'Militants planning to boost their numbers in Valley before polls' | எல்லையில் பயங்கரவாதிகள் குவிப்பு ; ராணுவம் தீவிர கண்காணிப்பு| Dinamalar

எல்லையில் பயங்கரவாதிகள் குவிப்பு ; ராணுவம் தீவிர கண்காணிப்பு

Updated : நவ 24, 2013 | Added : நவ 24, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'Militants planning to boost their numbers in Valley before
polls'எல்லையில் பயங்கரவாதிகள் குவிப்பு ; ராணுவம் தீவிர கண்காணிப்பு

ஸ்ரீநகர்: வரும் 2014 பார்லி., தேர்தலையும், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களையும் பயங்கரவாதிகள் சீர்குலைக்கலாம் என சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சி்ங் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டின் அருகில் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.நாட்டில் நடக்க உள்ள தேர்தல்களை சீர்குலைக்கும் நோக்கோடு, காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் ஊடுருவ பயங்கரவாதிகள் அதிக அளவில் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கை ; இது குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த குளிர் காலத்தை பயன்படுத்தி ஏராளமான பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உள்ளனர் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதனால், கடந்த சில நாட்களாகவே, எல்லை பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது,' என்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்ற போதும், பாக். பிரதமர் நவாஸ்ஷெரீப் ஒபாமாவை சந்தித்த போதும், காஷ்மீர் எல்லை பகுதியில், சம்பா, கத்துவா ஆகிய இடங்களில் பெரிய அளவில் ஊடுருவல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தயார் நிலை ; இதுதவிர, இந்த ஆண்டு பல முறை பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி எடுத்தனர். ஆனால், இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தேர்தல்களை சீர்குலைக்கும் வகையில், தற்போது ஊடுருவ தயாராகி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த ஆண்டு இந்திய ராணுவத்த்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த பல மோதல்களில், பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால், தற்போது, பயங்கரவாதிகள் நம்பிக்கை குறைந்து காணப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban S - arumuganeri,இந்தியா
24-நவ-201323:57:51 IST Report Abuse
Parthiban S ஐயா பிரதமரே, நேத்துதானையா சொன்னீங்க "பயங்கரவாதிகள் சதி"ன்னு...தொறந்த வாய மூடல, அதுக்குள்ள "எல்லையில பயங்கரவாதிகள் குவிப்பு"ன்னா..? "சா...மி, எனக்கொரு உண்..ண்..மை தெரிஞ்சாகணும் சா...மி..."
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
24-நவ-201323:50:00 IST Report Abuse
ravichandran பிரதமர் செய்தி வாசித்து பீதியை கிளப்புகிறார். செயலில் காட்டாமல் கவலை தெரிவிக்கிறார். எல்லையில் ராணுவம் கிளி தட்டு விளையாடுகிறது. இதுவரை நாம் இழந்த வீரர்களை கணக்கிட்டால் ஒரு போறே நடத்திருக்கலாம். சமாதானம் சாந்தம் என்பதெல்லாம் சண்டைக்கு பின் தான் சரிப்பட்டுவரும். அதிகமான மிதவாதம் கோழைத்தனம்.
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
24-நவ-201323:39:12 IST Report Abuse
ravichandran தினம் தினம் பயந்து சாவதைவிட மோதிவிடுவதே மேல் எல்லை தாண்டி தாக்கி தீவிரவாதிகளை கொல்லவேண்டும் இன்று நாம் அழிந்தாலும் நம் சந்ததியாவது நிமதியாக வாழும் இஸ்ரேல் போன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X