40,000 MW of hydroelectric projects approved in the near future: Minister | 40,000 மெகா வாட் நீர் மின் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல்:மத்திய மின் துறை இணை அமைச்சர் | Dinamalar
Advertisement
40,000 மெகா வாட் நீர் மின் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல்:மத்திய மின் துறை இணை அமைச்சர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வரும் 40 ஆயிரம் மெகா வாட் நீர் மின் திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய மின் துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா கூறினார். நாடு முழுவதும் 95 நீர் மின் திட்டங்கள்:டில்லியில் நேற்று நடந்த மாநில மின் துறை அமைச்சர்களின் ஏழாவது கூட்டத்தில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசுகையில்,"நாடு முழுவதும் 95 நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு மத்திய மின்சார ஆணையம், மத்திய நீர் ஆணையம், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவை ஒப்புதல் வழங்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு நீர் மின் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அரசு 50 சதவீதம்:ஒரு மின் விநியோக நிறுவனம் மூலம் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மாநிலங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். சில மாநிலங்களில் உள்ள மின் பகிர்மான நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைப் பெருக்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதன்படி, மின் பகிர்மான நிறுவனங்களின் கடனை மாநில அரசுகள் 50 சதவீதம் ஏற்கும்.தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளன. ஆனால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த வாய்ப்பைப் பரிசீலித்து வருகின்றன' என்றார் ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - utkottai,இந்தியா
11-செப்-201310:37:14 IST Report Abuse
Murugan 40000 வாட்ஸ் கண்டிப்பா. பல லட்சம் கோடி திட்டம். இந்திய அரசே சொந்தமாக அதற்கான நிறுவனங்களையும் பணியாளர்களையும் உருவாக்கி வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு சிறு பொருளும் இறக்குமதி இல்லை என கொள்கை முடிவுடன் செயல்பட்டால் பல லட்சம் கோடிகளை நாட்டுக்காக சேமிக்கலாம். அரசியல்வாதிகளின் கமிஷன் போககூட. ஆனால் இதைவிட நேரடியாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கே டெண்டர் கொடுத்தால் அதிக மற்றும் ஒரே முறை கமிஷன் பட்டுவாடா என்ற கொள்கை முடிவு தான் நம்ம அரசியல்வாதிகள் எடுப்பார்கள். நாட்டுக்கு நல்லது செய்ற மாதிரியே கெட்டதா செய்வாங்க. நீர் ஆதாரங்கள் சுருங்கி வரும் நேரத்தில் இப்படி ஒரு நீர் மின் திட்டம் தேவையா ? தேர்தல் வருவதால் மாற்று திட்டங்களை சிந்திக்க நேரம் இல்லையா ? காற்று மற்றும் சூரிய சக்தி மின் திட்டங்கள் தங்கு தடை இல்லா நீண்ட கால மின் விநியோகத்துக்கு வழி வகுக்குமே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-செப்-201308:37:38 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் நீர் மின்சக்தி எளிமையானதும் பாதுகாப்பானதும் கூட...இதில் கழிவுப்பொருள் மேலாண்மை என்பது குறைவு..நீர் மிகு மற்றும் சுழற்சி அதிகமான வட மாநிலங்களில் இதனை அதிகம் நிறுவலாம்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201308:31:52 IST Report Abuse
Baskaran Kasimani இது தேர்தல் நேரம். உணவு பாதுக்காப்பு மற்றும் மின் திட்டங்கள் - வெறும் மாயையே. தமிழகம் மின்சாரம் இல்லாமல் எவ்வளவோ சிரமப்பட்ட பொழுது மத்திய அரசு ஒரு மண்ணும் செய்யவில்லை. இப்பொழுது மட்டும் எப்படி இப்படி பொய் சொல்ல முடிகிறது?
Rate this:
1 members
1 members
6 members
Share this comment
Cancel
hindustani - beijing,சீனா
11-செப்-201308:28:26 IST Report Abuse
hindustani காங்கிரஸ் திட்டங்களுக்கு பஞ்சம் இல்லை ... எலக்சன் வரும் போது திட்டங்கள்...
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201308:12:31 IST Report Abuse
Srinivasan Kannaiya நம்ம ஆள்கள் அடிக்கடி காமெடி பண்ணுவதில் நிகர் அவர்கள்தான்... மழை எங்கே பெய்கிறது...தண்ணீர் எங்கே உள்ளது.. முதலில் அனைத்து நீர்நிலைகளை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வந்துவிட்டு இந்த திட்டத்தை பற்றி நினைக்கலாம்..
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
11-செப்-201308:09:20 IST Report Abuse
செல்வ.கமலகண்ணன் எதோ சொல்லணும்னு தோணுறத சொல்லுறிங்க. அதுல உங்களால முடிஞ்சதா அள்ளிக்கிறிங்க
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
11-செப்-201308:03:06 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN இதைச் சொல்ல இத்தனை நாட்களா? தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெரும்பாலும் முடங்கியபிறகு என்ன வந்து என்ன பலன்? போன விற்பனை வருமா? நீதி மன்றங்களில் தான் நீதி வழங்க கால தாமதம் ஆகிறது என்றால் அடிப்படைத் தேவையாக உள்ள மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதிலுமா? இந்த அரசியல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு விளங்கிடும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
11-செப்-201307:57:08 IST Report Abuse
ரத்தினம் வரவேற்க வேண்டிய திட்டங்கள். ஆனால் இதை வைத்து காங்கிரசுக்கு ஓட்டு போட்டு விடக்கூடாது. ஏனெனில் 4 வருடங்கள் தூங்கி விட்டு தேர்தல் சமயத்தில் அறிக்கை விடுகிறார்கள். மேலும் ராகுல் போன்ற அரை வேக்காடுகள் காவிரி கங்கை இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கடந்த 3 மாதங்களில் வட இந்தியா மொத்தம் வெள்ளக்காடாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் விவசாயம் சாவின் விளிம்பில் உள்ளது. குடிநீருக்கு கூட வழி இல்லை. காங்கிரஸ்காரன், அவனுடைய கொள்ளை கூட்டாளி திமுககாரன் துட்டு அடிக்காமல் திட்டம் செயல்பட மக்களாகிய நாமும் நேர்மையான அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும். .
Rate this:
1 members
0 members
55 members
Share this comment
Cancel
வகுளாபரணன் - berlin,ஜெர்மனி
11-செப்-201307:48:42 IST Report Abuse
வகுளாபரணன் இப்போதானப்பா இந்திய பெருநகரங்களில் தண்ணீர் பிரச்னை... தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது... இப்படியெல்லாம் புள்ளிவிவரங்களை அடுக்கிவிட்டு.... 40000 mw நீர்மின்சார திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு என்றால் என்ன அர்த்தம்....இல்லாத தண்ணீரில் உங்களுக்கு மட்டும் எப்படிப்பா மின்சாரம் கிடைக்கும்... நிதி ஒதிக்கீடு எதற்கு நீருக்கா அல்லது நீ...ருக்கா... நல்லா அரசியல் விவசாயம் பண்றீங்கப்பா... பருவம் தவறாமல் நல்ல மகசூல்(மகாவசூல் ) பார்கறீங்க...
Rate this:
1 members
2 members
31 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-செப்-201307:48:08 IST Report Abuse
villupuram jeevithan தமிழத்தில் இல்லாத திட்டமாயிற்றே, அப்போ தாராளமாக நிதி ஒதுக்கீடு கிடைத்துவிடும்.
Rate this:
8 members
0 members
12 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்