Onion price danger for Central government | வெங்காய விலை... மத்திய அரசுக்கு உலை...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய விலை... மத்திய அரசுக்கு உலை...

Updated : செப் 23, 2013 | Added : செப் 21, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை மக்களுக்கு தேவையான பெல்லாரி (பெரிய) வெங்காயம், மகராஷ்டிரா மாநிலம் புனே, சோலாப்பூர் பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவிலிருந்தும் லாரிகளில் வருகிறது. தினமும் கோவைக்கு 450 டன், பொள்ளாச்சிக்கு 360 டன், திருப்பூருக்கு 270 டன் மேட்டுப்பாளையத்துக்கு 100 டன் கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜனவரியில் கிலோ 12 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், இரு மாதங்களாக "ராக்கெட்' வேகத்தில் உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த மார்க்கெட்டில் கிலோ 65 ரூபாயாகவும், சில்லரை விலையில் 85 ரூபாயாகவும் உள்ளது.உற்பத்தி குறைவால் விலை உயர்ந்துவிட்டதாக சிலர் தெரிவித்தாலும், மொத்த வியாபாரிகளின் பதுக்கலும் ஒரு காரணமென கூறப்படுகிறது.

சின்ன வெங்காயம்: கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான சின்ன வெங்காயம், செஞ்சேரிமலை, பொங்கலூர், பல்லடம், அன்னூர், சுல்தான்பேட்டை, உடுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம், தாளவாடி, மைசூர், சாம்ராஜ்நகர், குண்டல்பேட் பகுதியில் இருந்து வருகிறது. கோவை மொத்த மார்க்கெட்களுக்கு தினமும் 80 டன், பொள்ளாச்சிக்கு 80 டன், மேட்டுப்பாளையத்துக்கு 20 டன், திருப்பூர் மாவட்டத்துக்கு 80 டன் வருகிறது. நடப்பாண்டின் துவக்கத்தில், கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் இருந்து விலை எகிறியது. தற்போது, கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை, தரத்துக்கு ஏற்ப விற்கப்படுகிறது.வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்கிறது. பதுக்கல் தடுக்க, மொத்த வியாபாரிகளின் வீடு, குடோன்களில், வருமான வரித்துறை ரெய்டு நடத்தியும், பயனில்லாமல் போய்விட்டது. வெங்காய விலை உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கிலோ ரூ.10க்கும், 20க்கும் கூவி, கூவி விற்கப்பட்ட பெரிய வெங்காயம், இன்று, 100 ரூபாயை எட்டிவிட துடிக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் அதையும் தாண்டி, அட்டகாசம் புரிந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. "விலை எகிற, விளைச்சல் குறைவே காரணம்' எனக் கூறினாலும், பதுக்கலை மறைத்துவிட முடியாது. இந்த விலையேற்றமானது ஏழை, நடுத்தர மக்களை மலைக்க வைக்கிறது. நிலைமை இப்படியே போனால், இன்னும் கொஞ்ச நாளில், "காஸ்ட்லி' உணவுப் பட்டியலில், வெங்காயமும் இடம் பெற்றுவிடும். ஒரு வேளை நாட்டில், "வெங்காயம் கிடைப்பதே அரிது; வாங்கவே முடியாத உணவுப்பொருள்' என்ற தட்டுப்பாடான நிலை ஏற்பட்டால், எப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழும், அதுபற்றிய செய்திகள், நாளிதழ்களில், எந்த மாதிரியான தலைப்புகளில் வெளியாகும் என்பதை, "தினமலர்' வாசகர்களின் கற்பனைக்கே இங்கு விட்டுவிடுகிறோம்.

ஐஸ்வர்யா திருப்பூர்:ஆனியன் ஆம்லெட் தராததால்ஓட்டல் ஊழியருக்கு அடி,உதை!

சரஸ்வதி பொள்ளாச்சி:வெங்காய வியாபாரிக்குதுப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு!

ராஜேஸ்வரி பொள்ளாச்சி : ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு கிராம் தங்கம் இலவசம்

செல்வி பொள்ளாச்சி : வெங்காயம் வாங்க வட்டியில்லா கடன்!வங்கி பொதுமேலாளர் பேட்டி

கனகராஜ் பெ.நா.பாளையம் : வரதட்சணையாக வெங்காயம் கேட்டு சித்ரவதை!புதுமாப்பிள்ளையை சுற்றிவளைத்தது போலீஸ்

லட்சுமிபேரூர்: "நிறைவேறியது நீண்ட நாள் ஆசை!'ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டவர் உருக்கம்

நித்யா கோவை:ஓட்டுக்கு ஒரு கிலோ வெங்காயம்! தேர்தல் பிரசாரத்தில் திடீர் மோதல்

காஞ்சனா பேரூர் :ஆனியன் கேட்டு பெண்கள் ஆவேசம்அமைச்சர் தப்பியோட்டம்

மல்லிகா அன்னூர்:ஆம்னி பஸ்சில் அதிகாரிகள் ரெய்டு 2 கிலோ வெங்காயம் பறிமுதல்

கவிதா திருப்பூர்: துவங்கியது வெங்காய கண்காட்சி!கோவையில் லட்சம் பேர் திரண்டனர்

நமது சிறப்பு நிருபர்

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gmk1959 - chennai,இந்தியா
22-செப்-201315:23:49 IST Report Abuse
gmk1959 வெங்காயத்திற்கு மானியம். கோடிகணக்கில் மத்திய அரசு அறிவிப்பு >>>>>>>>>>>>>>>>>>>>>>>
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
22-செப்-201310:29:47 IST Report Abuse
g.s,rajan விவசாயம் இந்தியாவில் என்றோ செத்து விட்டது இந்தியா மற்றொரு எதியோப்பியாவாகிறது இன்னொரு ,சொமாலியாவாகிறது என்பதுதான் நிதர்சனம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-செப்-201309:12:20 IST Report Abuse
Srinivasan Kannaiya கவலை பட வேண்டியவங்கள் பதவியை எப்பிடி தக்கவைக்கலாம் என்று கணக்கு போட்டுகொண்டு இருக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X