இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு| Dinamalar

இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு

Updated : நவ 12, 2013 | Added : நவ 12, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போர்ட் லூயிஸ்:இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை, மொரீஷியஸ் நாடு புறக்கணித்துள்ளது.இலங்கையில், வரும், 15ம் தேதி, காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு துவங்குகிறது. இலங்கையில் நடக்கும், மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, கனடா நாட்டு பிரதமர், ஸ்டீபன் ஹார்பர், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார்.தமிழக தலைவர்களின் வற்புறுத்தலால், பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இந்த வரிசையில் தற்போது, மொரீஷியஸ் நாடும் சேர்ந்துள்ளது. இது குறித்து, மொரீஷியஸ் பிரதமர் நவின் சந்திர ராம்கூலம், அந்நாட்டு பார்லிமென்ட்டில் கூறியதாவது: இலங்கையில் இறுதி கட்ட போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்தன. போர் முடிந்த பின்னும், மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. எல்லாவற்றையும் விட முதன்மையானது மனித உரிமைக்கு மதிப்பு கொடுப்பது தான். ஆனால், இலங்கையில் இந்த விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறோம்.இவ்வாறு, ராம்கூலம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூமுட்டை தமிழ் சிங்கம் - கிர், குஜராத் ,இந்தியா
13-நவ-201308:00:17 IST Report Abuse
கூமுட்டை தமிழ் சிங்கம் மொரீசியஸ் ஒரு சிறிய நாடு , ஆனால் மனிதாபிமானம் உள்ள உண்மையான ஆண் மகன்கள் நிறைந்த தேசம் .
Rate this:
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
13-நவ-201305:14:11 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar தவறை தட்டிக்கேட்காமல் வாய்மூடி வேடிக்கை பார்ப்பது ஒரு வகையில் குற்றமே... துணிச்சலாக தட்டிக்கேட்க முன்வந்திருக்கும் மொரிஷியஸ் நாட்டு தலைவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்...
Rate this:
Share this comment
Cancel
Sanjisanji - Chennai,இந்தியா
13-நவ-201300:01:00 IST Report Abuse
Sanjisanji சரியான முடிவு..சரியான நேரத்தில்.. ஜெய்ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X