"இஸ்கான்' கோவில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலி| Dinamalar

"இஸ்கான்' கோவில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலி

Added : செப் 11, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 "இஸ்கான்' கோவில் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலி

பெங்களூரு, கனகபுரா ரோட்டிலுள்ள, "இஸ்கான்' கோவிலில், புதிதாக கட்டப்பட்டு வந்த, காம்பவுண்ட் சுவர், இடிந்து, 6 வயது சிறுமி உட்பட மூன்று பேர் பலியாயினர். பெங்களூரு, கனகபுரா ரோட்டில், வசந்தபுரா அருகில், இஸ்கான் கோவில் உள்ளது. இந்த கோவிலில், காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு வருகிறது. கடந்த, 8ம் தேதி பெய்த பெருமழையினால், அப்பகுதியில், மழை நீர் தேங்கி நின்றது. இதன் அருகில், ஏராளமான ஏழை மக்கள், வீடுகளில் குடியிருந்தனர். மழை நீரில் ஊறிய கோவில் காம்பவுண்ட் சுவர், நேற்று முன்தினம் திடீரென இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்தது. இதில், வீட்டிலிருந்த, 6 வயது சிறுமி ஸ்ரேயா
உட்பட, மூன்று பேர் பரிதாபமாக பலியாயினர். காயமடைந்த, ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட, கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜார்ஜ், ""பலியானோர் குடும்பத்துக்கு, தலா, ஐந்து லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாயும் வழங்க, இஸ்கான் நிர்வாகம் சம்மதித்து உள்ளது,'' என்றார். சம்பவத்தை கண்டித்து, அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை