செப்-201311:02:19 IST Report Abuse
jayaraj கோவிந்தா, கோவிந்தா. புரட்டாசி மாசம் தான் தமிழக பக்தர்கள் எல்லோரும் திருப்பதிக்கு படை எடுக்கும் மாதம்.உங்கள் போராட்டங்கள் அனைத்தையும் இதோடு நிறுத்திக்கொண்டு புரட்டாசியில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர வழி ஏற்படுத்துங்கள். இல்லாவிட்டால் அதிக பாதிப்புக்கு ஆளாவது தமிழக பக்தர்கள் மட்டுமல்ல, திருப்பதி வெங்கடாசலபதியின் வருமானமும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏழுமலை வசா, வெங்கடேசா கோவிந்தா கோவிந்தா
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
P.GOWRI - chennai,இந்தியா
11-செப்-201310:17:30 IST Report Abuse
P.GOWRI இது ஆந்திராவின் சோதனை காலம். அவருக்கு நீங்க என்ன ஓய்வு கொடுப்பது. அவர் ஓய்வு கொடுக்க நினைத்தார் என்றால் நீங்க தாங்க மாட்டீங்க .
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
viki pasupathy - Hyderabad,இந்தியா
11-செப்-201309:06:01 IST Report Abuse
viki pasupathy Will they dare prevent devotees of any other religion from visiting their sacred places? And will the Central State Government keep quiet if they do?
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
11-செப்-201308:50:17 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ரெண்டு நாள் ஓய்வென்றால் எத்தனை கோடி இழப்பு வரும்?
Rate this:
10 members
0 members
6 members
Share this comment
Cancel
AMCHI - chennai,இந்தியா
11-செப்-201308:40:49 IST Report Abuse
AMCHI திருப்பதி கோவில் கூட்டத்தை திட்டமிட்டு நிறுத்த நமது இத்தாலிய கிறிஸ்துவ அம்மையார் செய்யும் வேலை இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும்.
Rate this:
22 members
1 members
53 members
Share this comment
Cancel
NRK Theesan - chennai,இந்தியா
11-செப்-201308:34:38 IST Report Abuse
NRK Theesan பக்தர்கள் வந்தால் தான் உங்கள் உண்மையான போராட்டம் உலகம் அறியும் .இல்லையென்றால் வெறும் விளம்பரமே .
Rate this:
1 members
1 members
9 members
Share this comment
Cancel
செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
11-செப்-201308:32:09 IST Report Abuse
செல்வ.கமலகண்ணன் அவருக்கு புரட்டாசி மாதம் தான் பலன் அதிகம்னு சொல்லுவாங்க நீங்க அந்த மாதம் தொடங்கம் முன்னடியே யாரும் வரக்கூடாதுனு சொல்ல ஆரம்பிச்சிட்டிங்க போல நல்ல தொடக்கம்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
murthyb - chennai,இந்தியா
11-செப்-201308:27:08 IST Report Abuse
murthyb This is the crucial time, the polic concentrates on the holy thirumala, so that anti hindu forces do not distribute or paste their religion symbols/books in thirumala. Already attempts were made to spread their religion. So the true devotees in cooperation with Police to ensure protecting the sanctity of the Holy temple hills.
Rate this:
3 members
0 members
8 members
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
11-செப்-201308:16:49 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN தெய்வத்தை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள். ஊர் விட்டு ஊர் செல்லவேண்டியதில்லை. நம் ஊர் தெய்வத்திற்கு திருப்பதி ஏழுமலையானைப் போல வரம் தரும் சக்தி இல்லையென்றால் அது தெய்வம் இல்லை. சிந்தியுங்கள். தெய்வம் என்றாலே சகல சக்திகளும் படைத்ததுதான். சிறிது குறைந்தாலும் அது தெய்வம் இல்லை. இதை நான் சொல்லவில்லை. இதையே காஞ்சி மகாப் பெரியவா நேர் மறையாக முன்பே கூறி இருக்கிறார். நான் தெய்வங்களையோ கோவில்களையோ குறைவாக எழுதவில்லை. சரியான கருத்தை புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொண்டால் மக்கள் ஒரே இடத்தை நாடி செல்லவேண்டியதில்லை. எல்லா கோவில்களில் இருக்கும் தெய்வங்களும் தெய்வங்களே. ஒரே தெய்வம் தான் உண்டு. அது உங்கள் ஊரிலுள்ள கோவில் தெய்வமாகவே இருக்கட்டுமே. உருவங்கள் மாறினாலும் அவை நம் உள்ளத்தில் இறை உணர்வை ஊக்குவிக்கவே உருவாக்கப் பட்டுள்ளன. அதுவே இந்து மதம்.
Rate this:
7 members
1 members
58 members
Share this comment
Iniyan - chennai,இந்தியா
11-செப்-201311:04:05 IST Report Abuse
Iniyan இது இத்தாலிய அம்மையின் சதியே . இந்த கூறு கெட்ட போராட்ட காரர்கள். வெள்ளிகிழமை போராட்டம் வைத்துகொண்டு, ஹைதராபாதில் முஸ்லிம்கள் மசுதிக்கு போக வேண்டாம் என்று அறிவிக்க முடியுமா> இந்துக்கள் என்றால் இளக்காரம் ....
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Suprajaa Sridaran - Kualalumpur,மலேஷியா
11-செப்-201311:19:40 IST Report Abuse
Suprajaa Sridaranஐயா திருப்பதி மகிமை தெரியாமல் இங்கு பொது இடத்தில் கருத்து இடாதீர்கள்.மனிதர்கள் தெய்வங்கள் அல்ல....
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.