பழநி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், குடும்பத்தினருடன், பழநி முருகன் கோவிலில், நேற்று சாமி தரிசனம் செய்தார். பழநிக்கு வந்த அவரை, திண்டுக்கல் மாவட்ட நீதிபதி பாலசுந்தர குமார், கலெக்டர் வெங்கடாசலம், ஜெயச்சந்திரன் எஸ்.பி., கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையில் பங்கேற்று, தன் பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயருக்கு அர்ச்சனை செய்தார். பின், கார் மூலம் ஈரோடு சென்றார்.