லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து பினராயி விஜயன் விடுவிப்பு| Dinamalar

லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து பினராயி விஜயன் விடுவிப்பு

Added : நவ 05, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநில, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர், பினராயி விஜயனை, எஸ்.என்.சி., - லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து, சி.பி.ஐ., கோர்ட் விடுவித்துள்ளது.
கடந்த, 1996ல், கேரளாவில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, ஈ.கே.நாயனார் அமைச்சரவையில், மின்துறை அமைச்சராக இருந்தவர், பினராயி விஜயன். அப்போது இடுக்கி மாவட்டத்திலுள்ள நீர்மின் நிலையங்களை, 375 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி, கனடா நாட்டைச் சேர்ந்த, எஸ்.என்.சி., --லாவ்லின் என்ற நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால், கேரள அரசுக்கு, 86.25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது. அடுத்து வந்த, காங்கிரஸ் அரசில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பினராயி விஜயன், கேரள மின்வாரியத் துறை அதிகாரிகள் உட்பட, ஏழு பேர் மீது, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவனந்தபுரம், சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது. 2011 ஜூனில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், சி.பி.ஐ., தரப்பில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, விஜயன் உட்பட மற்றும் ஐந்து பேர், வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, ஆர்.ரகு நேற்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X