கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூடவலியுறுத்தி அக்.2ல் தொடர் முழக்க போராட்டம்| Dinamalar

தமிழ்நாடு

கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூடவலியுறுத்தி அக்.2ல் தொடர் முழக்க போராட்டம்

Added : செப் 11, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

வள்ளியூர் : கூடன்குளம் அணு மின் நிலையத்தை மூடவலியுறுத்தியும், பேராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தியும் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கூடன்குளம் அணுஉலையை மூடவலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை போராட்டக்காரர்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி 757வது நாளான நேற்று இடிந்தகரையில் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையிலும் கடந்த ஆண்டு செப்.10ம் தேதி அணுஉலையை முற்றுகையிடும் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகள் வீதி தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்தும், நேற்று பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்க தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி இடிந்தகரையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் உரிமை இயக்க தலைவரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான உதயகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் போது இறந்த மணப்பாடு, அந்தோணிஜான், இடிந்தகரை சகாயம், ரோஸ்லின், கூடன்குளம் ராஜசேகர் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி, தமிழ் தேச பொது உடைமை கட்சியின் தலைவர் மணியரசன், திராவிட விடுதலை கழக குளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தை கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், தமிழ் தேச மக்கள் கட்சி பொது செயலாளர் தமிழ்நேயன், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ், முகிலன், மில்டன், ராஜலிங்கம், பூ உலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பபெறுங்கள் என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வலிறுத்தி கேட்டுக்கொண்ட பிறகும் தமிழக அரசு பாராமுகமாக இருப்பதை கைவிட்டுவிட்டு உடனடியாக அந்த வழக்குகளை திரும்ப பெறவேண்டும், அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஆதரவு கட்சிகளின் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் துறை இயக்குனர் ஆகியோரை வரும் 17ம் தேதி சந்தித்து போராடும் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெறுமாறு ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா தலைமையில் மனு கொடுப்பது என்றும் வரும் அக்.2ம் தேதி மகாத்மாகாந்தி பிறந்த நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கூடங்குளம் அணுஉலையை உடனே மூடவேண்டும், மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பபெறவேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்முழக்க போராட்டம் நடத்துவது என்று தீர்மானித்தனர். இந்த இரங்கல் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளும் வகையில் இடிந்தகரை மற்றும் சுற்றுக்கிராம பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை, மேலும் இடிந்தகரை, கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குழி ஆகிய ஊர்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
11-செப்-201317:24:08 IST Report Abuse
ganapathy எல்லா பய வீட்டுக்கும் மின்சாரத்தை நிறுத்தி தமிழக அரசு போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மின்சாரம் இல்லை என்றால் குண்டி கழுவ கூட உங்களுக்கு தண்ணி கிடைக்காதே, எதுக்குயா கூப்பாடு போடறீங்க. கிறிஸ்தவ சபையினர், பிரான்சில் அணு மின்சாரம் அதிகமா தயாரிக்கிறது அங்க பொய் கூவுங்களேன் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Thamotharan - Chennai,இந்தியா
11-செப்-201312:15:48 IST Report Abuse
Nagarajan Thamotharan காங்கிரஸ் எப்போதுமே போலி மதசார்பற்ற தன்மையை பின்பற்றி வருகிறது. மைனாரிட்டி மத வாதத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பாதுகாப்பை இன்று வரை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது. உள்நாட்டு தீவிரவாதம் ,இந்தியாவின் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டம் , குண்டு வெடிப்பு இது போன்ற நாட்டின் அமைதிக்கு குந்தகம் விழவித்த / பொருளாதரத்தை சீரழிக்கின்ற செயல்கள் எல்லாம் போலி மதவாதத்தால் மைனாரிட்டி மத அமைப்புகளுக்கு காங்கிரஸ் கொடுத்த சலுகைகளால் ஏற்பட்டது என்பதை ஆளும் மத்திய அரசு மனதில் கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
11-செப்-201307:48:15 IST Report Abuse
mark கரண்ட் கட் ஆக போவது உறுதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை