இன்ஸ்பெக்டரிடம் மேயர் ஆவேசம்: குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி| Dinamalar

இன்ஸ்பெக்டரிடம் மேயர் ஆவேசம்: குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் அதிர்ச்சி

Updated : செப் 11, 2013 | Added : செப் 11, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், போலீஸ் இன்ஸ்பெக்டர், ரவிச்சந்திரனிடம், மேயர் சவுண்டப்பன் ஆவேசம் காட்டியதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேலம் கிச்சிப்பாளையம், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவர் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், மேயர் சவுண்டப்பனை சந்தித்து கூறியதாவது: கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தாதுபாய்குட்டை, புலிக்குத்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிச்சிப்பாளையத்தில் இருந்து அம்மாப்பேட்டைக்கு செல்லும் சாலை மோசமாக இருப்பதை கண்டித்து, கடந்த மாதம், மனித நேய மக்கள் கட்சியினர், சாலையில் மரம் நடும் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்த மாநகராட்சி அதிகாரிகள், ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், பணி எதுவும் துவங்கப்படவில்லை. இதுப்பற்றி பொதுமக்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றனர், என்றார். மேயர் சவுண்டப்பன், இன்ஸ்பெக்டர் ரவிசந்திரனிடம் ஆவேசமாக கூறியதாவது: சாக்கடை வசதிக்காக, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ரோடு போடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இரவு, பகலாக பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில மிரட்டலுக்காக, நீங்கள் வந்து புகர் செய்ய வேண்டாம். பிரச்னை செய்வதாக மிரட்டல் விடுத்தால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். உங்கள், உயர் அதிகாரிகளிடம், அதைப்பற்றி தெரிவியுங்கள். இவ்வாறு கூறினார். சீரழிந்த சாலையை சீரமைப்பது குறித்து மேயர் எதுவும் தெரிவிக்காமல், இன்ஸ்பெக்டரிடம் ஆவேசமாக பேசியதால், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201308:29:20 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்ஸ்பெக்டரும் இந்த நாட்டின் பிரஜைதான்.. அவர் கேள்விக்கு பதில் சொல்லவேண்டியது மேயரின் தலையாய கடமை.. அவரால் செய்யமுடியவில்லை என்றால் ராஜினாமா செய்துவிட்டு போகவேண்டியதுதானே..
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
11-செப்-201308:26:36 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN மேயருக்கு எவ்வளவோ நடைமுறை சிக்கல்கள் இருக்கலாமென்றாலும், அதிகாரிகளிடம் அவர்களின் மனக்குறைகளையும் கேட்கும் பக்குவம் இருக்கவேண்டும். இது மேயருக்கு மட்டும் இல்லை, அனைத்து மக்களுக்கும் பொருந்தும். கோபம் அறிவை மங்கச் செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201308:20:19 IST Report Abuse
kumaresan.m " ஆளும் கட்சி அரசியல்வாதி அல்லவா அதனால் தான் சவுண்டு விடுகிறார் இருக்கட்டும் ,பதவி காலம் முடிந்தவுடன் பம்புவார்
Rate this:
Share this comment
Cancel
ayyappan - erode  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201307:48:48 IST Report Abuse
ayyappan சவுண்டப்பன் நீங்கள் மேயரா இல்ல டீ கட நாயரா....
Rate this:
Share this comment
Cancel
sathis_kk - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201306:35:01 IST Report Abuse
sathis_kk சவுண்டப்பன் சவுண்ட் விடறார்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை