உயிர் காக்கும் உணவு திருவிழா டிச., 26ல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்கும் உணவு திருவிழா டிச., 26ல் துவக்கம்

Added : டிச 22, 2013
Advertisement

கோவை : "உயிர் காக்கும் உணவுத் திருவிழா' அவிநாசி ரோடு, மீனாட்சி மஹாலில் டிச., 26ல் துவங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக, "நவயுக அறக்கட்டளை' யோகா மற்றும் ஆன்மிக கல்வியை கற்பித்து வருகிறது. இதன் ஒரு பகுதியான "நளன் உணவகம்' சார்பில், கோவையில் நான்கு நாட்கள், "உயிர் காக்கும் உணவுத் திருவிழா' நடக்கிறது. டிச., 26 மாலை 6:00 மணிக்கு விழா துவங்குகிறது.
"நவயுக அறக்கட்டளை' அறங்காவலர் குரு புருஷோத்தமன் கூறியதாவது: தற்போது ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவு பழக்கங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவே இத்திருவிழா நடக்கிறது. நவதானியங்கள், மூலிகைகளால் ஆன 40 வகை தோசை, 14 வகை சட்னி, 10 வகையான சாம்பார், 12 வகையான சூப் என 214 உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. பருத்தி ஆடைகள், எண்ணெய், கசாயம், மருந்து போன்ற தாவர பொருட்களும், பாரம்பரிய உணவு சமையல் குறிப்பு புத்தகங்
களும் இடம் பெறுகின்றன.
இதன் முக்கிய அம்சமே புளி, மைதா, மசாலா, டால்டா, பால், தயிர், காளான் மற்றும் பதப்
படுத்தப்பட்ட செயற்கை கலப்பு பொருட்கள் எதுவும் இல்லாமல், தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள்தான். காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை உணவுத்
திருவிழா நடக்கிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X