சாலை விரிவாக்கத்திற்காக நவீன தொழில்நுட்பம் மூலம் நகர்த்தப்படும் கட்டடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்கத்திற்காக நவீன தொழில்நுட்பம் மூலம் நகர்த்தப்படும் கட்டடம்

Added : டிச 14, 2013
 சாலை விரிவாக்கத்திற்காக நவீன தொழில்நுட்பம் மூலம் நகர்த்தப்படும் கட்டடம்

சேலையூர் :தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக இடிக்கப்பட இருந்த கட்டடம், நவீன தொழில்நுட்பம் மூலம், அங்கிருந்து சற்று நகர்த்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகள்:தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் வசதிக்காக, தாம்பரம் கிழக்கு புறவழிச் சாலை, ஆறு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக, சேலையூர் முதல் திருவஞ்சேரி வரை, 3 கி.மீ., தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில், பல கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருவஞ்சேரியை சேர்ந்த அன்புராஜ் என்பவர், 1,051 ச.அடியில் கட்டி யுள்ள, வணிக வளாகத்தை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால், அந்த கட்டடத்தை கட்டி இரண்டு ஆண்டுகளே ஆவதால், இடிக்க மனமில்லாத அன்புராஜ், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலம், கட்டடத்தை சற்று நகர்த்தி வைக்க திட்டமிட்டார்.

அந்த நிறுவன அதிகாரிகள், கட்டடத்தை ஆய்வு செய்து, கட்டடத்தின், நான்கு புறமும் பள்ளம் தோண்டினர். பின், பள்ளத்தில் ஜாக்கியை வைத்து, சக்கரம் மூலம் கட்டடம் நகர்த்தப்பட்டது.நான்கு அடி தூரத்திற்கு கட்டடம் நகர்த்தப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக நான்கு அடி தூரத்திற்கு கட்டடத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால், கட்டடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, அவர்கள் கூறியுள்ளனர். கட்டடத்தை நகர்த்த, மொத்தம், 7 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது.இந்த நிறுவனத்தினர், ஏற்கனவே, கோவையில், ஒரு கட்டடத்தை, 60 அடி தூரத்திற்கு நகர்த்தி உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X