திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரங்களில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரங்களில் மாற்றம்

Added : டிச 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாத அதிகாலை பூஜைகள் நடக்கவுள்ளதால், பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக கோயிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கும். இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். இந்நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி முதல் தேதியான 16.12.13 முதல் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், காலை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு தீபாராதணை, 5 மணிக்கு திருப்பள்ளிஎழுச்சி, 6 முதல் 7 மணி வரை காலசந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிகால பூஜை, அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதணை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரதணை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், ராக்கால தீபாரதணை மாலை 6.45 மணி, ஏகாந்திர தீபாராதணை இரவு 7.30 மணி, பள்ளியறைபூஜை இரவு 8 மணி, நடை சாத்துதல் இரவு 8.30 மணிக்கு நடக்கும், என கோயில் இணை கமிஷனர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை