செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க இந்தியர்கள் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வாஷிங்டன்:செவ்வாய் கிரகத்துக்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக, இந்தியாவைச் சேர்ந்த, 20 ஆயிரம் பேர், விண்ணப்பித்து உள்ளனர்.

செவ்வாய் கிரகத்துக்கு, அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சில விண்கலங்கள் மூலம் ரோபோக்களை அனுப்பி, பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றன."செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர் வாழ முடியும்' என, சில விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். றஇதற்கிடையே சில நிறுவனங்கள், செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், அங்கே குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளன.நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, "மார்ஸ் ஒன்' என்ற, செவ்வாய் கிரகப் பயணத் திட்ட நிறுவனத்தின் தலைவர், பாஸ் லேன்ஸ்டார்ப், 2023ம் ஆண்டுக்குள், சிவப்பு கிரகத்தில், மக்கள் குடியேற்றத்தை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, லேன்ஸ்டார்ப் கூறியதாவது:செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொள்வதற்காக, இதுவரை, 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள், ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். அதிகபட்சமாக, 48 ஆயிரம் அமெரிக்கர்களும், அடுத்த படியாக இந்தியர்கள், 20 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.வரும், 2015ம் ஆண்டிலிருந்து, நான்கு பேர் கொண்ட, 60 குழுக்கள் அமைக்கப்பட்டு, செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இது முடிய, ஏழு ஆண்டுகள் ஆகும். இதன் மூலம் அவர்கள் விண்வெளியில் பயணிக்கவும், செவ்வாய் கிரகத்தில் உள்ள சீதோஷ்ண நிலைகளை சமாளிக்கவும் முடியும்.இவ்வாறு, லேன்ஸ்டார்ப் கூறினார்.

"செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்துவதற்குரிய சூழல் உள்ளதா என்பது, இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், பூமியிலிருந்து, மக்களை அங்கு குடியமர்த்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது' என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar - Chennai,இந்தியா
11-செப்-201316:47:34 IST Report Abuse
Sekar ஏன் தெரிந்தே சென்று புதை குழியில் விழுகிரர்களோ தெரியவில்லை. காசு கொடுத்து சூனியம் வைத்துகொளுவதேன்பது இதுதானோ? அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையகிவிடப்போகிறது.
Rate this:
Share this comment
Cancel
S. MURALIDHARAN - CHENNAI,இந்தியா
11-செப்-201314:47:14 IST Report Abuse
S. MURALIDHARAN எந்த புண்ணியவானாவது முயற்சி செய்து, நம் அரசியல் வாதிகள் எல்லோரையும் சனி கிரகத்தில் கொண்டு விட்டால் நாட்டுக்கு சனி விலகும்
Rate this:
Share this comment
Cancel
vaithilingam - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201314:37:01 IST Report Abuse
vaithilingam நிலவில் கூட தண்ணீர் இருக்கிறது என்று சொன்னார்கள் ஆனால் 1969 க்கு பிறகு ஏன் நிலவுக்கு அமெரிக்கா செல்லவில்லை என்பதை தெளிவாக சொல்லவேண்டும் ஏன் என்றால் நிலவுக்கு மனிதன் சென்றான் என்பதே பொய் ,இதில் சேவை கிரகம் வேறா
Rate this:
Share this comment
Cancel
Soriya Bulbonse - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-201314:30:39 IST Report Abuse
Soriya Bulbonse இந்தியாவில் மறுபடியும் காங்கிரஸ் ஆட்சி வந்துவிடுமோ என்ற பயம் அவர்களுடய பயம் நியாயம் தானே
Rate this:
Share this comment
Cancel
muthuppandy pandian - chennai,இந்தியா
11-செப்-201314:10:00 IST Report Abuse
muthuppandy pandian உங்கள் தலையங்கத்தில் 20000 சனி கிரகம் செல்ல ஆசை என வருகிறது அது சரியா ?
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201313:14:17 IST Report Abuse
kumaresan.m " மனிதன் குரங்கின் பரிமாண வளர்ச்சி என்பதை நிறுப்பிகிறது இந்த செய்தி ,ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் இது போன்று பதிவு செய்து விட்டார்கள் .........பயிற்சி மற்றும் கட்டணம் ,ஒப்பந்தம் போன்றவைகள் வரும்பொழுது தான் பாதி பேர் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
ingurkumar - mettupalayam ,இந்தியா
11-செப்-201312:35:59 IST Report Abuse
ingurkumar Real estate காரர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
11-செப்-201310:21:26 IST Report Abuse
Ashok ,India எப்படியாவது இந்தியாவிலிருந்து(மத்திய அரசு) தப்பித்தால் போதும் என்று நினைக்கிறார்கள் போல??
Rate this:
Share this comment
Cancel
vinoth - chennai,இந்தியா
11-செப்-201309:47:53 IST Report Abuse
vinoth பூமியில் வாழ்கின்ற போதே எல்லை பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை ஒரு மாநிலத்திற்கு மாநிலம், ஒரு நாட்டுக்கு நாடு, இருக்கும் போது இவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு போய் மட்டும் அமைதியாக வாழ போகிறார்களா என்ன? அங்கும் அடித்து கொள்வார்கள். அங்கு சென்றாலும் எல்லை பிரச்னையை ஆரம்பித்து விடுவார்கள். எல்லாம் வீண் வேலை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201309:16:57 IST Report Abuse
Srinivasan Kannaiya 1967 இல் திரு,பக்தவத்சலம் அவர்கள் தமிழ்நாட்டில் விஷகிருமிகள் பரவிட்டது என்று திராவிட கழகத்தை சொன்னார்.. அவர்கள் உண்மையிலேயே விஷகிருமிகள் என்பதை ஒவ்வொரு நாளும் நிருபித்து வருகின்றனர்.. எனவே செவ்வாய் கிரகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவர்களின் தூசியை கூட அனுமதிக்காதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்