மதுரை- 2030; மோனோ ரயில் மறந்தது ஏனோ?| Dinamalar

மதுரை- 2030; மோனோ ரயில் மறந்தது ஏனோ?

Updated : செப் 24, 2013 | Added : செப் 24, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

"மோனோ' ரயில் திட்டம் ஒன்றும், மதுரைக்கு புதிதான திட்டமல்ல. ஏற்கனவே, மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, மதுரையில் மோனோ ரயில் பாதை அமைப்பதற்கான அனைத்து ஆய்வுகளையும் முடித்து விட்டது. காலமாற்றம்,ஆட்சி மாற்றம் என, பல மாற்றங்கள் வந்ததால், மதுரைக்குமாற்றம் வரவில்லை.முன்பு நடந்த மோனோ ரயில் ஆய்வில், மாட்டுத்தாவணி முதல் அசோக்நகர் வரையிலான 11 கி.மீ., தூரத்திற்கு ஒரு வழித்தடமும், பெரியார் பஸ் ஸ்டாண்ட் முதல் தெப்பக்குளத்தைஅடுத்த சவுராஷ்டிரா கிளப் வரையிலான 6 கி.மீ., தூரத்திற்கு மற்றொரு வழித்தடமும், மோனோ ரயிலுக்கு அமைக்கலாம் என, வரைபடமும் தயாரானது.
அப்போதே பணி தொடங்கியிருந்தால், இந்நேரம் பாலத்தின் மீது நாம் பறந்து கொண்டிருப்போம். திட்டத்தை முன்வைக்கும் அதிகாரிகள், அதை பின்பற்ற தவறுவதே, இது போன்ற அற்புத திட்டங்கள், நம்மை வந்தடையாமல் போனதற்கு காரணம்.

"மதுரைக்கு மோனோ ரயில் திட்டத்தை கட்டாயம் நிறைவேற்றுவேன்...', முன்பிருந்தவர்களும் சரி, தற்போதைய மேயர் ராஜன் செல்லப்பாவும் சரி, மதுரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி இது. கேட்க நன்றாக இருந்தாலும், பார்வைக்கு இதுவரை வந்தபாடில்லை; அதற்கான முகாந்திரமே தொடங்கப்படவில்லை
மதுரையின் இன்றைய நிலையை பாருங்கள்; நெருக்கடி, இடையூறு இல்லாதபோக்குவரத்திற்கு வழியில்லை. ஷேர் ஆட்டோக்களுக்கே, மதுரையின் ரோடுகள் தாரைவார்க்கப்பட்டதைப்போல் ஆகிவிட்டது. டூவீலர்களில் பயணிப்போர், ஒவ்வொரு நாளும், நகர்வலம் நகரும் தேர் போல தான் ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. இவற்றிக்கெல்லாம் ஒரே தீர்வு மதுரைக்கு ரோட்டை பயன்படுத்தாத, இன்னொரு போக்குவரத்து வசதி...அது "மோனோ' ரயில்.
பாலத்தில் பயணிக்கும் மோனோ ரயில்களால், தரைவழிப் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் வராது. அதிகரித்து வரும் சாலை விபத்துக்கள் குறையும்.


மதுரைக்கு ஏற்றது மோனோ ரயில்:

வி.நீதிமோகன், தொழிலதிபர், மதுரை: மதுரை நெருக்கமான நகரம். இங்கு, "மெட்ரோ ரயில்' கொண்டு வர இடவசதி இல்லை. "மோனோ ரயில்' திட்டம் ஏற்றது. மும்பையில் மோனோ ரயில் திட்டப்பணிகள் துரிதமாக நடக்கிறது. மதுரையிலும் வெகுசீக்கிரம் மோனோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும். தென் மாவட்டங்களில் தொழில் முதலீடு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலங்களை கையகப்
படுத்த விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு நியாயமான இழப்பீடு தொகையை வழங்கி திட்டத்தை,விரைவாக அமல்படுத்த வேண்டும். காஸ் குழாய் பதிப்பு, மோனோ ரயில், நதிநீர் இணைப்பு போன்ற தொலைநோக்கு திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. மக்களுக்கான பயனுள்ள திட்டங்கள் எதுவாக இருந்தாலும் வரவேற்க வேண்டும்.


"ஓ.கே.' என்றால் 2 ஆண்டுதான்:

மோனோ ரயிலை சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் அமைக்க ஏற்கனவே அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் என்ற அந்தஸ்தில், முதலுரிமையை சென்னை பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட பணிஎன்றால், அடுத்த நிலையில் இருக்கும் பெரிய மாநகராட்சியான மதுரைக்குதான். சென்னைப் போல், ஆண்டுக்கணக்கில் பணிகளை இழுத்தடிக்கும் வேலைக்கு வாய்ப்பில்லை. காரணம், மதுரையின் அமைப்பு. சென்னை மெட்ரோ ரயில் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, "அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளில், மதுரையில் மோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்றலாம். ஏற்கனவே அதற்கான, வரைபடங்கள் கூட தயாரித்து வைத்துள்ளோம். அரசு "ஓகே' என்றால், இரண்டாவது ஆண்டில் ரயில் பறக்கும்,' என்றார்.


மதுரைக்கு வரும் வாகனங்கள் 4 லட்சம்:


* மதுரையில் மாதம் 120 கார்கள், 1800 டூவீலர்கள் பதிவு செய்யப் படுகின்றன.
* மாதந்தோறும் 2 ஆயிரம் வாகனங்கள் அதிகரிக்கின்றன.
* வெளியூர்களில் இருந்து மதுரைக்கு தினமும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை 4 லட்சம்.
* அதிக விபத்து நடக்கும் பகுதி: பைபாஸ் ரோடு.
* போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதி: காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், கோரிப்பாளையம்
சந்திப்புகள்.
* மொத்த வாகனங்களின் எண்ணிக்கை
(2013 செப்.,19 வரை)
கார்கள் - 25,000
டூவீலர்கள் - 1.40 லட்சம்
ஆட்டோ - 12,200
லாரி - 10,000
வேன்கள் - 3,000
பஸ்கள் - 1,650
மினி பஸ்கள் - 175


1 கி.மீ., ரூ.170 கோடி:

மோனோ ரயில் திட்டம் நிறைவேற்ற, ஒரு கி.மீ.,க்கு ரூ.170 கோடி செலவாகும். மொத்தமுள்ள 16 கி.மீ.,க்கு ரூ.2,720 கோடி செலவாகும். மத்திய, மாநில அரசுகள், தனியார் பங்களிப்புடன், இத்திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கான முயற்சியை, மாநகராட்சி மேயர், எம்.எல்.ஏ.,க்கள் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் ஜெ.,வும், "மோனோ' ரயில் திட்டத்திற்கு உறுதியளித்துள்ளார்.


கேட்கலாம்... பார்க்கலாம்!:

மேயர் ராஜன் செல்லப்பாவிடம் அவரின் தேர்தல் வாக்குறுதி பற்றி கேட்டபோது தற்போது சென்னையில் பணி நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான்,அடுத்த பகுதி குறித்து முடிவெடுப்பார்கள். அதுதொடர்பான சில அதிகாரிகளிடம் கேட்டபோது, "மதுரையின் கட்டமைப்பு, மோனோ ரயிலுக்கு ஏற்காது,' என்றனர். ரோடுகள் குறுகியதாக இருப்பதாகவும் கூறினர். ஆனாலும், மோனோ ரயில் திட்டம் குறித்து, வல்லுனர்களிடம் கருத்து கேட்டு, அதன் பின், திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X