மாசில்லா மதுரை: தினமும் 6 டன் குப்பை சேகரிப்பு| Dinamalar

மாசில்லா மதுரை: தினமும் 6 டன் குப்பை சேகரிப்பு

Added : அக் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை அரசு மருத்துவமனையில், தினமும் 6 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இங்கு சிகிச்சை பெற, மதுரை மட்டுமல்லாது, தென்மாவட்டங்களில் இருந்தும் தினமும் 10 ஆயிரம் பேர் வருகின்றனர். 2,600 பேர் உள்நோயாளிகளாகவும், 4 ஆயிரம் பேர் புறநோயாளிகளாவும் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு குப்பைகளை சேகரிக்க 6 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 6 டன் குப்பைகளை, மாநகராட்சி லாரிகளில் 3 "டிரிப்'களில் அப்புறப்படுத்தப்படுகிறது. ஆபரேஷன், சிகிச்சை மூலம் வரும்"பயோ மெடிக்கல் வேஸ்ட்கள்' தினமும் 700 முதல் 800 கிலோ கிடைக்கிறது. இவற்றை "ராம்கி' எனும் அமைப்பினர் எடுத்துச்சென்று அழிக்க, மருத்துவமனை நிர்வாகம் கிலோ ஒன்றுக்கு, ரூ.17 வழங்குகிறது.
பிளாஸ்டிக் கழிவில் ரோடு: மதுரை நகரில் 100 வார்டுகளிலும் தெருக்களின் அளவிற்கு ஏற்ப குப்பை லாரிகளை ஒதுக்கி, தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும். குப்பைகளிலிருந்து பிரித்து எடுத்த பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு ரோடு அமைக்க திட்டம் வகுக்கலாம். -எஸ்.பாபு,தேனூர்



வாகன பராமரிப்பு அவசியம்: வாகனங்களை வாங்கும் போது உள்ள ஆர்வம் அதை வாங்கிய பின் சிலருக்கு இல்லாமல் போய்விடுகிறது. வாகனங்களில் ஏற்படும் புகையை, யாரும் கண்டு கொள்வதேயில்லை. புகையால் நாமும், நம் சுற்றுப்புறமும் பாதிக்கும் என்பதை உணர்ந்து வாகனங்களை அவ்வப்போது பழுதுபார்த்து பயன்படுத்த வேண்டும். -சு.ராமகிருஷ்ணன், நாராயணபுரம்.


ரோட்டு பள்ளங்களை மூடலாம் : மழை நீர் தேங்கியுள்ள பள்ளங்களில் உ<ள்ள தண்ணீர் வடிய வழி செய்யாமல் அதை அப்படியே விட்டு விடுகின்றனர். அது சகதியாக காய்ந்து வாகனங்கள் செல்ல இடையூறாகவும் கொசுக்களின் பிறப்பிடமாகவும் மாறிவிடுகிறது. உடனடியாக தண்ணீர் வடிய வழி ஏற்படுத்தி, சுத்தம் செய்து, மண் நிரப்பி பள்ளத்தை மூட வேண்டும். -டி.ராஜன்,கோச்சடை


வேண்டாம் பாலிதீன் : பாலிதீன் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். குப்பை வண்டிகள் எண்ணிக்கையை அதிகரித்து. காலை, மாலையில் குப்பை வண்டிகள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். -கே.ரஜினி பிரபா, செல்லூர்.


விழிப்புணர்வு வேண்டும்: பொது இடங்களில் அசுத்தம் செய்வது, எச்சில் துப்புவதை நிறுத்த வேண்டும். இந்த கழிவுகளிலிருந்து வெளிப்படும் நச்சு நமக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ள, சுற்றுப்புற தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். - சி.இராமச்சந்திரன்,கிருஷ்ணாபுரம் காலனி


கழிவுநீர் குழாய் பராமரிப்பு தேவை: நம் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களை பராமரிக்க வேண்டும். சிலர் "செப்டிக் டேங்க்' கழிவுகளை நேரடியாக சாக்கடையில் விடுகின்றனர். இதை தடை செய்து ஒவ்வொரு வீட்டிற்கும் தொட்டி அமைத்து கழிவுநீரை அதில் விட வேண்டும். லாரிகள் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். -சு.இலக்குமணசாமி, திருநகர்.


கூடுதல் சுகாதார நிதி: சுகாதார பணியை தடையின்றி செய்ய, அரசு கூடுதல் நிதி ஒதுக்கலாம். ரோட்டில் தானே போடுகிறோம் என்று, குப்பைகளை நினைத்த இடங்களில் வீசி செல்கின்றனர். இந்த அலட்சிய போக்கை மாற்றி, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை போட வேண்டும். - அ.ஜெயபாலன், மதுரை.


குப்பையில் உரம்: நாம் தினமும் உணவிற்காக பயன்படுத்தும் காய்கறிகளின் கழிவுகளையும் மற்ற குப்பைகளையும் வெளியே போடாமல். நம் வீட்டு தோட்டத்தில் சிறிய குழியை தோண்டி அதில் கொட்டி அவற்றை உரமாக்கலாம். -எம்.உஷா, திருநகர்.


குப்பை போட்டால் அபராதம்: குப்பை தொட்டி இருக்கும் இடத்திற்கு வந்து குப்பைகளை போட சிலர் சோம்பேறித்தனமாக, வீட்டின் அருகிலேயே குப்பை கொட்டுவதால், தெருக்களில் வைத்திருக்கும் குப்பை தொட்டிகள் பெரும்பாலும் காலியாகத் தான் இருக்கிறது. வீதியில் குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். -ஜே.ஜே.எச். சாமி தாஸ், தத்தனேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X