பட்டினி கிடக்க பயிற்சி| Dinamalar

பட்டினி கிடக்க பயிற்சி

Added : டிச 23, 2013 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
பட்டினி கிடக்க பயிற்சி

பிப்ரவரி 2008 தெரா-இ-அம்மா பயிற்சிக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாய் வசூல் தௌரா-இ-அம்மா என்ற வாசகத்துடன் உஸ்தாத் பகதுல்லா இவர்களிடம் ஒரு கடிதம் கொடுத்து மனக்ஷோ மார்கஸ் அக்சா என்ற இடத்துக்கு அனுப்பினான். 12 மணி நேர பஸ் பயணத்துக்குப் பின் அந்த இடத்தை அடைந்து, பின்னர் அந்த பஸ் நிலையத்திலிருந்து மலைப்பிரதேசத்தில் நடந்து சென்று குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். வாயிலில் அவர்கள் சோதிக்கப்பட்டனர். பகதுல்லாவின் கடிதத்தைக் காட்டியதும் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்து கொண்டபின்னர், ஒருநாள் அங்கு தங்கிய பின்னர், கசாப் மற்றும் உடன் வந்தவர்கள், ஒரு போன் மூலம் அனைவரும் புட்டல் கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து ஒரு மலை உச்சிக்கு வேன் டிரைவர் அவர்களை கால்நடையாக அழைத்துச் சென்றான். 30 நிமிடங்களில் அவர்கள் மலை உச்சியை அடைந்தனர்.
இந்த இரண்டாவது 21 நாள் பயிற்சியில் உடற்பயிற்சி, மலை மீது ஏறுதல், ஓடுதல் பயிற்சிகள் தரப்பட்டன. மேலும் ஏகே-47 துப்பாக்கிகளைப் பிரித்துப் பின்னர் ஒன்றுசேர்ப்பது ஆகிய பயிற்சிகளும் தரப்பட்டன. ரைபிள், பிஸடல் போன்ற ஆயுதங்களைக் கையாளும் பயிற்சிகளும் தரப்பட்டன. பின்னர் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


உணவு தயாரிக்கும் பணி:

மும்பை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்த கசாப், பயிற்சிக்குப் பின்னர் அவர்கள் விரும்பினால் சொந்த ஊருக்கு சென்று வரலாம். அல்லது அங்கு 3 மாதம் இருந்து பயிற்சிக்கு வருவோரைக் கண்காணித்து அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியைச் செய்யலாம் என்று கூறினான்.
முஜாஹிதீன்களுக்குச் சேவை செய்ய கசாப் அங்கு தங்கிவிட்டான். அபு அப்துல் ரஹ்மான் (தேடப்படும் குற்றவாளி 9), யூசுப் (தேடப்படும் குற்றவாளி 15), அபு அனாஸ் (தேடப்படும் குற்றவாளி 10) மற்றும் அபு பஷீர் (தேடப்படும் குற்றவாளி 11) ஆகியோர் இந்த நாட்களில் பயிற்சிக்கு வந்தவர்கள்.
பின்னர், தௌரா-இ-காசா, ஒகாரா மாவட்டம், மாடல் டவுனில் உள்ள லஷ்கர்-இ-தோய்பா அலுவலகம் செல்லுமாறு கஸாபா உஸ்தாத், அபு அப்துல் ரஹிமான் இருவரும் அவனுக்கு உத்தரவிட்டனர். அங்கிருந்து 12 மணி நேர பஸ் பயணம், பின்னர் மீண்டும் 1 கிலோ மீட்டர் நடந்து, மாடல் டவுனில் ஒரு சந்துக்குள் இருக்கும் மசூதியில் உள்ள லஷ்கர்-இ-தோய்பா அலுவலகத்தை கசாப் அடைந்தான். பின்னர் பல சோதனை சம்பிரதாயங்கள் முடிந்தபின்னர், கசாப் முசாபராபாத் லக்ஷர் பயிற்சி முகாமுக்கு உரிய அறிமுகக் கடிதங்களுடன் புறப்பட்டான்.


ஆக்கிரமிப்பு பகுதியில்:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள முசாபராபாத் நகரை 17 மணி நேரப்பயணத்துக்குப் பின் இவர்கள் அடைந்தனர். வழியில் நீலம் தாரியா எனப்படும் லக்ஷர் மருத்துவமனை உள்ளது. இங்கு 10,12 வீடுகளும் ஒரு மசூதியும் உள்ளன. இந்த இடத்துக்கு பைதுல்முஜாஹிதீன் என்று பெயர். இங்கு சையீத் என்பவனிடம் இவர்கள் கொண்டுவந்த சீட்டைக் கொடுத்து இந்த மஸ்கார் அக்ஸா என்ற பயிற்சி முகாமை அடைந்தனர். இது பலத்த பாதுகாப்பு பகுதி. நடமாட்டங்கள் மிகவும் கண்காணிப்புடன் இருந்தன. அபுமுவாயியா (தேடப்படும் குற்றிவாளி 28) அனுமதியின்றி யாரும் நகரமுடியாது. 2008 மே, ஜூன் மாதங்களில் இங்கு பயிற்சி நடந்தது.
இந்தப் பயிற்சியில் இவர்கள் முழுமையானஜிகாதிகளாக உருவாக்கப்பட்டனர். ஹாடிஸ், நமாஸ் மற்றும் குரான் பயிற்சிகள், பாடங்கள் நடந்தன. ஏகே-47 மற்றும் பலவகைத் துப்பாக்கிகளைப் பிரித்துச் சேர்த்தல், கை குண்டுகள் எறிதல், ஆயுதங்களைப் பயன்படுத்தும் முறைகள், ராக்கெட் லான்சர்ஸ், சேடலைட் தொலைபேசிகளை எவ்வாறு பயன்படுத்துதல், ஜிபிஎஸ் முறைகள், வரைபடங்களைக் கொண்டு இலக்கை அறிந்து தாக்குதல் ஆகிய பயிற்சிகளுடன், 60மணி நேரம் ஊண், உறக்கமின்றிப் பெருஞ்சுமையை முதுகில் சுமந்துகொண்டு மலையேறும் கடுமையான உடற்பயிற்சிகளும் இங்கு ஜிகாதிகளுக்குத் தரப்பட்டது. இந்தக் கடுமையான பயிற்சிக்கு ஈடுகொடுக்க முடியாது 10 பேர் ஓடிவிட்டனர். இந்தப் பயிற்சிக்கான தலைவர்கள் அபு முவாவிலா மற்றும் அபு ஹன்சாலா (தேடப்படும் குற்றவாளி 31).


பாகிஸ்தான் ராணுவ அதிகாரி:

