ஜம்பை டவுன் பஞ்., சஸ்பெண்ட் ஊழியர்கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி| Dinamalar

தமிழ்நாடு

ஜம்பை டவுன் பஞ்., சஸ்பெண்ட் ஊழியர்கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

Added : அக் 22, 2013

ஈரோடு: ஜம்பை டவுன் பஞ்சாயத்தில், சஸ்பென்ட் செய்யப்பட்ட ஊழியர் சதாசிவம், கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், டி.ஆர்.ஓ., கணேஷ் தலைமையில் நேற்று நடந்தது. காலை, ஒரு மணியளவில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளிக்க ஒருவர் முயற்சித்தார்.பாதுகாப்பு பணியில் இருந்த சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீஸார், அவரை பிடித்து, மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றினர்.விசாரணையில், அவர், ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, ஜம்பை டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த சதாசிவம், 36, என தெரியவந்தது.சதாசிவம் கூறியதாவது:கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக, ஜம்பை டவுன் பஞ்சாயத்தில், குடிநீர் வழங்கும் பிரிவில் பிட்டராக பணி செய்தேன். டவுன் பஞ்சாயத்து தலைவர் வரதராஜன், செயல் அலுவலர் உஷா ஆகியோர் சேர்ந்து, டவுன் பஞ்சாயத்தில், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, இரும்பு தளவாடங்களை, ஏலத்துக்கு கொண்டு வராமல், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றனர். இதை நான் தெரிவித்தேன்.
இதனால், என் மீது பொய் புகார் சுமத்தி, கடந்த மாதம் சஸ்பென்ட் செய்து விட்டனர். என்னை வேலையை விட்டு நீக்கியதால், என் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய வந்தேன்.டவுன் பஞ்சாயத்தில் அதிகாரிகள் விசாரித்தால், பல்வேறு முறைகேடுகளை வெளிச்சத்துக்கு வரும், என்றார்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷா கூறியதாவது:ஜம்பை டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் வழங்கல் பிரிவில் பணியாற்றிய, சதாசிவம், 15 பேரிடம், தலா, 3,500 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, திருட்டு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளார். பணத்துக்கு பில் கேட்டபோது பிடிபட்டார். இதுபோல, 50 இணைப்பு வரையிலும் கொடுத்துள்ளதாக, புகார் வந்துள்ளது. விசாரித்து வருகிறோம். இதனால், கடந்த மாதம், 18ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இரும்பு தளவாடங்களை, டவுன் பஞ்சாயத்து முறையாக ஏலம் நடத்தி, விற்பனை செய்துள்ளது, என்றார்.ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சதாசிவத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X