உலக விண்வெளி வார விழா: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக விண்வெளி வார விழா: பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி

Added : செப் 17, 2010

திருநெல்வேலி: உலக விண்வெளி வார விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில், ராக்கெட்களுக்கு உந்து சக்தியாக பயன்படும் திரவ எரிபொருள் சோதனை மேற்கொள்ளும், திரவ திட்ட இயக்க மையம் செயல்படுகிறது. உலக விண்வெளி வாரம் வரும் அக்., 4ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது (வேர்ல்டு ஸ்பேஸ் வீக்). இதையொட்டி இந்த மையத்தின் சார்பில், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும் பயிலும் தமிழக பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது."பிரபஞ்சத்தின் அற்புதங்கள்' என்ற தலைப்பில் தமிழிலும், அதே பொருள்படியான "மிஸ்டிரியஸ் காஸ்மோஸ்' என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதலாம். ஏ4 பேப்பரில், ஒரு பக்கத்தில் மட்டும் எழுதி 2,000 வார்த்தைகளுக்குள் கட்டுரை இருக்கவேண்டும். கட்டுரை அனுப்பும் மாணவரின் பெயர், வகுப்பு, பயிலும் பள்ளி, பள்ளி முகவரி, வீட்டு முகவரி, இருந்தால் மின்னஞ்சல் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கட்டுரை அந்த மாணவரால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்படவேண்டும்.கட்டுரைகள் செப்., 27ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கப்பெற வேண்டும். கட்டுரைகளை "முதுநிலை நிர்வாக அதிகாரி, திரவ திட்ட இயக்க மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம், அஞ்சல் எண்:627 133' என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். உறையின் மேல் கட்டுரைப்போட்டி: "டபிள்யூ. எஸ். டபிள்யூ' என ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும். தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு முறையே முதல், இரண்டாம் பரிசு என மொத்தம் நான்கு பரிசுகள் வழங்கப்படும். பரிசு பெற்ற மாணவர்களுக்கு விவரம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.மகேந்திரகிரி திட்ட அலுவலக எண்கள்:04637-281510, மொபைல் எண்:94426 41510. வரும் அக்., 4ம் தேதி மகேந்திரகிரி மையத்தில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவின் துவக்க நாளில் பரிசுகள் வழங்கப்படும் என மகேந்திரகிரி மைய முதுநிலை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X