இந்தப் பயிற்சிகளின் போது தனக்குத் தெரியாத ஒரு நபர் முகாமிற்கு வந்ததாக கசாப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். அங்கிருந்த 3 பேர் அந்தப் புதியவரைத் தழுவி வரவேற்றனர். ராணுவ முறையில் அவருக்கு சல்யூட் அடித்தனர். இவரே மேஜர் ஜெனரல் ஸாப் என்று பயிற்சியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் (தேடப்படும் குற்றவாளி 20). ஆனால் இந்த மேஜர் ஜெனரல் ஸாப் (ஸாப் - மரியாதைக்குரியவர்) பெயர் யாருக்கும் கூறப்படவில்லை. பயிற்சியளித்தவர்கள் இவரது ஆட்களே என்று மட்டுமே இவர்களுக்குக் கூறப்பட்டது. மேஜர் ஜெனரல் "உங்களுக்கு ஏதாவது குறைகள் உண்டா'' என்று கேட்டதற்கு இவர்கள் "இல்லை' என்று பதில் கூறினார்கள். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் இவர்களுடன் உரையாடிவிட்டு மேஜர் ஜெனரல் சென்றுவிட்டார்.
சகலவிதமான கடுமையான பயிற்சிகளுக்குப் பின், பயிற்சித் தலைவர் கசாப்-க்கு ரூபாய் 1,300 (ஒரு ஆயிரத்து முன்னூறு) பணம் கொடுத்து, வீட்டுக்குப் போய் வருமாறும், பின்னர் பைகால் முஜாஹிதீன் அலுவலகத்தில் அமீர் ஹபீஸ் சையத்-ஐ சந்திக்குமாறு கூறியதாகவும் கசாப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai Priya - chennai,இந்தியா
28-டிச-201321:24:38 IST Report Abuse
Sai Priya இந்த தேச துரோக செயலை செய்ய துணை செல்பவன் இந்தியனாய் இருந்தால் அவனை மட்டும் நான் எதிர்கிறேன் . ஒருவன் தவறான பாதையில் சென்றால் அவன் இனத்தையே பழிப்பது தவறு . பல பெற்றோர்களுக்கு தம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதே தெரிவதில்லை .
Rate this:
Share this comment
Cancel
S.Bala Kesavan - Santiago,சிலி
26-டிச-201301:50:11 IST Report Abuse
S.Bala Kesavan I was from Tirunelveli, palayamkottai.I believe science than god. I know lot of poor islamic youths are brain washed and become jihadis. Whoever incharge of convert them has lot of money(source unknown), but still the poor jihadis still live poor life, sacrificing their life for someone's selfishness to make money. Jihad means war against people who trying to destroy allah. Actual Jihad has to give a warning before going for war, then announce war. This is to give time for enemy to be prepared.But what happen in Mumbai, is a brutally, lot of innocents were ed even doesn't know why they were ed. Jihadis shot the INDIANS not muslims or hindu. Most of the jihadis directly involved in this brutality, dont have enough education. Education is free in India, even Muslim has reservation in all education institutes. So what jihadi's doing is a ignorance about the secularism.
Rate this:
Share this comment
Cancel
sivanantham.s - tirupur,இந்தியா
24-டிச-201316:30:52 IST Report Abuse
sivanantham.s என் மனம் துடிக்கிறது, அடக்கு அடக்கு என்கிறது கடமை.
Rate this:
Share this comment
Moin Ahmed - Chennai,இந்தியா
25-டிச-201319:44:57 IST Report Abuse
Moin Ahmedஅவர்களை வெறுக்காதீர்கள்...........அவர்களும் ஒரு காலத்தில் மாலிக்காபூர், திப்பு சுல்தான், அவுரங்கசீப் படையெடுப்புகளின் பொது மதம் மாற்றப்பட்ட ஹிந்து சகோதரர்களே ......
Rate this:
Share this comment
Moin Ahmed - Chennai,இந்தியா
25-டிச-201320:45:34 IST Report Abuse
Moin Ahmedஅமெரிக்காவில் christians 82%, இந்தியாவில் ஹிந்துக்கள் 82%.............ஆனால் அமெரிக்காவில் எந்த சிறு பான்மயினரும் ஒதுக்கீடு கேட்பதில்லை..........ஆனால் இந்தியாவில் ஹிந்துக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கீடு வேண்டும் என கேட்பார்கள்................
Rate this:
Share this comment
Moses Gsekaran - CHENNAI,இந்தியா
26-டிச-201321:46:54 IST Report Abuse
Moses Gsekaranமன்னிக்கவும் அது அரசால்வாதிகளால் ஓட்டுக்காக கொண்டுவரப்பட்டது. யாரையும் யாராலும் மறைக்க முடியாது...
Rate this:
Share this comment
Prakash - Bangalore,இந்தியா
29-டிச-201310:44:14 IST Report Abuse
Prakashyes.mr vishnu we also paying tax......
Rate this:
Share this comment
kumarkv - chennai,இந்தியா
30-டிச-201313:34:50 IST Report Abuse
kumarkvBut wipe away all the benefits in the name of minority. Each and every Hindu sect is a minority. They are far less than any other minorities like Christians and Muslims....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X