Sachin meets Press | ' கிரிக்கெட் எனக்கு ஆக்ஸிஜன் '-சச்சின்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

' கிரிக்கெட் எனக்கு ஆக்ஸிஜன் '-சச்சின்

Updated : நவ 17, 2013 | Added : நவ 17, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
' கிரிக்கெட் எனக்கு ஆக்ஸிஜன் '-சச்சின்

மும்பை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்சச்சின் இன்று மும்பையில் நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: கிரிக்கெட் எனக்கு ஆக்ஸிஜன். அது எனது உயிர் மூச்சாக இருந்து வருகிறது. இது வே எனது வாழ்க்கை. இந்திய நாட்டிற்காக நான் ஆடினேன். 24 ஆண்டு காலம் இது ஒரு கனவு பயணமாக இருந்தது. எனது ஓய்வு குறித்து பல கேள்விகள் எழுந்தன. நான் சரியான நேரத்தில் ஓய்வு பெற்று இருக்கிறேன். இதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. கிரிக்கெட் சங்கத்தினர் என்னுடனான தொடர்பை துண்டிக்கவில்லை. நான் கிரிக்கெட் ஆடாமல் எப்படி இருக்க போகிறேன் . ஏதாவது ஒரு வகையில் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பில் இருப்பேன். எனது பாரத ரத்னா விருதை எனக்காக தியாகம் செய்த தாயாருக்கு சமர்ப்பிக்கிறேன். இது இந்த நாட்டின் அனைத்து தாய்மார்களுக்கும் அளிப்பதற்கு சமமாக கருதுகிறேன். இந்த விருது எனக்களித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.



ஓய்வு பெற்ற நாளில் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன். காலை 6.30 க்கு எழுந்து வழக்கம் போல் இல்லாமல் சற்று ரிலாக்சாக இருந்தேன். பல வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. இவ்வாறு சச்சின் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Venkat - Chennai (Madras),இந்தியா
17-நவ-201319:52:58 IST Report Abuse
Nagarajan Venkat நன்றி mr சச்சின் .. வுங்களை பொறுத்தவரை கிரிக்கெட் தான் கடவுள் . இந்தியன் டீமில் கிரிக்கெட் வீரராக இடம் கிடைத்துவிட்டால் அவர்கள் காட்டில் மழைதான். நம் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறர்கள் .. ஆணால் கிரிக்கெட் -இ தவிர்த்து நம் நாட்டின் முக்கிய விளையாட்டான ஹாக்கி-இ பிரபல படுத்த யுங்களை போல் இருப்பவர்கள் கொஞ்சம் யுதவி செய்தல் ஹாக்கி-புகழ் அடைந்து விடும் ,,,செய்விர்கள ?
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
17-நவ-201319:01:56 IST Report Abuse
sankar பிசிசிஐ ஒரு தனி அமைப்பு என்று அவர்களே சொல்கிறார்கள் . அதை இந்திய விளையாட்டு வாரியம் கட்டு படுத்த முடியாது . அப்படி என்றால் இவர் இப்படி இந்தியாவுக்கு விளையாடுகிறேன் என்று கூற முடியும் . பாரத ரத்னா பெற இவரை விட அதிக தகுதி படைத்த , தயாள் சந்த ,விஸ்வநாதன் ஆனந்த் இருக்கும்போது இவருக்கு கொடுத்தது வோட்டை கருதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X