விருதுநகரில் 2 வது முறையாக களமிறங்கும் வைகோ: ஆதரவு திரட்டும் பணியை துவக்கினார்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்க உள்ள ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, சமுதாய பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். "இம்முறை எப்படியும் அவர் வெற்றிபெற்றுவிடுவார்,' என, அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


ம.தி.மு.க., அதன் அரசியல் வரலாற்றில் சந்தித்த ஏற்றங்களைவிட, இறக்கங்களே அதிகம். கடந்த சட்டசபை தேர்தல், சீட் பங்கீடு பிரச்னை காரணமாக, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க., அத்தேர்தலையே புறக்கணித்தது. அ.தி.மு.க., தங்களை மதிக்காமல் தன்னிச்கையாக முடிவெடுத்தது தான், அதற்கு காரணம் என, ம.தி.மு.க. தெரிவித்தது. தற்போது, அக்கட்சிக்கு சட்டசபையில் பிரதிநிதி ஒருவர் கூட இல்லை. இதனால், சோர்வடைந்த அக்கட்சி தொண்டர்கள் சட்டசபை தேர்தலைப்போல், லோக்சபா தேர்தலையும் புறக்கணிக்கக் கூடாது என, வைகோவிடம் வலியுறுத்தினர். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட வைகோ, லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க. நிச்சயம் போட்டியிடும் என, விருநகர் மாநாட்டில் அறிவித்தார். அதேநேரம், ""கொலைப்பழி சுமத்தி தன்னை வெளியேற்றிய தி.மு.க., நம்ப வைத்து கழுத்தறுத்த அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது'' என, வெளிப்படையாக அறிவித்தார். எந்தக்கட்சியுடன் கூட்டணி என்பதை தெளிவாகக் கூறாமல், ""தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பும் கட்சியுடன், கூட்டணி வைக்கப்படுமென'' சஸ்பென்ஸ் வைத்தார். லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் ம.தி.மு.க., கூட்டணி அமைக்க உள்ளது. அதற்காக, விரைவில் குஜராத் முதல்வர் மோடியை, வைகோ சந்திக்க உள்ளார் என்றெல்லாம், தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால், அது குறித்து பதில்கூறாமல், ம.தி.மு.க., மேலிடம் மவுனம் சாதிக்கிறது.


தேர்தல்பிரசாரம் துவக்கம்:

விருதுநகரில் வைகோ, ஈரோட்டில் தற்போதைய லோக்சபா எம்.பி.,கணேச மூர்த்தி, தூத்துக்குடியில் மாவட்ட செயலர் ஜோயல் ஆகியோர் போட்டியிடுவர் என, கட்சி வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் முதல் கட்சியாக, ம.தி.மு.க., தனது தேர்தல் பிரசாரத்தை, தூத்துக்குடியில் துவங்கியது. விருதுநகர்மாவட்டத்தில் பிரசாரம் துவக்கிய வைகோ, நகர்ப்பகுதிகளை தவித்து, புறநகர், கிராமங்களைத் தேர்ந்தெடுத்து பிரசாரம் செய்தார். முன்னர், சிவகாசி தொகுதியில் எம்.பி.,யாக இருந்தபோது, மருத்துவமுகாம் நடத்தியது உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களைக் கூறி, ஓட்டுசேகரித் தார்.


விருதுநகரை நம்பும் வைகோ:

