Jegan begins indefinite fast | ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி உண்ணாவிரதம் துவக்கினார் ஜெகன்| Dinamalar

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி உண்ணாவிரதம் துவக்கினார் ஜெகன்

Updated : அக் 07, 2013 | Added : அக் 06, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆந்திரா,ஜெகன், உண்ணாவிரதம்,Jegan, indefinite fast

ஐதராபாத் : ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமந்திரா பகுதியில், இரண்டாவது நாளாக, நேற்றும், 'பந்த்' தொடர்ந்தது. இதனால், சீமந்திரா பகுதியில் உள்ள, 13 மாவட்டங்களிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.

ஆந்திராவை, இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை, இரண்டு நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது. இதனால், தெலுங்கானா அல்லாத, சீமந்திரா பகுதியில் உள்ள, 13 மாவட்டங்களிலும், மத்திய அரசுக்கு எதிராக, போராட்டங்கள் வெடித்துள்ளன.


போராட்டம்:

பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும், போராட்டத்தில் குதித்துள்ளனர். போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன.கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில், ஏராளமான பொதுமக்கள் திரண்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கு கூட, போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வன்முறை சம்பவங்களும், பரவலாக நடக்கின்றன. குறிப்பாக, சீமந்திரா பகுதிகளில் உள்ள, காங்., அலுவலகங்கள், போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. காங்., கொடி கம்பங்கள், வெட்டிச் சாய்க்கப்பட்டன. ஆந்திர மாநில காங்., தலைவர், சத்யநாராயணாவுக்கு சொந்தமான, வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும், அடித்து நொறுக்கப்பட்டன.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, சிரஞ்சீவி உள்ளிட்ட, மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமாவை ஏற்பது குறித்து, பிரதமர் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.


உண்ணாவிரதம்:

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐதராபாத்தில் உள்ள, தன் வீட்டின் முன், நேற்று காலையில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். அவருடன், அவரின் ஆதரவாளர்கள் பலரும், உண்ணாவிரதம் இருந்தனர். இதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.


சட்டப்பிரச்னைகள்:

ஜெகன் மோகன் கூறியதாவது:குற்றப் பின்னணி உடைய மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் அவசர சட்டத்தை வாபஸ் வாங்கியது போல், தெலுங்கானா தனி மாநில அறிவிப்பையும், மத்திய அரசு கைவிட வேண்டும்.இல்லையெனில், மத்திய அரசின் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.தனி மாநிலம் அமைப்பதில், பல்வேறு சட்டப் பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து ஆலோசிக்காமல், மத்திய அரசு, தேர்தல் ஆதாயத்துக்காக, அவசரமாக, தனி மாநில அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆந்திர மாநில சட்டசபையில், தீர்மானம் நிறைவேற்றாமல், ஒருதலைப்பட்சமாக, மத்திய அரசு, இந்த முடிவை எடுத்தது, தவறு.இவ்வாறு, ஜெகன் மோகன் கூறினார்.

இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும், போராட்ட களத்தில் குதித்துள்ளார். டில்லியில், நாளை முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கவுள்ளதாக, அவர் அறிவித்து உள்ளார்.


வெறிச்சோடியது திருப்பதி:

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்துக்கு, ஆன்மிக தலமான, திருப்பதியும் தப்பவில்லை. எப்போதும், பக்தர்கள் கூட்டத்தால், நிரம்பி வழியும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், போராட்டம் காரணமாக, பக்தர்கள் கூட்டம், சுத்தமாக குறைந்திருந்தது. பஸ் போக்குவரத்து முடங்கியிருப்பதால், திருப்பதி நகரமும், ஆள் நடமாட்டமின்றி, வெறிச்சோடி காணப்பட்டது. பிரம்மோற்சவம் துவங்கியுள்ள நிலையில், ஆந்திராவில் நடக்கும் போராட்டங்கள், பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன.

குற்றப் பின்னணி உடைய, மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் சட்டத்தை வாபஸ் பெற்றதுபோல், தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவையும், மத்திய அரசு, வாபஸ் வாங்க வேண்டும். இல்லையெனில், மத்திய அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர்

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-அக்-201315:55:18 IST Report Abuse
Malick Raja ஆந்திராவில் நடப்பது.. காழ்புணர்ச்சி ஒன்றே... தெலுங்கானா பிறவினை போராட்ட ஏற்பாடுகள் நடந்தபோது யாரும் கருத்து தெரிவிக்கவில்லை... பிரித்தவுடன் பூதாகரமாக வெடிக்க வைக்கிறார்கள்.. இதுதான் இந்தியர்களின் அரசியல்.. தெலுங்கானா வந்தே தீரும்..
Rate this:
Share this comment
Venkat Iyer - Mumbai,இந்தியா
07-அக்-201300:08:17 IST Report Abuse
Venkat Iyerபிரிப்பது என்ற முடிவு வந்தவுடன் தெலுங்கனா மக்கள் சொன்ன முதல் வார்த்தை தெலுங்கானா தவிர்த்த அரசு உழியர்கள் ஹைதராபாத் விட்டு வெளியேறவும். இதுதான் உண்மையான தெலுங்கானா பிரச்சனை. தெலுங்கானா பகுதி மக்களின் வேலைவாய்ப்பு பிற பகுதி மக்களால் பறிக்கப்படுகிறது. ஹைதராபாத் மட்டும்தான் வளர்ச்சி நன்கு அடைந்துள்ளதால் பிறபகுதி மக்களும் அதன் மீது கண் வைப்பது நியாயமே. எப்படி பார்த்தாலும் இது மற்ற பிரிவினை போல் (சத்தீஷ்கர் போல )எளிதல்ல .....
Rate this:
Share this comment
Cancel
Muthu - Maniyatchi,இந்தியா
06-அக்-201309:39:17 IST Report Abuse
Muthu இவன் சொத்தைக்காப்பாத்திகொள்ள நடிக்கிறான்
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
06-அக்-201301:43:35 IST Report Abuse
Sekar Sekaran ஒட்டுமொத்த ஆந்திராவையே குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது காங்கிரஸ். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. காங்கிரசின் ஓட்டு வேட்டைக்காக பிரித்த செயல் இப்போது காங்கிரசுக்கே பெரிய தோல்வியை தந்துவிடும் அளவுக்கு உள்ளது. ஆனாலும் பெரும்பான்மையினர் ஆந்திராவை பிரிப்பதில் உடன்பாடு கொள்ள தயாரில்லை என்பதை காணத்தான் செய்கின்றோம். ஆட்சி திறன் இல்லாத காங்கிரசின் தவறான முடிவால் மக்களுக்கு பெரும் துன்பம்தான். உறுதியான துணிச்சலான நடவடிக்கையை எடுக்கும் திறன் கொண்டோர் காங்கிரசில் காணவே முடியாது என்பதற்கு இதோ இந்த ஓர் உதாரணம் போதுமே..முடிவு பெறாத அடுத்த குழப்பமான நிலையில் நாட்டில் ஆந்திரா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X