ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகம் : 47 ஆயிரம் ஓட்டு சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு| Dinamalar

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகம் : 47 ஆயிரம் ஓட்டு சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு

Added : நவ 30, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு சாதகம் :  47 ஆயிரம் ஓட்டு சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு

ஜெய்ப்பூர் : பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், இன்று நடக்கிறது. கருத்து கணிப்புகள், எதிர்க்கட்சியான, பா.ஜ.,வுக்கு, சாதகமாக வெளியாகியுள்ள நிலையில், 'முதல்வர் அசோக் கெலாட் செயல்படுத்திய, மக்கள் நலத் திட்டங்கள், ஆட்சியை தக்க வைக்க உதவும்' என, காங்., கட்சியினர், நம்பிக்கையுடன் உள்ளனர்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, இன்று சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ராஜஸ்தானில், 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், ஒரு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தவர் இறந்ததால், அந்த தொகுதியில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2,087 பேர் போட்டி:மற்ற தொகுதிகளில், திட்டமிட்டபடி, இன்று காலை, ஓட்டுப் பதிவு துவங்குகிறது. இவற்றில், ஆளும் கட்சியான, காங்., எதிர்க்கட்சியான, பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட, 2,087 பேர் போட்டியிடுகின்றனர். நான்கு கோடி வாக்காளர்கள், இதில் பங்கேற்று, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர். இவர்களில், இரண்டு கோடி பேர் பெண்கள்.காங்கிரஸ் கட்சி சார்பில், தற்போதைய முதல்வர், அசோக் கெலாட்டே, இந்த தேர்தலிலும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., சார்பில், முன்னாள் முதல்வர் வசுந்தரா, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மத்தியிலும், மாநிலத்திலும், காங்., தலைமையிலான ஆட்சியில், ஊழல் மலிந்து விட்டதாகவும், ராஜஸ்தானில், சட்டம் - ஒழுங்கு மோசமடைந்து விட்டதாகவும், பா.ஜ., தலைவர்கள், பிரசாரம் செய்தனர்.
பா.ஜ.,வினர் நம்பிக்கை:நரேந்திர மோடி, தன் பிரசாரத்தின்போது, காங்., மீது, சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் பிரசாரத்துக்கு கூடிய கூட்டத்தால், பா.ஜ.,வினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.இந்நிலையில், பல்வேறு பத்திரிகைகள், 'டிவி' சேனல்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், பா.ஜ.,வுக்கு, சாதகமான முடிவுகளே வெளியாகின. இதனால், காங்., கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.இருந்தாலும், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு, ஐந்தாண்டுகளில் செய்த, மக்கள் நலப் பணிகள், தங்களை கரை சேர்க்கும் என்றும், ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கு, இது, உதவும் என்றும், காங்., கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை தினமான, வரும், 8ம் தேதி, முடிவு தெரிந்து விடும்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த திட்டங்களால், மக்கள், நேரடியாக பயனடைந்துள்ளனர். நான் நிறைவேற்றிய திட்டங்கள் தான், இந்த தேர்தலில், 'மேஜிக்'காக செயல்பட்டு, எங்களுக்கு வெற்றியைத் தரப் போகிறது.அசோக் கெலாட்ராஜஸ்தான் முதல்வர் - காங்கிரஸ்
காங்., அரசு, நான்கரை ஆண்டுகளாக, தூங்கி கொண்டிருந்தது. தேர்தல் நெருங்கியதால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்தான் விழித்தது. அசோக் கெலாட்டால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டவை. இது, மக்களுக்கு தெரியும். இந்த தேர்தலில், எங்களுக்கு தான், வெற்றி கிடைக்கப் போகிறதுவசுந்தரா ராஜே சிந்தியா பா.ஜ., மூத்த தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
01-டிச-201318:29:32 IST Report Abuse
Malick Raja கொள்கைகள் இல்லை.. பிஜேபியில் ஆனால் கொள்ளை ... உண்டு... திட்டங்கள் இல்லை பிஜேபியில் மாற்றாக கட்டங்களே உண்டு... ஆட்சியின் ஆசை பிஜேபியில் உண்டு.. ஆனால் அதை நிலைநாட்ட எண்ணம் இல்லை... தொண்டர்கள் இல்லை.. ஆனால் கைக்கூலிகள் அதிகம் இருப்பதும் உண்மை.. மக்கள் தீர்மானிக்கட்டுமே...
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
01-டிச-201309:02:59 IST Report Abuse
Pannadai Pandian ராஜஸ்தானிலும் காங்கிரஸ் தோற்கும், சந்தேகமில்லை. காங்கிரஸ் தோற்றால் மக்கள் ஜெயிப்பர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X