"டிஸ்மிஸ்' தொழிலாளர்களை பணியில் சேர்க்க போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"டிஸ்மிஸ்' தொழிலாளர்களை பணியில் சேர்க்க போராட்டம்

Added : டிச 06, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுக்கோட்டை: பணிநீக்கம் செய்யப்பட்ட பி.எம்.எஸ்.எஸ்.எஸ். பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டை பி.எம்.எஸ்.எஸ்.எஸ். நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள் 16 பேர் தொகுப்பூதிய தொழிலாளர்கள் 28 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. இதர சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
இதையடுத்து தங்களை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தொழிற்சங்கம் ஆரம்பித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜா மாவட்ட செயலாளர் செல்வராஜ் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம் அடைக்கலசாமி மாரிக்கண்ணு முகமது அலி ஜின்னா உட்பட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை