166 உயிரை பலி கொண்ட கொடூரம்| Dinamalar

166 உயிரை பலி கொண்ட கொடூரம்

Added : டிச 02, 2013 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
166 உயிரை பலி கொண்ட கொடூரம்

2008 நவம்பர் 26, இரவு 9.15 மணி. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் மும்பை நடுங்கியது. 5 இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குண்டுகள் வெடிக்கப் பலர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கான மதிப்புமிக்க சொத்துக்கள் சிதறியழிந்தன.
அன்றிரவு தொடங்கிய தீவிரவாதப் போர் 2008 நவம்பர் 29 காலை சுமார் 9 மணிக்கு தாஜ் ஓட்டலில் பதுங்கியிருந்த கடைசித் தீவிரவாதியை நமது பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்ல முடிவுக்கு வந்தது.


கடல்வழி வந்தனர்:

10 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து அரபிக்கடல் வழியாக வந்தனர். மிக எச்சரிக்கையுடன் இந்தியக் கடற்கரையில், சற்றும் சந்தேகத்துக்கு இடந்தராத வகையில் இந்திய அடையாளங்களுடன் கரையேறினார்கள். அவர்கள் வந்த படகு இந்தியப்படகு, கடலில் ஹைஜாக் செய்யப்பட்டது. எந்த அதிகாரியும் அவர்களைச் சந்தேகிக்கவில்லை. வந்தவர்கள் 10 பயங்கரவாதிகள்.
மும்பை நகரத்தில் கேந்திரமான 5 இடங்களை 1) விக்டோரிய டெர்மினஸ் ஸ்டேஷன், 2) மலபார் ஹில்ஸ், 3) கொண்பா பகுதியில் உள்ள தாஜ் ஓட்டல், 4) லியோபோல்ட் ஓட்டல், ஓபிராய் ஓட்டல் மற்றும் 5) இஸ்ரேலியர்கள் வசிக்கும் நரிமான் ஹவுஸ் கட்டடம் ஆகிய இடங்களில் நாசவேலைகளை நடத்தி இந்துஸ்தானத்தைக் கதிகலங்கச் செய்ய வேண்டுமென்பதே இந்தப் பயங்கரவாதிகளுக்கு இவர்களது எஜமானர்கள் இட்ட கட்டளை.
இந்தக் கட்டளையைச் சற்றும் தவறில்லாது வெற்றிகரமாக நடத்தி முடிக்க இந்தப் பத்துப்பேரும் 5 ஜோடிகளாகப் பிரிந்து செயல்பட வேண்டுமென்பதே திட்டம். அப்படியே இவர்களும் செய்து முடித்தார்கள்.


166 பேர் பலி; 238 பேர் காயம்:

இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். 238பேர் படுகாயமடைந்தனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்தன. இறந்தவர்களில் 18 பேர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் 26 பேர் பிற நாட்டவர்கள். காயமடைந்தவர்களில் 37 போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் 21 பிற நாட்டவர். இறந்தவர்களில் குறைந்தபட்சம் 7 பேர்களை இவ்வழக்கின் பிரதான குற்றவாளியான கசாப் ஒருவனாகவே கொன்றுள்ளான். மேலும் பலரை தனது கூட்டாளி அபு இஸ்மாயில் (இறந்த குற்றவாளி நம்பர் 1) என்பவனுடன் சேர்ந்து கொன்றுள்ளான். இந்தச் சம்பவத்தில் 9 குற்றவாளிகள் இறந்துவிட்டனர். மேலும் 35 குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை. கசாப் ஒருவனே உயிருடன் பிடிபட்டான்.
மும்பை நிகழ்ச்சி, கசாப் கைது, அவனது ஒப்புதல் வாக்குமூலம், விசாரணை, குற்றம் நிரூபிக்கப்பட்டு மும்பை நீதிமன்றம் அவனுக்கு விதித்த 5 மரண தண்டனைகள், அதற்குச் சமமான எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட 5 ஆயுள் தண்டனைகள், மும்பை கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஸாவன்ந் வாகுலே இடம் அவன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம், மும்பை நீதிமன்ற மரணதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது, பின்னர் அது நிறைவேற்றப்பட்டது ஆகிய நீண்ட கதைக்கு இது ஒரு சிறிய முன்னுரை.


பாகிஸ்தானில் தீட்டப்பட்ட சதி:

மும்பை தொடர்குண்டுவழக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு ஆவணங்களில் நமது சிந்தனைக்குரிய ஆவணமாகத் தெரிவது, கசாப் மும்பை கூடுதல் மெட்ரோபாலிட் மாஜிஸ்திரேட் ஸாவன்ந் வாகுலே இடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம். ஒரு சிலரைக்கொண்டே இந்தியா போன்ற விசாலமான பரப்பளவு மிக்க நாட்டை எவ்வாறு தாக்கமுடியும், தாக்க வேண்டும், இஸ்லாமியத் தலைமைக்குள் கொண்டுவர வேண்டும், இதற்கான தீவிரவாத இயக்கம் எவ்வாறு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், திட்டமிட வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக, வரிசை பிசகாது, கோர்வையாகத் தனது வாக்குமூலத்தில் கசாப் விவரித்துள்ளான்.
மும்பையில் நிகழ்த்தப்பட்ட கொடூர சம்பவங்களுக்கு, பாகிஸ்தானில் எப்படி திட்டம் தீட்டப்பட்டது என்பதை, மூளைச்சலவையில் தொடங்கி, பயிற்சி முறை, நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் களத்தைச் சரியாகத் தெரிந்துகொள்வது, வெடிகுண்டு தயாரிப்பது, அதற்கான மூலப்பொருள் பார்வை, ஏகே47 போன்ற நவீன ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி, 60 மணி நேரம் அன்ன ஆகாரமின்றி மலைப்பாதையில் கடினமான சுமையுடன் நடக்கும் தேக, மனோபல பயிற்சி ஆகிய கடுமையானபயிற்சி அம்சங்கள் பற்றியும் கசாப் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒளிவுமறைவின்றித் தெரிவித்துள்ளான்.
அந்த வாக்குமூலம் நமது தினமலர் இணையதளத்தில் முழுமையாக வெளியாக இருக்கிறது.

அடுத்த வாரம் கசாப் குடும்ப பின்னணி...


Advertisement


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raguraman M - Chennai,இந்தியா
27-டிச-201307:39:48 IST Report Abuse
Raguraman M இந்தமாதிரியான கேவலமான செயலை செய்துவிட்டு அதற்க்கு புனித போர் என்று விளக்கம் வேறு... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்தமாதிரியான தீவிரவாத செயலில் ஈடுபடுபவர்களுக்கும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் அழிவு நிச்சியம்... நான் சொல்வது புரிபவர்களுக்கு புரியும் என்று நினைக்குறேன்...
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
09-டிச-201313:36:09 IST Report Abuse
kumarkv Indian intelligence agencies failed to track down local Indian Muslim terrorists animals collaborated with this Paki animal. How they can come on their own without leaving a trace of Indian Muslim terrorists connection?
Rate this:
Share this comment
Cancel
Gokulakrishnan - Jeddah,சவுதி அரேபியா
08-டிச-201311:35:27 IST Report Abuse
Gokulakrishnan சகோதர சகோதரிகளுக்கு தயவு செய்து அனைவரும் இந்தியர் என்ற வட்டத்திற்குள் வாருங்கள்... சரவணன் கூறியது போல் இப்போது உள்ள பிரச்சனை மீனவர்கள் துன்ப படுவது..... அதற்க்கு எவனும்(அரசியல் வாதிகள்) ஒன்னும் பண்ணவில்லை.... இலங்கை தமிழர் ப்ரிச்சனை பேசுவதற்கு முன் நம் இந்திய தமிழர் பிரச்னையை யோசியுங்கள்.... வட மாநிலம் தென் மாநிலம் என்ற பிரிவினை நமக்குள் வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X