Missiles of the world: A look at countries' arsenals | அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது

Updated : செப் 15, 2013 | Added : செப் 15, 2013 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது

பாலசோர்: இந்தியா தயாரித்த அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவு பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சீனாவை மிரட்டும் அளவிற்கு பலம் படைத்ததாகும். இது போன்ற அக்னி 5 சோதனை கடந்த 2 ஆண்டுகளில் இன்று 2வது முறையாகும். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற 5 நாடுகளில் மட்டுமே இது போன்ற அணு ஆயுதம் சுமந்து தாக்கு ஏவுகணையை கொண்டுள்ள நாட்டில், இந்தியாவும் 6 வது நாடாக இடம் பிடிக்கிறது.


இதுவரை குறைந்த தூரம் மட்டுமே செல்லக்கூடிய அக்னி தற்போது 5 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது அக்னி-5. இந்தியாவும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதம் தன்வசம் வைத்திருக்கிறது என்பது பாதுகாப்பு துறையில் ஒரு கூடுதல் மைல்கல் . இது 50 டன் எடை கொண்டது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வெடிபொருட்களை தூக்கி செல்லும் திறன் படைத்தது, 17 மீட்டர் உயரம் கொண்டது. இன்றைய அக்னி-5 சோதனை உலக அளவில் இந்தியாவை நிமிரச்செய்துள்ளது என்பது மிகை அல்ல.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.GOWRI - Chennai,இந்தியா
16-செப்-201310:13:25 IST Report Abuse
P.GOWRI வாழ்த்துகள் விஞ்ஞானிகளுக்கு.
Rate this:
Share this comment
Cancel
Ranjith Kumar - Tirunelveli,இந்தியா
15-செப்-201318:37:06 IST Report Abuse
Ranjith Kumar தாக்கும் ஏவுகனையை விட, ஏவுகனைகளை தாக்கி அழிக்கும் ஏவுகனைதான் இந்தியாவிற்கு அவசியம் தேவை.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-செப்-201316:50:18 IST Report Abuse
g.s,rajan வாழ்த்துக்கள் விஞ்ஞானிகளே , ,இந்தியா எப்போது வளர்ந்த நாடாகும்? ,மற்ற வளர்ந்த நாடுகளை விட கிட்டத்தட்ட நாற்பது வருடம் பின்னால் உள்ள நாம் எப்போது முன்னேறுவோம் ???சொல்லுங்கள் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X