வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஆந்திர கடலோர பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி ப்ளஸ் 2 மற்றும் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும், திருவள்ளூரில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கனமழை நீடிக்கும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இடியுடன் கனமழை பெய்து வருவதால் தி.நகர், சேப்பாக்கம், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் சுற்று வட்டாரங்கள் மட்டுமின்றி திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், அரணி, சேய்யாறு சுற்றுப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழை நாளை வரை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக லண்டனில் இருந்து சென்னை வரும் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
11-செப்-201315:56:34 IST Report Abuse
LAX எல்லாத்துக்கும் அரசையே குறை சொல்லிக்கிட்டு இருக்கும் மக்களே, இந்த அரசின் அறிவிப்புபடி, மக்களில் எத்தனைபேர் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்துள்ளீர்கள்? "ஆமா.... சும்மா வேற வேல இல்ல?" அப்புடீன்னு எத்தனை பேர் அலட்சியமாக இருக்கிறீர்கள்? இப்போது இந்த வசதி செய்ய செலவாகுமே என யோசித்து செய்யாமல் இருந்துவிட்டு, பிறகு நிலத்தடிநீர் குறைந்த பின், தண்ணீரை விலைக்கு வாங்க இதைவிட அதிகம் செலவாகுமே? கூட்டிக் கழிச்சு பாருங்க..
Rate this:
Share this comment
Cancel
james arul rayan - chennai ,இந்தியா
11-செப்-201311:51:59 IST Report Abuse
james arul rayan எங்காவது வெள்ளம் வருவது போல் இருந்தால் திரு.ரமணன் அறிவுரைப்படி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தால் உடனே மழை நின்று வெள்ளம் வருவது தடுக்கப்பட்டு விடும்.
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
11-செப்-201311:04:53 IST Report Abuse
Ashok ,India வடக்கு வாழ்கிறது .....தெற்கு தேய்கிறது. சத்தியமா தென் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை இல்லை. அன்னை மீனாக்ஷி மனம் குளிர வருண ஜபம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
BalaMurugan - New Delhi,இந்தியா
11-செப்-201312:25:47 IST Report Abuse
BalaMuruganதயவு செய்து தூத்துக்குடி sterlite ஆலையை உடனடியாக மூட வேண்டும்....................
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-செப்-201310:48:20 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இறைவனின் அருட்கொடையை வீணாக்காது சேமிப்போம்..
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
11-செப்-201309:55:47 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar மழை நீரை சேமிக்க மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்து அரசு கிணறு தள பகுதிக்குள் சேமித்தால் அந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் முழுமை பெறும்..,கழிவு நீர் கால்வாய்கள் மூலம் செல்லும் மழை நீரை தடுத்து சேமிக்க அரசு சிறப்பாக திட்டமிடல் வேண்டும்.- பூபதியார்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201309:46:36 IST Report Abuse
kumaresan.m " வானிலை iyakkunar ramanan அவர்கள் intha mazhaiyai patri ethuvum சொல்லவில்லையா ஏன் ???
Rate this:
Share this comment
P.GOWRI - Chennai,இந்தியா
11-செப்-201310:12:04 IST Report Abuse
P.GOWRI2 நாட்கள் மழை இருக்கும் என்று mr . ரமணன் சொன்னார்....
Rate this:
Share this comment
LAX - Trichy,இந்தியா
11-செப்-201310:43:37 IST Report Abuse
LAXகாலை டிவி செய்திகளில் சொன்னார்கள்....
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-செப்-201309:43:39 IST Report Abuse
kumaresan.m " கடந்த ஆண்டு நடந்த விபத்துகளை போன்று இந்த ஆண்டு நடைபெறாமல் தடுக்க நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக நீண்ட நாட்கள் வெட்டப்பட்டு மூடப்படாமல் உள்ள குழிகள் மற்றும் பாதாள சாக்கடைகள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201309:06:24 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலதான்..., எல்லா மழைநீரையும் சேமிக்க வசதிகள் இல்லை.. எல்லாம் எவ்வித புண்ணியமும் இல்லாது கடலைத்தான் சென்று அடையும் மாநில அரசு இலவசங்கள் கொடுப்பதில் காட்டும் ஆர்வத்தை இந்த மழை நீர் சேகரிப்பதில் காட்டலாம் இல்லையா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்