பழநி அருகே நடுகல் கண்டுபிடிப்பு | Dinamalar

தமிழ்நாடு

பழநி அருகே நடுகல் கண்டுபிடிப்பு

Added : செப் 11, 2010

பழநி : பழநி அருகே மானூரில் கி.பி.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரும், தொன்மை பாதுகாப்பு மன்ற செயலரும் ஆன நந்திவர்மன் மானூர் சண்முகநதி ஆற்றங்கரையில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கி.பி.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்ட இக்கல் வேடத்துரை என்ற பெயரில் சிறு இன குழுவினரால் வணங்கப்பட்டு வருகிறது.

சிலையின் அமைப்பு பற்றி நந்திவர்மன் கூறியதாவது:நடுகல் வீரனின் உருவம் 74 செ.மீ., ஆக உள்ளது. உருவம் மிக தத்துரூபமாய் பொறிக்கப்பட்டுள்ள நடுகல்லில் வீரனின் இடது கை வில் தாங்கிய நிலையிலும், வலது கையில் ஓங்கிய நிலையில் வாள் வைத்துள்ளார். இவ்வளவு அழகிய சிலை இது வரை கிடைக்கவில்லை.தமிழகத்தில் இது போன்ற நடுகற்களுக்கு புலி குத்தி பட்டான் கல் என்று வழங்கப்படுகிறது.

நடுகல் வரலாறு:பண்டைய தமிழ்நாடு வீரத்தின் விளை நிலமாய் இருந்துள்ளது.போரில் செயற்கரிய செயல் செய்து இறந்து படும் வீரனுக்கும், விலங்குகள் இடம் இருந்து ஊரை காத்து மாண்ட வீரனுக்கும் நடுகல் அமைத்து வழிபடுவது வழக்கமாகும்.

காலம்:மானூரில் சண்முகநதி ஆற்றின் கரையில் கிடைத்த நடுகல் மேல் உள்ள எழுத்துக்கள் கால வெள்ளத்தில் சிதைந்த நிலையில் உள்ளது. நன்கு தெரியும் எழுத்தைக் கொண்டு ஆய்வு செய்ததில் இக்கல் கி.பி.எட்டாம் நூற்றாண்டின் எழுத்தமைப்பு காணப்படுப்படுவதால் இந்த நடுகல் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது.பழநி பகுதியில் கிடைத்த மூன்றாவது நடுகல் இது ஆகும்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X