அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் கோவையில் அதிரடி அமல்!: "ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் சேவைக்கு மக்கள் வரவேற்பு| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (14)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை:சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு, தமிழக அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம், இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால், அந்த கட்டணத்தை கோவையில் அதிரடியாக நடைமுறைப்படுத்தி, தமிழகத்துக்கே முன்னோடியாக விளங்குகின்றனர், சில ஆட்டோ டிரைவர்கள். இவர்களது முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை நகரில் 125 ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன; 12 ஆயிரத்து 500 ஆட்டோக்கள் இயங்குகின்றன. மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க, கோவை மாவட்ட நிர்வாகம், இதற்குமுன் பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது; ஆட்டோ தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பில்லாததே இதற்கு காரணம். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு, சென்னையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்து ஆக.,25ம் தேதி அறிவித்தது.குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் (1.8 கி.மீ.,) 25 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் 12 ரூபாய் (ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20 ரூபாய்), காத்திருப்பதற்கு 5 நிமிடத்துக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் (இரவு 10:00 மணி முதல், அதிகாலை 5:00 மணி வரை) நிர்ணயித்துள்ள கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்கவும் அரசு அனுமதித்துள்ளது. இக்கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அரசின் இந்த கட்டண நிர்ணயத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் உள்ளது.

இந்த ஆட்டோ மீட்டர் கட்டணம், இன்னும் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படவில்லை. கோவை நகரிலுள்ள ஆட்டோ தொழிற்சங்கங்கள், ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சமாக 30 ரூபாய், கூடுதல் கி.மீ.,க்கு 15 ரூபாய் அறிவிக்க

வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கோவையில் மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க அரசு உத்தரவு வந்ததும், நடவடிக்கை துவங்கும் என, கலெக்டர் கருணாகரன் கூறியுள்ளார். இந்நிலையில், சென்னைக்கு அறிவிக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை கோவையில், "ஆட்டோ ஆட்டோ டிரைவர்கள் குழு'வினர் அமல்படுத்தியுள்ளனர். கோவை நகரிலுள்ள புரூக்பாண்ட் ரோடு, தேவாங்க மேல்நிலைப்பள்ளி ரோடு சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 30 ஆட்டோக்கள் இயங்குகின்றன. அனைத்து ஆட்டோவிலும் முன்பக்கமும், பின்பக்கமும் "ஆட்டோ ஆட்டோ' என, ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். ஆட்டோக்களில் "டிஜிட்டல்' மீட்டர் பொருத்தியுள்ளனர்.

ஆட்டோ "சவாரி' துவங்கியதும், மீட்டரை "ஆன்' செய்கின்றனர். முதலில் 1.8 கி.மீ., தொலைவு கடந்ததும், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20ரூபாய் கட்டணம் கூடுதலாகிறது. குறைந்தபட்ச கி.மீ., கடந்ததும், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் போது, "வெயிட்டிங் கவுன்டிங்' காட்சிக்கு வருகிறது. மீட்டர் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் தெரிவிக்க "டிரைவர்கள் கண்காணிப்பு குழு' மொபைல்போன் எண்களை ஒட்டியுள்ளனர். அரசு அறிவிக்கும் முன்பே, டிரைவர்களே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை வரவேற்கும் குமார்: நான், மும்பையில் ரயில்வே அதிகாரியாக பணியாற்றுகிறேன். கோவை ஆர்.எஸ்.புரத்தில் என் வீடு உள்ளது. வழக்கமாக கோவை வரும் போது, கால் டாக்சியில் தான் பயணிப்பேன். தற்போது, மீட்டர் கட்டணம் என்ற அறிவிப்பை பார்த்து,

Advertisement

ஆட்டோவில் பயணித்தேன். கட்டணம் மிக குறைவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று மற்ற ஆட்டோக்களிலும் கட்டணம் நிர்ணயித்தால், கோவை மக்கள் பயனடைவர்

இப்படித்தான் இருக்கணும்!"ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் அறிவுரைகள்:
டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும்
ஆட்டோ பயணம் துவங்கியதும் மீட்டரை இயக்க வேண்டும்
பெயர் மற்றும் பதிவு எண் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும்
பயணிகளிடம் தரக்குறைவாக பேசக்கூடாது
வாகனத்தின் ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்
குடிபோதையில் ஆட்டோ ஓட்டக்கூடாது
பயணிகளின் பார்வைக்கு படும்படிடிரைவரின் மொபைல்போன் எண்ணையும், புகார் தெரிவிப்பதற்கான எண்களையும் எழுதியிருக்க வேண்டும்.
போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, அறிவித்துள்ளனர்

"ஆட்டோ டிரைவர்கள் குழு' தலைவர் இப்ராகீம் கூறியதாவது: "கால் டாக்சி' வரவால், ஆட்டோ தொழில் நலிந்து விட்டது. அரசு அறிவித்த மீட்டர் கட்டணம் நியாயமாக இருந்ததால் அமல்படுத்தியுள்ளோம். ஆட்டோ பயணம் செய்வோர், மீட்டர் பொருத்திய ஆட்டோக்களை தேர்வு செய்தால், எல்லா ஆட்டோக்களும் மீட்டர் கட்டணத்துக்கு மாறிவிடுவார்கள். கடந்த மூன்று நாட்களாக மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுகிறோம். இனிமேல், மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிப்போம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போனில் மிரட்டுகிறார்கள். மீட்டர் கட்டண ஆட்டோ என்பதற்கான "ஸ்டிக்கர்' ஒட்ட முடியவில்லை. "மிரட்டல்' பற்றி போலீசுக்கு தெரிவித்துள்ளோம். மக்களின் ஆதரவும், அரசின் பாதுகாப்பும் எங்களுக்கு தேவை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
12-செப்-201317:01:44 IST Report Abuse
chennai sivakumar ""ஆட்டோ கட்டண தொல்லைக்கு கால் டாக்சி எவ்வளவோ பரவாயில்லை என்று மக்கள் மாறி விட்ட பிறகுதான் ஆட்டோ ஓட்டுனர்கள் விழித்து கொண்டுள்ளனர்"" -இதே நிலைமையில் சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் டாக்ஸி ஓட்டுனர்களால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தனர்.பிறகு டூரிஸ்ட் டாக்ஸி வந்தவுடன் டாக்ஸி சர்விஸ் காணாமல் போய் விட்டது. அதே நிலைதான் ஆட்டோக்களுக்கும் ஏற்பட்டு இருக்கும்.ஏதோ அவர்கள் நல்ல காலம் கோர்ட் தலையிட்டு அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி படுத்தி இருக்கிறது.ரொம்ப ஆடினால் கீழே நிச்சயம் விழுந்து விடுவாய் என்பதை நினைவு கொண்டால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Sanghimangi - Mumbai,இந்தியா
11-செப்-201319:13:07 IST Report Abuse
Sanghimangi ஆட்டோ கட்டண தொல்லைக்கு கால் டாக்சி எவ்வளவோ பரவாயில்லை என்று மக்கள் மாறி விட்ட பிறகுதான் ஆட்டோ ஓட்டுனர்கள் விழித்து கொண்டுள்ளனர். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம், சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து, இனிமேல் ஒழுங்காக உழைப்புக்கேற்ற கட்டணம் வாங்கி தொழில் செய்து மக்கள் நன்மதிப்பை பெறுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
11-செப்-201318:17:44 IST Report Abuse
Sathyamoorthy எங்கள் கோவை மக்கள் எப்போதும், மற்றவர் கஷ்டத்தை புரிந்தவர்கள். வந்தாரை வாழ வைப்பவர்கள். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
Rate this:
Share this comment
kuchipudi gumma - chennai,இந்தியா
13-செப்-201312:35:53 IST Report Abuse
kuchipudi gummaவாங்கடா வந்து வந்தனம் பண்ணுங்கடா...
Rate this:
Share this comment
Cancel
Vivek - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201317:46:00 IST Report Abuse
Vivek Super initiative.... :)
Rate this:
Share this comment
Cancel
parthiban - coimbatore,இந்தியா
11-செப்-201311:55:44 IST Report Abuse
parthiban தானவே முன்வந்த ஆட்டோ நண்பர்க்கு நன்றி ,
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-செப்-201310:56:34 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் கேரளத்தில் ஆட்டோவுக்கு மினிமம் கட்டணம் 20 ரூபாய்..அதனால் அங்குள்ள ஆட்டோக்கள் சக்கை போடு போடுகின்றன...நம்மூர் ஆட்டோ காரர்களைப்போல தீவெட்டி கொள்ளை அடிக்காததால் அவர்களது தொழில் நன்றாக நடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Venkat Pk - Coimbatore,இந்தியா
11-செப்-201310:41:24 IST Report Abuse
Venkat Pk வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Peru - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201310:32:39 IST Report Abuse
Peru கோவை கோபுரம்...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
11-செப்-201310:24:25 IST Report Abuse
pattikkaattaan ஒழுங்கான மீட்டர் கட்டணம் வசூலித்தால் பயணிகள் தைரியமாக ஆட்டோவில் கால் வைப்பார்கள் ... நகரப்பேருந்துகளில் தொங்கிக்கொண்டு போகவேண்டியதில்லை ...முதியோர்களும் , நோயாளிகளும் பயணம் செய்ய வசதியாக இருக்கும் .. மற்ற ஆட்டோ ஓட்டுனர்களும் மீட்டர் கட்டணம் வசூலித்தால், வெட்டியாக ஆட்டோவை நிறுத்தி வைத்துக்கொண்டு எவன் மாட்டுவான் என்று காத்திருக்க வேண்டியதில்லை ... மும்பை போன்ற நகரங்களில் மீட்டர் கட்டணம் போக மீதி பணம் ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி கொடுக்கிறார்கள் .. உங்கள் சிறந்த சேவையை வரவேற்கிறோம் ..
Rate this:
Share this comment
Cancel
siva - Chennai,இந்தியா
11-செப்-201309:49:09 IST Report Abuse
siva இதுபோன்ற விசயங்களை நாம் கண்டுகொள்வதோ அல்லது பாராட்டுவதோ கிடையாது. ஆனால் அவர் சரியில்லை இவர் சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை என்று குறை சொல்ல மட்டும் தெரியும். வாழ்த்துகள் உறுப்பினர்களே உங்கள் குழுவின் செயல்பாடு பாராட்டத்தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.