கடந்த 2009ல் நடந்த, விருதுநகர் லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., சார்பில் வைகோ, காங்.,சார்பில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். அதில், மாணிக்கம் தாகூரிடம் 15,764 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வைகோ தோல்வியடைந்தார். ஆனால், இம்முறை எப்படியும் விருதுநகர் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார். சமுதாய பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்திக்க துவங்கி உள்ள வைகோ, தொகுதியின் முக்கிய அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து, தான் எம்.பி., யானால், அவற்றை உறுதியாக, தீர்த்துவைப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் தொகுதி முழுக்க செல்ல உள்ளார். "அவரது கோரிக்கைக்கு, முக்கிய புள்ளிகளிடமிருந்து "பாசிட்டிவ்' பதில் கிடைத்ததால், வைகோ வெற்றி பெற்று விடுவார்' என, அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியே, அவரது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (47)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
puratchidhaasan - viruthachalam,இந்தியா
03-நவ-201321:20:14 IST Report Abuse
puratchidhaasan வைகோவை போன்றவர்களுக்கு தயவு செய்து வாக்களியுங்கள்.நேர்மையாக இருப்பவர்களுக்கு வாக்களித்து ரொம்ப காலமாகிறது.தமிழ்நாடு மிகவும் மோசமான அரசியல்வாதிகள் கையில் சிக்கியிருக்கிறது.தமிழர்களின்மீது அக்கறையுள்ள தலைவர்களை கொஞ்சம் கண்திறந்து பாருங்கள்.இந்த நாடு உருப்படட்டும்.காமராஜரை போன்று,அண்ணாவைபோன்று,ஜீவாவை போன்று தலைவர்கள் இந்த தேசத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
nagainalluran - Salem,இந்தியா
03-நவ-201318:13:33 IST Report Abuse
nagainalluran ஒரு உண்மையான தமிழரை, தமிழர் நலனில் அக்கறையும் கொள்கை பிடிப்பும் உள்ள ஒருவரை, எந்த நிலையிலும், தமிழர் நலனை அடகு வைக்காதவரை, தேர்ந்தெடுப்பது, தம்ழர்களுக்கு காலத்தின் கட்டாயம்
Rate this:
Share this comment
Cancel
R.Manohar - Trichy,இந்தியா
03-நவ-201317:53:48 IST Report Abuse
R.Manohar வைகோ என்னதான் குட்டிக்கரணம் போட்டு பார்த்தாலும் வெற்றி பெற முடியாது. நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் தமிழ்நாட்டில் போட்டி என்றால் அதிமுக திமுக இரன்டு பேருக்கு மட்டும்தான். விருதுநகரில் கடுமையாக போராடினால் டெபாஸிட் பறிபோகாமல் இரண்டாவது இடத்துக்கு வரமுடியும். ஜெயிப்பதெல்லாம் கனவில் கூட நடக்காது
Rate this:
Share this comment
Cancel
Bala - Raslaffan,கத்தார்
03-நவ-201317:14:54 IST Report Abuse
Bala நான் இந்த முறை நிச்சயம் வைகோவுக்கு எனது ஓட்டை பதிவு செய்வேன்
Rate this:
Share this comment
Cancel
Nanban - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-நவ-201317:06:01 IST Report Abuse
Nanban ஐயோ பாவம். மிகவும் போராடி போராடி பல தோல்விகளை சந்தித்த சந்தர்ப்ப... ... பதவி ஆசை யாரை விட்டது? ஒரு வைப்பு கொடுங்கள் ..விருதுநகர் தொகுதி மக்களே..
Rate this:
Share this comment
Cancel
brabhagaran.c - riyadh  ( Posted via: Dinamalar Android App )
03-நவ-201317:00:42 IST Report Abuse
brabhagaran.c கருணாநிதி், சும்மா தமிழினத்தலைவர் என்று கூறுகிரார். ஆனால் உன்மையிலயே வைகோ தான் தமிழனக்கும் தமிழுக்கும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளோடு எதி்ர்த்து போராடுகிறவர், நல்ல சிந்தனைவாதி். தமிழுக்கு ஒரு நல்லிலக்கனம் அவர்.
Rate this:
Share this comment
Cancel
P Subramanian - Chennai,இந்தியா
03-நவ-201316:37:19 IST Report Abuse
P Subramanian வைகோவை வெற்றி பெற வைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. Sterlite விவகாரத்தில் எதிரிகள் இவரை எப்படி எல்லாம் பழித்தார்கள். பணம் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டார் என்று ஏளனம் செய்தார்கள். இம்முறை Strelite விவகாரம் தான் வைகோ வை வெற்றிபெற வைக்கப் போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
03-நவ-201316:24:06 IST Report Abuse
Pannadai Pandian வைகோ அதிமுகவிடம் கூட்டணி வைக்காவிடில் தோற்பது உறுதி. அவரது கட்சி ஒரு சீட்டில் கூட தேறாது.
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
03-நவ-201316:11:56 IST Report Abuse
விருமாண்டி இலங்கை தமிழன் பேச்சை எடுக்காமல் இருந்தால் பிரச்சாரம் வெற்றி பெரும் .
Rate this:
Share this comment
Cancel
Satiesh kumar Ramadass - Pondicherry,இந்தியா
03-நவ-201314:38:01 IST Report Abuse
Satiesh kumar Ramadass வைகோ ஒரு நல்ல மக்கள் தலைவர். தமிழ் மக்களின் உணர்வை புரிந்து கொண்டவர். இந்த முறை விருதுநகர் மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்