அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் கோவையில் அதிரடி அமல்!: "ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் சேவைக்கு மக்கள் வரவேற்பு| Dinamalar

தமிழ்நாடு

அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் கோவையில் அதிரடி அமல்!: "ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் சேவைக்கு மக்கள் வரவேற்பு

Added : செப் 11, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை:சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு, தமிழக அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம், இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால், அந்த கட்டணத்தை கோவையில் அதிரடியாக நடைமுறைப்படுத்தி, தமிழகத்துக்கே முன்னோடியாக விளங்குகின்றனர், சில ஆட்டோ டிரைவர்கள். இவர்களது முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கோவை நகரில் 125 ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன; 12 ஆயிரத்து 500 ஆட்டோக்கள் இயங்குகின்றன. மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க, கோவை மாவட்ட நிர்வாகம், இதற்குமுன் பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது; ஆட்டோ தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பில்லாததே இதற்கு காரணம். இந்நிலையில்,
நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு, சென்னையில் இயங்கும்
ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்து ஆக.,25ம் தேதி அறிவித்தது.
குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் (1.8 கி.மீ.,) 25 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் 12 ரூபாய் (ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20 ரூபாய்), காத்திருப்பதற்கு 5 நிமிடத்துக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் (இரவு 10:00 மணி முதல், அதிகாலை 5:00 மணி வரை) நிர்ணயித்துள்ள கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்கவும் அரசு அனுமதித்துள்ளது. இக்கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அரசின் இந்த கட்டண நிர்ணயத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் உள்ளது.
இந்த ஆட்டோ மீட்டர் கட்டணம், இன்னும் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படவில்லை. கோவை நகரிலுள்ள ஆட்டோ தொழிற்சங்கங்கள், ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சமாக 30 ரூபாய், கூடுதல் கி.மீ.,க்கு 15 ரூபாய் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கோவையில் மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க அரசு உத்தரவு வந்ததும், நடவடிக்கை துவங்கும் என, கலெக்டர் கருணாகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில், சென்னைக்கு அறிவிக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை கோவையில், "ஆட்டோ ஆட்டோ டிரைவர்கள் குழு'வினர் அமல்படுத்தியுள்ளனர்.
கோவை நகரிலுள்ள புரூக்பாண்ட் ரோடு, தேவாங்க மேல்நிலைப்பள்ளி ரோடு சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 30 ஆட்டோக்கள் இயங்குகின்றன. அனைத்து ஆட்டோவிலும் முன்பக்கமும், பின்பக்கமும் "ஆட்டோ ஆட்டோ' என, ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். ஆட்டோக்களில்
"டிஜிட்டல்' மீட்டர் பொருத்தியுள்ளனர்.ஆட்டோ "சவாரி' துவங்கியதும், மீட்டரை "ஆன்' செய்கின்றனர். முதலில் 1.8 கி.மீ., தொலைவு கடந்ததும், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20
ரூபாய் கட்டணம் கூடுதலாகிறது. குறைந்தபட்ச கி.மீ., கடந்ததும், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் போது, "வெயிட்டிங் கவுன்டிங்' காட்சிக்கு வருகிறது. மீட்டர் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் தெரிவிக்க"டிரைவர்கள் கண்காணிப்பு குழு' மொபைல்போன் எண்களை ஒட்டியுள்ளனர்.அரசு அறிவிக்கும் முன்பே, டிரைவர்களே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
"ஆட்டோ டிரைவர்கள் குழு' தலைவர் இப்ராகீம் கூறியதாவது: "கால் டாக்சி' வரவால், ஆட்டோ தொழில் நலிந்து விட்டது. அரசு அறிவித்த மீட்டர் கட்டணம் நியாயமாக இருந்ததால் அமல்படுத்தியுள்ளோம். ஆட்டோ பயணம் செய்வோர், மீட்டர் பொருத்திய ஆட்டோக்களை தேர்வு செய்தால், எல்லா ஆட்டோக்களும் மீட்டர் கட்டணத்துக்கு மாறிவிடுவார்கள். கடந்த மூன்று நாட்களாக மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுகிறோம். இனிமேல், மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிப்போம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போனில் மிரட்டுகிறார்கள். மீட்டர் கட்டண ஆட்டோ என்பதற்கான "ஸ்டிக்கர்' ஒட்ட முடியவில்லை. "மிரட்டல்' பற்றி போலீசுக்கு தெரிவித்துள்ளோம். மக்களின் ஆதரவும், அரசின் பாதுகாப்பும் எங்களுக்கு தேவை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இப்படித்தான் இருக்கணும்!"ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் அறிவுரைகள்:டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும்ஆட்டோ பயணம் துவங்கியதும் மீட்டரை இயக்க வேண்டும்பெயர் மற்றும் பதிவு எண் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும்பயணிகளிடம் தரக்குறைவாக பேசக்கூடாதுவாகனத்தின் ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்குடிபோதையில் ஆட்டோ ஓட்டக்கூடாதுபயணிகளின் பார்வைக்கு படும்படி டிரைவரின் மொபைல்போன் எண்ணையும், புகார் தெரிவிப்பதற்கான எண்களையும் எழுதியிருக்க வேண்டும்போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, அறிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vettaiyan - chennai  ( Posted via: Dinamalar Windows App )
12-செப்-201302:45:39 IST Report Abuse
vettaiyan சென்னையில் இது அமல் படுத்தப்படடால் it will be superb
Rate this:
Share this comment
Cancel
Guruprasad - Doha  ( Posted via: Dinamalar Windows App )
12-செப்-201301:24:07 IST Report Abuse
Guruprasad My opinion that coimbatore has the most honest, good, nice people has become true once again. I respect these auto drivers and all xoimbatoreans.
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
11-செப்-201317:46:32 IST Report Abuse
ganapathy எந்த தொழிலும் நல்ல தொழில் தான். அதற்க்கு உண்டான தர்மத்தை வகுத்து அதன் படி நடந்தால் பல படி உயரலாம்
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
11-செப்-201316:06:51 IST Report Abuse
Skv நானும் கோவிலே தொண்டாமுத்தூர்லெ இருக்கேன் அங்கேந்து 11/2கிலொமீட்டர் தொலைவுலே இருக்கு எங்கள் இருப்பிடம் அதுக்கு ஆட்டோக்காரா 50ருவாய் வாங்குராக . நடக்கும் தொலைவுதான் ஆனாலும் வயதானவா நடக்க சிரமம் வழிலே ஒரு டாஸ்மாக் வேறு அதைபாத்தாலே பயம் ஒரு பாலம் கடக்கணும் அதுலே கண்ட கழ்ஜிவுகளை கொட்டி ஒரே நாத்தம் பஸ் கிடைத்தால் 3ரூவதான் அடுத்த நிறுத்தம் சிறப்பு பேருந்துலே 7ருவாதான் கிடைக்காது காத்துருக்கணும் 25 ருவானால் போய்வர வசதியாவே இருக்கும் வருமா
Rate this:
Share this comment
Cancel
mohan - kovai  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201312:25:55 IST Report Abuse
mohan எல்லோருக்கும் முன் மாதி்ரி கோவைதான் உடல்உறுப்புதானம் முதல் துவக்கம் இங்குதான்
Rate this:
Share this comment
Cancel
dinesh - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201310:42:27 IST Report Abuse
dinesh yenga ooru nu summava !!
Rate this:
Share this comment
Cancel
senthil - chennai  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201306:12:27 IST Report Abuse
senthil வாழ்க வளர்க. இதை அனைவரும் பின்பற்றலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை