வலை வீசி...| Dinamalar

வலை வீசி...

Updated : செப் 24, 2013 | Added : செப் 24, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

"நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு' இந்த பஞ்சபூதங்கள் எப்படி முக்கியமோ, அதுபோல்தான், "பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள், இன்றைய இளசுகளுக்கு இன்றியமையாததாகிவிட்டது. சில குறைகளை தவிர்த்து, தகவல் பரிமாற்றத்திலும், கருத்து பரிமாற்றத்திலும் முன்னோடி ஊடகமாய் மாறிவிட்ட சமூக வலைதளங்கள், பெரும்பாலும் சுமந்து நிற்பது, கற்பனைக்கு எட்டாத நகைச்சுவையைதான்.
வயதிற்கு அப்பாற்பட்டு, அனைவரும் கலாய்க்கும் சமூக வலைதளத்தில், நாம் வலை வீசியபோது, சிக்கிய சிறுமீன்களை இந்த வாரம் உங்களுக்குத் தருகிறோம். வரும் வாரங்களில், நீங்களும் எங்கள் "பேஸ்புக்' முகவரியை பின் தொடர்ந்தால், உங்கள் கற்பனையை, பிறர் கண் முன் கரையேற்றுவோம். வாருங்கள் வலைவீச நேரமாச்சு தூக்குவோம்...
"நான் ஒரு திறந்த புத்தகம்,'' -மன்மோகன்

facebook.com/shan karan: "ஈய்யம், பித்தளை, பழைய புத்தகத்துக்கு பேரிச்சம் பழம்!'
"சிரியாவை தாக்க அனுமதிக்க கூடாது,''-கருணாநிதி
facebook.com/boopathy murugesan: "என்ன... தலைவர் உலக அரசியல் எல்லாம் பேசுறாறு, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க!'
தமிழகத்தில், 90 லட்சம் பட்டதாரி இளைஞர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர்
facebook.com/uma karthik: "எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்னு, கணக்கு சொல்லுங்க பார்ப்போம்!'
"ரூ.1க்கு அரிசி, ரூ.100க்கு வெங்காயம்; திராவிட கட்சிகளின் அரசியல் வெற்றி'
facebook.com/palanikumar: "எவ்வளவு "அட்வைஸ்' பண்ணாலும் மக்கள் திருந்தமாட்டாங்க, இலவசமா இனிமா கொடுத்தால் கூட, கூட்டம் அலைமோதும்'
4 ஆண்டுகளில், 41 முறை பெட்ரோல் விலை உயர்வு
facebook.com/tamil selvi: "இப்பவே கண்ண கட்டுதே... இன்னும் எம்புட்டு கூட்டுவாங்களோ...'
நேத்து போன் கால் வந்துட்டேயிருந்துச்சு மச்சி, ஆனால் யாரும் பேசலே.
facebook.com/uma maheswaran rajendran: "ஒரு வேளை மன்மோகனமா இருக்குமோ!'
ரூ.60 லட்சம் சம்பாதித்தால்தான், இனி "கார் லோன்' - ஸ்டேட் பாங்க் அப் இந்தியா
facebook.com/alagar murugesan: அப்போ... எத்தனை லட்சம் சம்பாதிச்சா, "பெட்ரோல் லோன்' தருவீங்களாம்...'
"நடுவுல கொஞ்சம், நடிகர் சங்க தலைவரை காணோம்?'
facebook.com/sakthivel pillai: அவரு, ஏதாவது பனியன் விளம்பரத்துல நடிக்க போயிருப்பாரு பாஸ்!'
எங்களை தொடர...facebook.com/dmrmadurai

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X