Maangalyaan planning director from nellai | "மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி

Updated : நவ 08, 2013 | Added : நவ 06, 2013 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர் நெல்லையை சேர்ந்த கிராமத்து விஞ்ஞானி

திருநெல்வேலி:செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள "மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சொந்த ஊர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்றுமுன்தினம் விண்ணில் ஏவப்பட்ட "மங்கள்யான்' செயற்கைகோள் தயாரிப்பில், முக்கிய பங்காற்றியவர் சுப்பையா அருணன்,55. இவர், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள்.அருணன், திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984 ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார்.

திருவனந்தபுரம் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன்,80, என்பவரது மூத்த சகோதரியின் மகன் தான் அருணன். 1994 ல், விண்வெளி ரகசியங்களை மாலத்தீவு பெண்களுக்கு கொடுத்ததாக, நம்பி நாராயணன் கைதானார். பின்னர், அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு, அதற்காக, நம்பி நாராயணனிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.நம்பி நாராயணனின் மகள் கீதாவை தான், சுப்பையா அருணன் திருமணம் செய்துள்ளார். இவர்கள், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கின்றனர். கீதா பள்ளி ஆசிரியையாக உள்ளார். அருணனின் அண்ணன் நல்லமுத்து வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும், தம்பி குமரன் சென்னையில் சினிமா இசை அமைப்பாளராகவும் உள்ளனர்.

மேலும், அவருக்கு பாரிவள்ளல், லதா சங்கரி என சகோதர, சகோதரிகள் உள்ளனர். அருணன் குடும்பத்தினர், 15 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டாலும், பள்ளி தலைமையாசிரியரின் மகன் என்ற முறையில், விஞ்ஞானி அருணனை கோதைசேரி கிராம மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அவரது நண்பர்கள், பிளக்ஸ் போர்டு வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
alskrishna - chennai,இந்தியா
11-நவ-201319:01:16 IST Report Abuse
alskrishna நமது விஞ்ஞானிகள் மிகவும் திறமைசாலிகள் என்று மீண்டும் நிருபிதுள்ளர்கள். அதில் நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
07-நவ-201321:44:43 IST Report Abuse
arumugam subbiah அய்யா அப்துல் கலாமை தொடர்ந்து தென்னகத்திலிரிருந்து விண்வெளி துறைக்கு மற்றுமொரு விஞ்ஜானி உருவாகி உள்ளதை கிராமப்புற இளைய சமுதாயத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். கோதைசேரி என்ற கிராமத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெருமை தங்களை சாரும். ராமேஸ்வரம் இராமநாத சுவாமியால் பெயர் பெற்றிருந்தாலும் ஐயா அப்துல் கலாம் அவர்களால் மேலும் மெருகூட்டப்பட்டது. திருக்குறுங்குடி ஸ்ரீ நம்பி நாராயணன் (மலை) பெயரால் பக்த கோடிகளுக்கு தெரிந்த போதிலும் டிவிஎஸ் நிறுவனத்தால் உலகோரால் அறியப்பட்டது. அது போலவே இன்று கோதைசேரி தங்களால் உலகிற்கு தெரிய வந்துள்ளது. தங்களால் பிறந்த ஊருக்கும் மற்றும் நாட்டுக்கும் மென்மேலும் நன்மைகள் சிறக்க எல்லாம் வல்ல அம்பாளை வணங்குகிறேன். சு. ஆறுமுகம், கடம்போடுவழ்வு.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
07-நவ-201308:19:03 IST Report Abuse
kumaresan.m " இந்த வெற்றி பயணத்தில் தமிழரின் பங்களிப்பு உள்ளது என்னும் பொழுது மிக பெருமையாக உள்ளது .....இன்றும் இவரை மறவாமல் இருக்கும் இவரின் கிராம மக்களுக்கு மற்றும் படித்த இளைஞருக்கு வழிகாட்ட முன்வர வேண்டும் ....நன்றிகள் ஐயா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X