தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் பந்தாட்டம்: மத்திய-மாநில அரசுகளின் குழப்ப முடிவு| Dinamalar

தமிழ்நாடு

தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் பந்தாட்டம்: மத்திய-மாநில அரசுகளின் குழப்ப முடிவு

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் பந்தாட்டம்: மத்திய-மாநில அரசுகளின் குழப்ப முடிவு

மதுரை:தேசிய அடையாள அட்டை விவகாரத்தில், மத்திய-மாநில அரசுகளின் முரண்பாடான முடிவுகளால், மக்கள் பந்தாடப்படுகின்றனர். இதனால், காஸ் சிலிண்டர் பெறுவதில் இருக்கும் சிக்கல் எழும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், "தேசிய அடையாள அட்டை' வழங்க, மத்திய அரசு முடிவு செய்தது. "ஆதார் அட்டை' என்ற பெயரில், அதற்கான பணி, வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சிலர் அடையாள அட்டை பெற்றனர். இந்நிலையில், அதில் சில குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அப்பணிகள் நிறுத்தப்பட்டன.

2010ன் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, அரசே, அடையாள அட்டை பதிவு செய்யும் பணியில் இறங்கியது. அந்தந்த உள்ளாட்சிகள் மூலம், அதற்கான பணி நடந்து வருகிறது. அதற்கான விபரங்களை தெளிவுபடுத்தாததால், வங்கி பதிவில் பயன்பெற்றவர்கள், அரசு பதிவில் பங்கேற்கவில்லை. மத்திய அரசு திட்டம் என்பதால், மாநில அரசும், அதை தெளிவுபடுத்தவில்லை; மத்திய அரசும் தெளிவுபடுத்த முன்வரவில்லை. அதற்குள் முதற்கட்ட பதிவு பணிகள் நிறைவுபெற்றன.

இதற்கிடையில், கடந்த டிசம்பரில், முதல்வர் ஜெ., ""2014ம் ஆண்டிற்கான ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு, தேசிய அடையாள அட்டையின் பதிவு அவசியம்,'' என, அறிவித்தார். அதன் பிறகே, அடையாள அட்டை பதிவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. "வங்கிகள் மூலம் நடந்த பணியில், விரல் ரேகை, கருவிழி உள்ளிட்டவற்றை பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை, "ஆதார் எண்' ஆக பயன்படுத்தலாம்,' என அறிவித்த மத்திய அரசு, தற்போது நடந்து வரும் அரசின் பதிவுப் பணியில், வங்கிகள் மூலம் பெற்ற அடையாள அட்டையை கொண்டு சென்றால், வேறு பதிவுகள் எதுவும் இன்றி, அதிலுள்ள அடையாள எண் மட்டும் பதிவு செய்யப்படும் என்றும்; அதன் மூலம், முந்தையை பதிவுகள், அரசின் "டேட்டாவில்' பரிமாறப்படும்,' என, அறிவித்தது.

இந்த அறிவிப்பை, மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்காததால், இன்று வரை, குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையில், "நுகர்வோர், தன் வங்கி கணக்கில், அக்.,31க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை மானிய விலையில் பெற முடியும்,' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. மதுரையில் இது அமல்படுத்தப்பட உள்ளது. இதில், மாநில அரசின் முடிவு என்னவென்று தெரியவில்லை.
ரேஷன் கார்டு, சிலிண்டர் என, அடுத்தடுத்து அத்யாவாசிய பொருட்கள் பயன்பாட்டை, தேசிய அடையாள அட்டையை சார்ந்து திணித்து வருவதால், அடையாள அட்டை பெறாதவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மக்கள் இவ்விஷயத்தில் குழப்பம் அடைய வேண்டாம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் ரசீது இருந்தால், கவலைப்பட தேவையில்லை. அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலங்களில், சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் இரண்டாம் கட்ட பணியில், மண்டலம் 3ன் பகுதிகள் நிறைவுபெற்றுள்ளன. பிற மண்டலங்களில் பணி நடந்து வருகிறது. விடுபட்டவர்கள், மண்டல பிரிவுக்கு சென்று, பதிவு செய்துள்ளலாம். தற்போது மண்டலவாரியாக நடக்கும் பணி, அக்., முதல் அந்தந்த மண்டலங்களில், நிரந்தரமாக நடக்க உள்ளது.

பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள், அன்றாடம் கவனிக்கப்பட உள்ளது. முதல்சுற்றில் பதிவு முடிந்து, அடையாள அட்டை கிடைக்காதவர்கள், htt://uidai.giv.in/check youraadharstatus.html, htt://portaluidai.gov.in/resdentportal/statuslink என்ற இணையதளத்தில், டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பதிவுப்பணியில் சிக்கலா?; எங்களுக்கு சொல்லுங்கள்மதுரையில், உங்கள் பகுதியில் தேசிய அடையாள அட்டை பதிவுப்பணி இன்னும் நடக்கவில்லையா? ஏதேனும் குளறுபடியா, அடையாள அட்டை பெறுவதில் சிரமமா? "தினமலர்' அலுவலகத்தை நீங்கள் தொடர்பு
கொள்ளலாம். இது தொடர்பாக செய்தி வெளியிட்டு, அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல தினமலர் தயாராக உள்ளது.
போன்: 0452-435 2505(காலை9.45 முதல் காலை 10.30 வரை),
மெயில்: mdureporting@dinamalar.in,
பேஸ்புக்: facebook.com/mdumadurai என்ற முகவரிகளில், உங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

செப்.,10 முதல் 16வரை பணிகள் நடக்கும் இடங்கள்

வார்டு இடம்
மாடக்குளம் மாடக்குளம் ஆரம்பப்பள்ளி,
(75வது வார்டு) பழங்காநத்தம்
நாவலர் சோமசுந்தர
பாரதியார் பள்ளி
பழங்காநத்தம் பழங்காநத்தம்
(76வதுவார்டு) நாவலர் சோமசுந்தரபாரதியார்
பள்ளி, மாநகராட்சி
மேல்நிலைப்பள்ளி
பொன்மேனி பிள்ளைமார் சங்க
(19வது வார்டு) மேல்நிலைப்பள்ளி
அரசரடி
ஒத்தக்கடை
(20வது வார்டு) ராஜம் வித்யாலயம் பள்ளி
பெத்தானியபுரம் பாத்திமாநகர்
(21வது வார்டு) மாநகராட்சி துவக்கப்பள்ளி
கோச்சடை கோச்சடை
(22வது வார்டு) புனிதஜான் மெட்ரிக் பள்ளி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suganeshwaran G - madurai,இந்தியா
12-செப்-201321:51:59 IST Report Abuse
Suganeshwaran G தமிழ்நாட்டின் தலைஎழுத்து ஆதார். இந்த குளறுபடிகளை தவிர்க்க நிரந்தர அலுவலகம் அமைத்து பதிவு உள்ளவர்களை (WORKING STAFFS) மட்டும் பணி அமர்த்தி அவர்கள் மூலம் இந்த பணியை செய்யலாம். இவர்கள் தாசில்தார் அவர்களின் கீழ் பணி புரிய வேண்டும்......
Rate this:
Share this comment
Cancel
Jagannathan B - New York,யூ.எஸ்.ஏ
12-செப்-201303:14:47 IST Report Abuse
Jagannathan B அமைச்சரே சொல்லிவிட்டார் பாராளுமன்றத்தில் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக்கூடாது அப்படி செய்தால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று. ஏன் இந்த கட்டாயம்?
Rate this:
Share this comment
Cancel
Siva - chennai,இந்தியா
11-செப்-201316:22:08 IST Report Abuse
Siva ஆதார் உண்மையில் ஒரு நல்ல திட்டம், நம்ம நாட்டுக்கு தாமதமாய் வந்துருக்கு. இதை 100% முடித்தால், தப்பு செய்வது கஷ்டம் அதான் அரசியல் திருடர்கள் இதை எதையாவது சொல்லி தாமதப்படுத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
k.kubendran - Madurai  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201311:14:14 IST Report Abuse
k.kubendran ஏன் இந்த குளறுபடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை