ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில்74 சதவீத ஓட்டுப்பதிவு| Dinamalar

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில்74 சதவீத ஓட்டுப்பதிவு

Added : டிச 02, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில், நேற்று, ௭௪ சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. ஏராளமானோர், நீண்ட வரிசையில் நின்று, ஆர்வத்துடன் ஓட்டளித்தனர்.
ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நேற்று சட்டசபை தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சியான, பா.ஜ., முன்னாள் முதல்வர், வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில், தேர்தலை சந்திக்கிறது. இங்கு, மொத்தம், 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
சுரு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த, பகுஜன் சமாஜ் வேட்பாளர் இறந்ததால், அந்த தொகுதியில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மற்ற, 199 தொகுதிகளிலும், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது. கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், ஏராளமான மக்கள், ஆர்வத்துடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
முதல்வர் அசோக் கெலாட், எதிர்க்கட்சி தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர், தங்கள் தொகுதிகளில் ஓட்டளித்தனர். 10 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக கருதப்பட்டதால், அங்கு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பெரும்பாலான தொகுதியில், பெரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது.
முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், எங்களின் பிரசாரம், தனி நபர் தாக்குதலின்றி, நேர்மையாக நடந்தது. எங்கள் ஆட்சியி்ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்களை கவர்ந்துள்ளன. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி, என்றார்.
பா.ஜ., மூத்த தலைவர், வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில், மாநிலம் முழுவதும், காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள், ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும், என்றார்.தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும், 8ம் தேதி, எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
desadasan - mumbai,இந்தியா
02-டிச-201322:14:39 IST Report Abuse
desadasan அதிக ஒட்டு..ஆளுங்கட்சிக்கு வேட்டு
Rate this:
Share this comment
Cancel
Seshadri Krishnan - perth,ஆஸ்திரேலியா
02-டிச-201317:49:53 IST Report Abuse
Seshadri Krishnan தலிபான்களின் புலம்பல்கள் இனி தாங்காது. த்ரி கிருஷ்ணன் பெர்த் ஆஸ்திரேலியா
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
02-டிச-201311:36:38 IST Report Abuse
Ambika. K 50 % சதவிகித வாக்கு பதிவு காங்கிரஸ்சுக்கு சாதகம் . அதற்கு அதிகமாக விழும் ஒவ்வொரு சதவிகிதம் காங்கிரஸ் தோல்வியை நோக்கி 60 % வாக்கு பதிவு காங்கிரஸ் தோல்வி உறுதி 70 % தாண்டினால் காங்கிரஸ் ஊத்தல் நல்லது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X