தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ. 135 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்| Dinamalar

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரூ. 135 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருநெல்வேலி : தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் 8 ஆஸ்பத்திரிகள், 196 டிஸ்பென்ஸரிகளுக்கு பல்வேறு வசதிகளுக்கு கடந்த ஆண்டு இ.எஸ்.ஐ.சி., சார்பில் 135 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது என நெல்லை இ.எஸ்.ஐ.சி., ஆஸ்பத்திரி திறப்பு விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் பேசினார். நெல்லை வண்ணார்பேட்டையில் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.15 ஏக்கர் பரப்பில், 50 படுக்கைகள் வசதியுடன் இ.எஸ்.ஐ.சி., ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் நவீன தொழில்நுட்ப வசதிகள், உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த 1.5 லட்சம் தொழிலாளர்கள், குடும்பத்தினர் என 5.60 லட்சம் பேர் பயன் பெறவுள்ளனர். இந்த ஆஸ்பத்திரி விரைவில் 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்தப்படவுள்ளது. ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ.சி., துணை மண்டல அலுவலகத்திறப்பு விழா நேற்று நடந்தது. எம்.பி., ராமசுப்பு தலைமை வகித்தார். ஆஸ்பத்திரி, துணை மண்டல அலுவலகத்தை திறந்து வைத்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் பேசியதாவது, ""10 மாதங்களுக்கு முன்பு நான் இத்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். இந்த ஆஸ்பத்திரி கட்டுமானப்பணிகளை விரைவுப்படுத்த எம்.பி., ராமசுப்பு தொடர்ந்து வலியுறுத்தினார். 3 மாதங்களுக்கு முன்பு இங்கு ஆய்வு செய்த போது சில சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தேன். உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து பணிகளை துரிதப்படுத்தி தற்போது ஆஸ்பத்திரி திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 லட்சம் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் என ஒரு கோடி பேர் இ.எஸ்.ஐ., திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர். நெல்லை, சென்னை கே.கே.நகரில் தலா ஒரு ஆஸ்பத்திரி, மாநில அரசு சார்பில் 8 ஆஸ்பத்திரிகள், 196 டிஸ்பென்சரிகள் உள்ளன. ஆரம்பக்கால மருத்துவப்பரிசோதனைக்கு மாநில அரசு, இரண்டாம் கட்டம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி பரிசோதனைக்கு மத்திய அரசு என தலா 50 சதவீத பொறுப்பு இரு தரப்புக்கும் உள்ளது.தமிழகத்தில் 800 கோடி ரூபாய் இ.எஸ்.ஐ.,க்கு அளிக்கப்படுகிறது. ஆனால் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மட்டும் பணிகள் நடக்கிறது என அமைச்சர் பச்சைமால் பேசினார். இது மத்திய அரசின் தவறு கிடையாது. திட்டங்களுக்கு மதிப்பீடு அளித்து விண்ணப்பித்தால் உரிய நிதிஒதுக்கீட்டில் நிறைவேற்ற தயாராக உள்ளோம்.

இங்கு 70 டிஸ்பென்ஸரிகளுக்கு மட்டும் சொந்தக்கட்டடம் உள்ளது. மற்றவைகளுக்கு உரிய நிலங்களை கலெக்டர் மூலம் தேர்வு செய்து அளித்தால் சொந்தக்கட்டடம் கட்ட தயாராக உள்ளோம். இந்த ஆண்டு சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லூரியில் சேர்க்கை துவங்கவுள்ளது. இதில் 60 சதவீதம் மாநில அரசுக்கு ஒதுக்கப்படும். 15 சதவீதம் மத்திய அரசுக்கும், 20 சதவீதம் இ.எஸ்.ஐ., திட்ட தொழிலாளர்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளது. கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் நடக்கிறது. அந்த கல்லூரி அடுத்த கல்வியாண்டு செயல்படத்துவங்கும். அயனாவரத்தில் 600 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி, பி.ஜி., மருத்துவக்கல்வி நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருப்பூர், ஸ்ரீபெரும்புதூரில் தலா 100 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்படவுள்ளது. கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. 4 ஆஸ்பத்திரி கட்டுமானப்பணிகள் 3 மாதங்களில் துவங்கும். முக்கூடல் பீடித்தொழிலாளர் ஆஸ்பத்திரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அரசின் 8 ஆஸ்பத்திரிகள், 196 டிஸ்பென்சரிகளுக்கு கடந்த ஆண்டு 135 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருந்து, உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு கோரும் வசதிகளை செய்துதர தயாராக உள்ளோம்'' இவ்வாறு அவர் பேசினார்.ஆஸ்பத்திரி ஆப்பரேஷன் தியேட்டரை திறந்து வைத்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால் பேசிய போது, ""தமிழகத்தில் 1955ம் ஆண்டு முதல் இ.எஸ்.ஐ., திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30 மாவட்டங்களில் இ.எஸ்.ஐ., மூலம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். 10 ஆஸ்பத்திரிகள், 196 டிஸ்பென்ஸரிகள் மூலம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். பிராஞ்சேரி, தக்கலை, மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.தமிழகத்தில் இருந்து 800 கோடி ரூபாய் இ.எஸ்.ஐ.,க்கு வழங்கப்பட்டு வருகிறது. எனினும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. ஆஸ்பத்திரி கட்டடம் உள்ளிட்ட தேவைகளுக்கு திட்ட அறிக்கை தயாரித்து இ.எஸ்.ஐ.,க்கு அளித்துள்ளோம். உரிய வசதிகள் செய்துதர வேண்டும். தொழிலாளர்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்'' என்றார்.

மருத்துவக்கண்காணிப்பாளர் ஜங்பங்கி வரவேற்றார். எம்.பி., தங்கவேலு, எம்.எல்.ஏ., மைதீன்கான், மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், துணை மேயர் ஜெகநாதன், கவுன்சிலர் வண்ணை கணேசன், இ.எஸ்.ஐ., மண்டல அலுவலக இயக்குனர் மணி, துணை மண்டல அலுவலக இயக்குனர் (பொறுப்பு) கேசவதாஸ், டில்லி செயற்பொறியாளர் அகர்வால், மாநில மருத்துவ ஆணையர் மகேஷ், துணை இயக்குனர்கள் பைசோன் ஞானராஜ், அருள்ராஜ், வேலு, தினேஷ்குமார், ஓய்வு பெற்ற அதிகாரிகள் கருணாநிதி, சொக்கலிங்கம், கணபதிசாமி, டாக்டர்கள், பணியாளர்கள், கட்சிப்பிரமுகர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தேசிய கட்டுமானக்கழக பொது மேலாளர் சர்மாவிற்கு அமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் பரிசு வழங்கினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.