இமானுவேல் சேகரன் நினைவு நாள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இமானுவேல் சேகரன் நினைவு நாள்

Added : செப் 11, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி:பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பல்வேறு இயக்கங்களை சார்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.தி.மு.க., சார்பில் அமைச்சர் தங்கவேலன், ரித்தீஷ்குமார் எம்.பி., முருகவேல் எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர்கள் திசைவீரன், பூமிநாதன், திவாகரன் அஞ்சலி செலுத்தினர்.அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், ராஜகண்ணப்பன், அன்வர்ராஜா, மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.


காங்கிரஸ் சார்பில் ராம்பிரபு எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.தே.மு.தி.க., சார்பில் மாநில பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும், பா.ஜ ., சார்பில் மாநில துணைத்தலைவர் கூரியூர் நாகராஜன், மாவட்ட தலைவர் சண்முகராஜ், ம.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் சதன் திருமலைகுமார், ஞானதேசிகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பா.ம.க., மாநில தலைவர் கோ.க.மணி, பொதுச் செயலர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர்.இதையொட்டி பால்குடம், முளைப்பாரி, தீப ஜோதி என பலரும் ஊர்வலமாக வந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X