தினம் தினம் புதுமைகளை புகுத்தி வாசகர்களுக்கு பல வசதிகளை அள்ளிக் கொடுத்து வரும் உங்கள் தினமலர் இணைய தளம் கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசித்து மகிழ புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆன்மிக இணைய தளங்களில் உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த பகுதியை வாசகர்கள் குடும்பத்தோடு பார்த்து, கோயில்களுக்கு நேரில் சென்று சுற்றிப்பார்த்த இனிய அனுபவத்தை பெறலாம்.
மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வாசகர்களை மகிழ்ச்சியடையச் செய்து வரும் தினமலர் இணைய தளம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய பகுதியில் முதல் கட்டமாக 37 கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களை நேரில் சென்று சுற்றிப்பார்த்த அனுபவத்தை தரும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு கோயிலின் சிறப்புகளையும், கோயிலில் இடம்பெற்றிருக்கும் சுவாமிகளின் சிறப்புகளையும் ஆடியோ மூலமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோயிலில் எந்த கோபுரம் எந்த இடத்தில் இருக்கிறது, மூலவர் எந்த திசையை நோக்கி இருக்கிறது, அதன் சிறப்பு என்ன, எத்தனை பிரகாரங்கள் உள்ளன, பிரகாரங்களின் சிறப்பு என்ன, பிரகாரங்களில் உள்ள சிலைகள், மண்டபங்கள் என எல்லா தகவல்களையும் சுற்றுலா வழிகாட்டியைப் போல ஆடியோ மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும் நம் கண் எதிரே இருக்கும் சுவாமி சிலையில் ஆரம்பித்து பிரகாரங்களை சுற்றுவது, கோபுர தரிசனம், கொடிமரம், மூலவர் அறை, உற்சவர் என அனைத்தையும் பார்க்கும் வசதி இந்த 360 டிகிரி கோணத்தின் மூலம் பார்த்து மகிழலாம்.
360 டிகிரி கோணம் பகுதி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தால், நுழைவு வாயில்கள், ஆடி வீதிகள், அம்மன் சன்னதி, சிவன் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், சுழலும் லிங்கம், பொற்றாமரை குளம் என முழு கோயிலையும் சுற்றிப்பார்த்து தரிசித்த அனுபவத்தைப் பெறலாம். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தால், பம்பா நதியில் தொடங்கி, 18 படிகள், கொடிமரம், கணபதி சன்னதி, சபரி பீடம், மஞ்சமாதா சன்னதி, கோயிலின் மேல் தோற்றம், வெளிப்புற தோற்றம் என சபரிமலைக்கே நேரில் சென்று வந்த ஆன்மிக அனுபவத்தை பெறலாம். இதேபோல இந்த பகுதியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கோயில்களையும் வாசகர்கள் முழுமையாக தரிசிக்கலாம்.
தினமலர் இணைய தளத்தில் ஆன்மிக பகுதியில் 18 விநாயகர் திருத்தலங்கள், 116 அம்மன் கோயில்கள், படல் பெற்ற 274 சிவாலயங்கள், 217 இதர சிவாலயங்கள், முருகனின் 71 கோயில்கள், 134 பெருமாள் கோயில்கள், 108 திவ்ய தேசங்கள், ஐயப்பனின் திவ்ய தரிசனம், 150 பரிகார கோயில்கள், 27 நட்சத்தி கோயில்கள், 25க்கும் மேற்பட்ட கோயில்களின் வீடியோ காட்சிகள், தல புராணங்கள், கோயில்களின் சிறப்புகள், 25,690 கோயில்களின் முகவரிகள், ஆண்டிற்கான பஞ்சாங்க குறிப்புகள், இறைவனை வழிபடும் முறை, விரதங்கள் இருப்பதற்கான வழிமுறைகள், ஹோமம் நடத்துவதற்கான காரணங்கள், பிறமாநில, வெளிநாட்டு கோயில்களும் அவற்றின் சிறப்பம்சங்களும், பக்திகதைகள் என ஏராளமான ஆன்மிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இப்போது பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக 360 டிகிரி கோணத்தில் கோயில்களை தரிசிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கோயில்களை 360 டிகிரி கோணத்தில் தரிசிக்கும் வசதி விரைவில் இடம்பெறவுள்ளது.
வாசகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தங்களது கோயில்கள் மற்றும் தங்களுக்கு தெரிந்த கோயில்கள் பற்றிய விவரங்களையும் புகைப்படங்களுடன் தினமலர்இணைய தளம் ஆன்மிக பகுதியில் இடம்பெறச் செய்யலாம். இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாசகர்கள் temple@dinamalar.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
360 டிகிரி கோணத்தில் கோயில்களை வலம் வருவது எப்படி? :
ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் கோயிலை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.
கம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.
கோயில்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
புண்ணிய தலங்கள் என்று சொல்லி கொள்ளவதை விட உண்மையான கடவுள் ஒருவர் உண்டு. அது யார் அவரை மட்டும் பாப்போம். தட்டீஸ் true god . புண்ணியதளங்கள் மனிதனின் சுய லாபத்துக்காக உருவாக்கபட்டவை
இந்து, இஸ்லாம், இயேசு என்ற மூன்று நதிகள் கலக்கும் கடல் தான் இறைவன். தினமலருக்கு இணை தினமலர் தான். வேறு எந்த செய்தி தாளிலும் இல்லாத புதுமை, செய்திகள் அனைத்தும் அருமை. உனது சேவைகள் நினைத்து நீர் பெருமை அடைகீர்களோ இல்லையோ நான் கண்ணீர் மல்கி பெருமை அடைகிறேன். தொடரும் உமது சேவை பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி ! A.J. ரமேஷ்-பஹ்ரைன்.
இன்று இந்த தளத்தைப் பார்த்தேன். வெளி நாட்டு தமிழர்கள் தான் இந்த தளத்தினைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப் பட்டு உள்ளது என்பது ஏற்க தக்கத்தல்ல. இங்கு தமிழகத்தில் இருப்பவர்களும் ஒரே நேரத்தில் பார்க்க வசதியாக உள்ளது என்பது தான் சரியானது.
i like dina malar for last two years eveybody have the desire to move around world but unale to if you can bring the video of all that you can really make people happy.
புதிய பகுதி 360 கோணம் கோயில்களின் தரிசனம் மிகவும் நன்றாக இருக்கு. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
கபாலி கோவிலின் தர்சனம் பார்த்தேன் ரோம்பனட்கள் பிறகு.
நன்றி.
டி.எஸ். ஸ்ரீராம் நங்கநல்லூர்.
மிக்க நன்றி. தீர்த்த யாத்திரை போக வேண்டும்
என்றிருந்த எங்களை தடுத்து நிறுத்தி உட்கார்ந்த இடத்திலிருந்தே கோயில்களை
தரிசனம் செய்வித்த தினமலர் இதழுக்கு கோடி புண்ணியம்.
1st thanks to DINAMALAR.
PLS GIVE IN ENGLISH IT USE FULL FOR OTHER THAN TAMILIANS. BECAUSE IM A TAMILAN I SENT TO MY COLLEAGUE. THEY ARE KANNADIAN & NORTH INDIAN ALSO. HE DOESN'T KNOW TAMIL.
SO PLS GIVE ENGLISH VERSION.
Dinamalar (Print Edition) The Mass,
Dinamalar (Digital Edition) The Boss
Ur team must make these pages to come when people search for these locations in google maps.
ஆசிரியருக்கு வணக்கம், அப்படியே கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லீம் தர்காக்கள் மற்றும் நமது வரலாற்று நினவு சின்னங்கள் இவைகளையும் சேர்த்து எங்கள் தினமலர் ஒரு நல்ல மத நல்லிணக்க பத்திரிக்கையாக வாழ வாழ்த்துகிறேன்.
நீங்கள் தந்திருக்கும் எல்லா கோயில்களையும் யான் முன்னூற்றி அறுபது டிகிரி கோணிலே சுற்றி பார்த்தேன். உண்மையாவே நேரிலே எல்லா கோயிலுகலேயும் சுற்றி பார்த்த மன நிம்மதியும் ஆறுதலும். மதுரை மீனாட்சி பழனி முருகன் சபரி மலை ஐயப்பன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்களை யான் நேரிலேயே போயி பார்த்து வந்துள்ளேன். ஆனால் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடி வரையிலும் தான் பார்த்துள்ளேன். அதற்கே நிறைய நேரம் ஆயிடுத்து. முழுதும் சுற்றி பார்க்க நாள்கள் தேவை படும். சில நிமிடங்களிலே எல்லா கொயிலேயும் நன்றாக சுற்றி சுற்றி பார்த்து கோல்மயிர் கொண்டுள்ளது ரொம்பவும் பாராட்ட தக்கது. இன்னும் கோயில்களின் கும்பாரமான தமிழ் நாடு கோயில்களும் கேரளா கோயில்களும் காண்பித்தால் ரொம்ப நன்றாக இருக்கும். வாழ்க தினமலர் முயற்சி.
i am reading ur paper regularly.last saturday [24/07/10].you have puplished one matter about gravity.physical scientist ERIK stated that gravity is a illusition one. so science should have travelled towards new dimention to find out black space .that space is occupied in entire univrse .this statement is already explained by our great sages like thaiyumanavar,vallar,vethathrimaharishi we proud our selves about this matter thank for ur puplication
திருமிகு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி.தெய்வத் திருத்தலங்களை வீட்டில் உள்ள அனைவரும் பார்க்க ஒரு வரபிரசாதமாகும். நான் கண்ட கோயில்களை மறுபடியும் நேரில் கண்ட உணர்வுகள் தோன்றுகின்றன.வாசகர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்து செல்வதுபோல் உள்ளது.மீண்டும் நன்றி வணக்கம்....
இந்நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது. கோவில் தர்ஷின ஆவலர்களுக்கு இது ஒரு வரபிரசாதம். நான் என் அலுவலகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். எல்லாம் நலமாக நிகழ இறைவனை பிராத்திக்கிறேன். என் தோழி ஸ்ரீதேவிவும் கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
திருமிகு தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி.தெய்வத் திருத்தலங்களை வீட்டில் உள்ள அனைவரும் பார்க்க ஒரு வரபிரசாதமாகும். நான் கண்ட கோயில்களை மறுபடியும் நேரில் கண்ட உணர்வுகள் தோன்றுகின்றன.வாசகர்கள் அனைவரையும் சுற்றுலா அழைத்து செல்வதுபோல் உள்ளது.மீண்டும் நன்றி வணக்கம்.
Very good presentation.Typical Dinamalar standard
.Will you cover temples like Pittsburg Shri. Venkateswara temple in USA,Murugan temple in London..M,ariamman Temple in Singapore,Kadirkamam Kandan shrine in Srilanka and other indian temples?
திருவாளர் கிருஷ்ணமுர்த்தி அவர்களுக்கு,
நன்றிகள் பல. இப்படி அருமையாகச் சிந்திக்கும் மூளை வரவேண்டியவர்களுக்குத்தான் வரும். மிக, மிக அருமை! விவரிக்க வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. DISCOURAGE பன்னுவோரைப் புறம் தள்ளுங்கள். மேலும், புதுக்கோட்டை, GOKARNESWARAR கோயிலும் (மிக அருமையான puraana, சமீப காலம்வரைச் சரித்திரப் பின்னணியும் கொண்ட மிகப் பிரம்மாண்டமான குடைவரைக்கோயில்), அங்கிருந்து மிக அருகில் உள்ள பெருங்களூர் மலயாமருங்கர், உருமனார், மங்களாம்பிகா கோயில் - மூன்றுக்கும் ஒரே பின்னணிப் புராணக் கதை - பிரபலமான தஞ்சை கணபதி அக்ரஹாரம் பிள்ளையார் கோயில் இவற்றையும் தயவுடன் இந்த அற்புத லிஸ்டில் சேர்த்து உங்கள் கிரீடத்தில் இன்னும் சில வைரங்களைச் சேர்த்துக் கொள்ளவும்!
தங்கள் உண்மையுள்ள,
sudhadasan
I had wonderful and exhilarting experience while going through you 360 degrees presentation of the temples.
I was born and brought up in Madurai and has gone to Meenakshitemple innumerable times. Your presntation and accompanying descriptions were marvellous. May god give all his blessings to you to continue this wonderful work.Please cover some more temp-les like temples in trichy etc.
தினமலர் ஆசிரியர் (உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி)அவர்களுக்கு வணக்கம்,
கடவுள் சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு நேர்த்தியான வீடியோ காட்சிகளையும் வெளியிடுவதில் தினமலருக்கு நிகர் தினமலர்தான். பணத்தை மட்டும் சிந்திக்காமல் தமிழக மக்களின் கலாசாரத்தை காக்கவும் அவர்களிடம் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தினமலரின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் தமிழக முதல்வர் தமிழக மக்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் துரோகம் இழைத்து வருவது தெரிந்தும் தாங்கள் பணத்திற்கோ ,பதவிக்கோ அல்லது உயிருக்கோ பயந்து தமிழக முதல்வருக்கு ஆதரவாக தமிழகத்தை ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கவைக்க துணையாக தொடர்ந்து இருந்து வரும் தங்களின் கடவுள் பக்தி மட்டும் எப்படி உண்மையானதாக இருக்கும்? ஆதங்கத்துடன் சுரேஷ். துபாய்.
ரொம்ப நன்றி. 360 டிகிரி கோயில் கோணம் உண்மைலேயே சிறந்த பகுதி. தினமலர் மிக சிறப்பான செய்திகள் கொண்ட பத்திரிகை. வாழ்க உங்கள் முயற்சி. எல்லா கோயில்களும் நன்றாக உள்ளது. திருத்தணி, ஸ்ரீரங்கம், திருப்பதி- இவற்றை இந்த பகுதியில் அளிக்கவும்.
அன்பார்ந்த தினமலர் ஆசிரியர் அவர்களுக்கு,
தயவு செய்து மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் மற்றும் ஹரித்ராநதி தெப்ப குளம் ஆகியவற்றையும் இப்பகுதியில் அளிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி!
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.