E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மோடி பிரதமர் வேட்பாளர் : அத்வானியை சமாதானப்படுத்த முயற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

11 செப்
2013
14:04
பதிவு செய்த நாள்
செப் 11,2013 11:55

புதுடில்லி: பா.ஜ.‌ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடிய அறிவிக்கும் முயற்சியில் அத்வானி அதிருப்தியுடன் இருப்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சி நடக்கிறது. பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிப்பதில் பா.ஜ. மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியி்ல் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்வானி அதிருப்தி

2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ. தயாராகி வருகிறது. இதையடுத்து பா.ஜ.வின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நியமிக்கப்பட்டார். இதற்கு ஆரம்பம் முதலே, மூத்த தலைவராக அத்வானி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். திடீரென தனது கட்சி பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் அத்வானியை சமதானப்படுத்தியதையடுத்து தனது முடிவினை வாபஸ் பெற்றார். இந்நிலையில் பிரதமர் ‌வேட்பாளர் யார் என்பதனை உறுதியாக அறிவிக்க பா.ஜ. மேலிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் மோடியை அறிவிக்க சிலர் முழு ஆதரவு அளித்தும், சிலர் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.

சமாதானப்படுத்த முயற்சி

இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், அதற்கு முன்னதாகவே மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அத்வானி, சுஷ்மா உள்ளிட்டோர் எதி்ரிப்பு தெரிவிக்கின்றனர். இதையடுத்து தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், முன்னாள் தேசிய தலைவர் நிதின்கட்காரி ஆகியோர் அத்வானியை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். எனினும் அத்வானி பிடிவாதமாக இருப்பதாலும், 5 மாநில சட்டசபை தேர்தல்களை சந்திக்க இருப்பதாலும், வரும் 19-ம் தேதிக்கு முன்னதாகவே மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, அத்வானியின் சம்மதத்தினை எதி்ர்பார்‌க்கின்றனர். இதன் பின்னர் ராஜ்நாத்சிங், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

அத்வானி-ராஜ்நாத் சந்திப்பு

இதற்கிடையே பா.ஜ.தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், மூத்த தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
12-செப்-201309:22:40 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இப்போது மோடி இந்த பாட்டை பாடிக்கொண்டிருப்பார்.."காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி"
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
12-செப்-201302:42:31 IST Report Abuse
John Shiva   U.K அத்வானி இரண்டு தேர்தலில் தோற்ற பிறகும்,விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்று அடம் பிடிக்கும் அரசியல்வாதி .சுப்ரமணிசுவாமயும் அத்வானியும் பிஜேபி யை அழிக்கப் போறாங்க
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Sanghimangi - Mumbai,இந்தியா
11-செப்-201314:08:20 IST Report Abuse
Sanghimangi எல்லோரும் சேர்ந்து UPA-3'ஐ ஆட்சியில் அமர வைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறதே... கடந்த இரண்டு முறையாக வெற்றி பெற முடியாத அத்வானி இன்னமும் தாத்தாவை போல் நாற்காலிக்காக அடம் பிடிக்கிறாரே...
Rate this:
70 members
1 members
118 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201313:32:21 IST Report Abuse
Pugazh V யாரை என்னவாக அறிவித்தாலும் தமிழகத்தில் பா ஜ க பூஜ்ஜியம் தான். 40 இடங்களிலும் அதிமுக தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்ட பின், மோடியை ஆதரிக்கும் யாருமே ஆளும் கட்சிக்குத் தானே வாக்களிக்கப் போகிறார்கள்? ஆனாலும் வாசகர்கள் கருத்துக்களுக்குக் குறைவே இல்லை.
Rate this:
66 members
3 members
113 members
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
11-செப்-201313:32:11 IST Report Abuse
Narayan குடும்பம் அல்லது ஒரு கொடுங்கோல் தலைவரின் கீழ் இல்லாமல் உண்மையான ஜனநாயக கட்சி பாஜக ஒன்றே. இந்த உட்கட்சி சண்டை அமெரிக்க primaries போன்றது. ஒபாமா ஹில்லரி கட்சிக்குள் சண்டை போட்டாலும் பிறகு ஆட்சி வந்தவுடன் சேர்ந்து பங்காற்றியது போல் இங்கேயும் நடக்கும்.
Rate this:
112 members
1 members
77 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201313:29:40 IST Report Abuse
Pugazh V அத்வானி மூத்தவர். மோடிக்கு இன்னும் காலம் இருக்கிறது. இந்த முறை அத்வானி பிரதமர் ஆகட்டுமே. நல்ல ஆட்சி தந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் பா ஜ க ஜெயிக்கும். அப்போது மோடி பிரதமர் ஆகட்டும். இப்போது மோடி முதல்வர் பதவியிலாவது இருக்கிறார். அத்வானிக்கு ஒரு பதவியும் இல்லை. பார்லி. எதிர்க் கட்சித் தலைவர் பதவி கூட சுஷ்மாவிடம் தான் இருக்கிறது. இதெல்லாம் சரி, தேர்தலுக்குப் பின் ஆதரவு அளிக்கப் போகும் மாநிலக் கட்சிகளிடம் , மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உத்தரவு வாங்கியாகிவிட்டதா?
Rate this:
78 members
3 members
151 members
Share this comment
Rangan Srinivasan - chennai,இந்தியா
12-செப்-201300:15:39 IST Report Abuse
Rangan Srinivasanமக்கள் மோடியை விரும்புகிறார்கள் ,அத்வானிக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. காங்கிரஸ் கொள்ளையர்களை தோற்கடித்தாக வேண்டும்...
Rate this:
3 members
1 members
3 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-செப்-201313:25:46 IST Report Abuse
Srinivasan Kannaiya அத்வானி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதே... பார்த்தாலே தெரிய வில்லையா..
Rate this:
7 members
0 members
69 members
Share this comment
Cancel
vinoth - chennai,இந்தியா
11-செப்-201313:21:41 IST Report Abuse
vinoth சொந்த கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத இவர்கள் வெற்றி பெற்றாலும் இவர்களுக்குள்ளேயே அடித்து கொள்வார்கள், அப்புறம் மக்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பார்கள், நாட்டை எப்படி முன்னேற்றுவார்கள்?
Rate this:
26 members
3 members
172 members
Share this comment
Cancel
vinoth - chennai,இந்தியா
11-செப்-201313:07:56 IST Report Abuse
vinoth மோடி பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் அல்ல. மூத்த தலைவர்கள் யாருகாவது கொடுக்கலாம்.
Rate this:
58 members
2 members
155 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201313:04:13 IST Report Abuse
Baskaran Kasimani எப்படியோ காங்கிரஸ் வீழ்ந்தால் சரி..
Rate this:
28 members
1 members
59 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.