தனுஷ்கோடியில் பஜ்ஜி சுட்ட எம்.எல்.ஏ.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் பஜ்ஜி சுட்ட எம்.எல்.ஏ.,

Added : நவ 06, 2013 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தனுஷ்கோடியில் பஜ்ஜி சுட்ட எம்.எல்.ஏ.,

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி வந்த, சட்டசபை மதிப்பீட்டு குழுவில் இடம் பெற்றிருந்த, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன், டீ கடையில் பஜ்ஜி சுட்டு கொடுக்க, பிற எம்.எல்.ஏ.,க்கள் ருசித்து சாப்பிட்டனர். தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர், பாப்பா சுந்தரம் தலைமையில், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள், கடந்த, 4ம் தேதி, ராமேஸ்வரம் வந்தனர். நேற்று காலை, ராமேஸ்வரம் அரசு பள்ளி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பின், 1964ல், புயலில் சேதமடைந்த தனுஷ்கோடி சர்ச், தபால் அலுவலகம், ரயில் நிலையத்தை, பார்த்து ரசித்தனர். பின், அங்குள்ள, டீ கடையை பார்த்தவுடன், "டீ குடிப்போம் வாங்க' என ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன் அழைக்க, மற்ற எம்.எல்.ஏ.,க்களும் பின்தொடர்ந்தனர். அங்கு பஜ்ஜி சுட்டு கொண்டிருந்த, டீ கடைக்காரரிடம், கரண்டியை வாங்கிய ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., பஜ்ஜிகளை கருகாமல் சுட்டு எடுத்தார். பஜ்ஜிகளை ருசித்த எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள், "பேஷ்... பேஷ்...' எனக்கூறி, டீயும் குடித்தனர். கலகலப்பாக இருந்த அவர்களை பார்த்த மீனவர்கள், "ஆய்வு பணிக்கு வந்தார்களா?, சுற்றுலா வந்தார்களா?' என, முணுமுணுத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendra Babu R - Chennai,இந்தியா
06-நவ-201321:55:37 IST Report Abuse
Mahendra Babu R பின், 1964ல், புயலில் சேதமடைந்த தனுஷ்கோடி சர்ச், தபால் அலுவலகம், ரயில் நிலையத்தை, பார்த்து ரசித்தனர்.
Rate this:
Share this comment
Cancel
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
06-நவ-201319:51:18 IST Report Abuse
Nanban சேதமடைந்த சின்னங்களை பார்த்து ரசித்த அதி்முக எம்எல்ஏக்களை என்ன சொல்வது
Rate this:
Share this comment
Cancel
shiva Kumar - TIruvarur,இந்தியா
06-நவ-201319:04:39 IST Report Abuse
shiva Kumar இவர் தன் கடந்த கால தொழிலை இன்னும் மறக்க வில்லை போலும்.
Rate this:
Share this comment
Cancel
srajan - narasimhapuram ,இந்தியா
06-நவ-201317:43:52 IST Report Abuse
srajan பஜ்ஜி தானே சுட்டார் உங்க பணத்தா சுட்டார் ?
Rate this:
Share this comment
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
07-நவ-201309:01:25 IST Report Abuse
Thamarai Moorthy.C.V.ராஜன் அவர்களே பிறகு ஏன் அவருக்கு சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஆண்டிபட்டி பஜ்ஜி என்று சொல்லலாமே (தாமரை மூர்த்தி, ஓமன், சலாலா)...
Rate this:
Share this comment
Cancel
Annamalai Parasuraman - Dammam,சவுதி அரேபியா
06-நவ-201314:35:55 IST Report Abuse
Annamalai Parasuraman அம்மா ஆட்சி சாதனைகளில் இதுவும் ஒன்று , வழக்கமா அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்ன நினைபாங்க அவங்க மட்டும் தான் கடவுள் அருள்பெற்றவங்க அல்லது கடவுள் என்று மிருகம் போல நம்ம கிட்ட நடந்துக்குவாங்க. Example RTO , பாஸ்போர்ட் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், EB , போலீஸ்.... சொல்லிகிட்டே போகலாம். வாழ்த்துக்கள் கடவுள் தூதர்களே நாங்க வயற்றை விற்று நீங்க ருசிச்சி பார்த்ததுக்கு. காசு கொடுத்தீங்கள இல்ல வழக்கம் போல ஸ்வாகா தானா ????
Rate this:
Share this comment
Cancel
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
06-நவ-201313:50:19 IST Report Abuse
Thamarai Moorthy.C.V. இவர் மக்கள் குறைகளை தீர்பதற்கு பதிலாக பஜ்ஜி சுட்டு இருக்கிறார் அதையும் பக்கத்தில் உள்ளவர்கள் ரசித்து இருக்கிறார்கள் (போங்கடா நீங்களும் உங்கள் கல்யாணமும்)
Rate this:
Share this comment
Cancel
ஷான் - villupuram,இந்தியா
06-நவ-201311:55:08 IST Report Abuse
ஷான் பாவம் அவங்களுக்கும் ஆசாபாசம் இருக்குமுல..
Rate this:
Share this comment
Cancel
a.ravi - jubail,சவுதி அரேபியா
06-நவ-201311:50:14 IST Report Abuse
a.ravi டீ கடை காரர், ஆட்டோ ஓட்டுனர், பஸ் நடத்துனர், லாட்டரி விற்பவர், இவர்கள் தான், பெரும் பெரும் பதவில் இருக்கிறார்கள், படித்தவர்கள், சிலர்தான் இந்த பதவில் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
06-நவ-201311:12:19 IST Report Abuse
S.MAHESH KUMAR எ.வ வேலுவை சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் முன்னாள் நடத்துனர் என்று எள்ளி நகையாடிய இந்த துதிபாடிகள் தற்போது செய்த செயல் என்ன ஜெயலலிதாவை குளிர்விப்பதற்கா, அல்லது எங்களுக்கும் கைத்தொழில் ஒன்று கைவசம் உள்ளது ஆட்சி போனாலும் வடை சுட்டு பிழைத்துக்கொள்வோம் என்று சூசகமாக கூறுகின்றார்களோ. ஆனால் வடை சூடாக இருக்க வேண்டும்.ஆறி போய் விட்டால் ருசிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
06-நவ-201310:53:08 IST Report Abuse
LAX கைவசம் தொழில் இருக்கு.. பொழச்சுக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை