தேசிய கண்தான தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய கண்தான தினம்

Added : செப் 08, 2010 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.


ஏன் கண்தானம்: நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல். இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 1 கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.


யார் கண்தானம் செய்யலாம்: ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது.


செய்ய வேண்டியவை: கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gs - khartoum,சூடான்
08-செப்-201017:52:35 IST Report Abuse
gs மரணம் அடைந்தவரை உத்தேசித்து அவர் பிள்ளை நிறைய தானங்கள் செய்யவேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது. பொன், நிலம், அன்னம், கன்றுடன் கூடிய பசு, காளை, எள், பஞ்சு,வெல்லம், உப்பு, படுக்கை, விசிறி, வேஷ்டி, பலகை, குடை, செருப்பு, பூஜை பொருட்கள், சமையல் பொருட்கள். மற்றும் பிற.இதனுடன் சேர்த்து கண் தானம் அவசியம் செய்யலாம். என் தகப்பனார் வைத்யநாதன் ஐயர் அவர்களின் கண்ணை சங்கர நேத்ராலயவுக்கு தானமாக அளித்தோம். மரணம் துக்கத்தை தந்தாலும் இந்த தானம் என் தகப்பனுக்கு நல்ல கதியை - புண்ணியத்தை தரும் எனபது என் நம்பிக்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X