தமிழ்த்தேச மக்கள் கட்சி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

தமிழ்நாடு

தமிழ்த்தேச மக்கள் கட்சி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்

Added : அக் 24, 2013

சிதம்பரம்:இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் மாவட்ட தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் இந்திய அரசு இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது. காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை அரசை நீக்க வேண்டும் என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தயாநிதி தலைமை தாங்கினார். இதில் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் குமார், மாவட்ட செயலாளர் தமிழரசன், வாழ்வுரிமை கட்சி மாணவர் சங்கம் ராம்ஜி, தமிழக இளைஞர் முன்னணி குபேரன், சமூக இயக்க நிர்வாகிகள் விடுதலைசெல்வன், இனியன், செந்தமிழ்க்குமரன், கதிர்முத்தையன், தமிழ்நேயன், ஜெயசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் ராமமூர்த்தி, குமராட்சி பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X