டில்லியில் நாளை ஓட்டுப்பதிவு : பணம் பட்டுவாடாவை தடுக்க உஷார்| Dinamalar

டில்லியில் நாளை ஓட்டுப்பதிவு : பணம் பட்டுவாடாவை தடுக்க உஷார்

Added : டிச 03, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது; இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உ.பி., மற்றும் அரியானா எல்லையை ஒட்டிய பகுதிகளில், பணப் பட்டுவாடா, மதுபான சப்ளை ஆகியவை நடைபெறாமல் இருக்க, தேர்தல் ஆணையம், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. டில்லி சட்டசபைக்கு, நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, தேர்தல் பிரசாரம் மாலையுடன் முடிவடைந்தது. வாக்காளர்களுக்கு, பணப் பட்டுவாடா செய்தால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் மீது தான், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
தற்போது முதல் முறையாக, கட்சியினரிடம் இருந்து, வாக்காளர்கள் பணம் வாங்கினால், கைது செய்யப்படுவர் என, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இரண்டு மூன்று நாட்களாக, குடிசை பகுதிகள், அண்டை மாநில எல்லைப் பகுதிகளில், தீவிர கண்காணிப்பில், தேர்தல் ஆணையம், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக, ஏழை மக்களை விலைக்கு வாங்க, அரசியல் கட்சியினர் முயற்சிப்பதால், ஏழைமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள, 11,753 ஓட்டு சாவடிகளில், 630 சாவடிகள், மிகவும் பதற்றம் நிறைந்தவை என, அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு, துணை ராணுவ படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள், அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில், 64 ஆயிரம் டில்லி போலீசாருடன், 107 கம்பெனிகள் துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ள ஓட்டு போடுவதற்காக, அண்டை மாநிலமான, உ.பி., மற்றும் அரியானாவில் இருந்த ஆட்கள் அழைத்து வரப்படலாம் என்பதால், இந்த மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில், எப்போதும் இல்லாத வகையில், கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளது. டில்லிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும், சோதனையிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X