ஜனவரி 2ம் தேதி முதல் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜனவரி 2ம் தேதி முதல் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள்

Added : நவ 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தூத்துக்குடி: 2013-2014 ம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. 2013-2014 ம் ஆண்டுக்கான தமிழக முதல்வரின் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்த கிராம பஞ்சாயத்துக்களில் மக்கள் தொகை அடிப்படையில் 100 கிராம ஊராட்சிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தடகள விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 100 மீ.ஓட்டம், 200 மீ. ஓட்டம், 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல், கபடி, வாலிபால் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், கால்பந்து போட்டிகள் (ஆண்களுக்கு மட்டும்) மாற்றுத்திறனாளிகளுக்கு 2 போட்டிகள் ஆகியவை 02.01.2014 முதல் 13.01.2014-க்குள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வைத்து நடத்தப்பட இருக்கிறது. போட்டிகளுக்கான முன்பதிவு சம்பந்தமாக அந்தந்த கிராம ஊராட்சிகளில் 15.12.2013 முதல் 31.12..2013 வரை பதிவு செய்யலாம் என்றும் பெயர்களைப் பதிவு செய்ய விரும்புபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆகியவற்றினை காண்பித்து பெயர்பதிவு செய்ய வேண்டும் எனவும் எந்த அணியும் ஜாதிப் பெயரிலோ, மத பெயரிலோ, கட்சியின் பெயரிலோ இருக்கக் கூடாது என்றும் தலைவர்களின் படம் பொறித்த பனியன் அணியக் கூடாது என்றும் போட்டிகளில் டவுண் பஞ்சாயத்து மற்றும் ரெவன்யூ பஞ்சாயத்து ஆகியவற்றில் உள்ளவர்கள் கலந்து கொள்ள கூடாது என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக அந்தந்த ஊராட்சியை சேர்ந்தவர்களாகவும், 30 வயதிற்குட்பட்டவர்களகாவும் இருத்தல் வேண்டும், இப்போட்டிகளை 02.01.2013 முதல் 13.01.2014-க்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் உள்ள பள்ளி மைதானத்திலோ, சமுதாய நலக்கூடத்திலோ அல்லது தகுதியான இடத்திலோ வைத்து நடத்த வேண்டும். 14.01.2014 அன்று போட்டிகள் நடைபெற்ற 100 இடங்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பிரச்னைக்குரிய இடங்களுக்கு நானும், எஸ்பியும் நேரில் வந்து ஆய்வு செய்வோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து எஸ்பி.துரை பேசியதாவது, ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜாதி, மத, இன உணர்வுகளை கடந்து அனைவரும் பங்கேற்கும் வகையில் அணிகள் அமைக்கப்பட வேண்டும். இதற்கு காவல்துறை உதவி செய்து அனைத்துப் போட்டிகளுக்கும் தக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் உதவி கலெக்டர்(பயிற்சி), சமீரன், திட்ட இயக்குனர் பெல்லா, முதன்மைக் கல்வி அலுலரின் நேர்முக உதவியாளர் செல்வராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரத்தினம்பத்மாவதி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தமிழ் செல்வி,, மாவட்ட உடற்கல்வி அலுவவலர் கணேசன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோமசுந்தரம், லீமா ரோஸ், கருங்குளம், பொற்செழியன், அரவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை