இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம் வானகத்தில் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நம்மாழ்வார், 74. விவசாய குடும்பத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலையில், பி.எஸ்ஸி., வேளாண்மை படிப்பு முடித்த அவருக்கு, மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
வேளாண்மை படிப்பு முடித்தவுடன், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வேளாண் ஆராய்ச்சி மையத்தில், பணியில் சேர்ந்தார். அப்போது, மத்திய அரசு, பசுமை புரட்சி திட்டத்தை அறிவித்து, அதற்காக, ரசாயன உரங்களை இறக்குமதி செய்தது. தொடர்ந்து, ரசாயன உரங்களை பயன்படுத்தினால், மண் மலடாகி, வேளாண்மை தொழில் பாதிக்கும், என்று கருதினார். அதனால், பணியில் இருந்து விலகிய அவர், இயற்கை விவசாயத்தை ஊக்கும்விக்கும் பணியில் ஈடுபட்டார்.
இதற்காக, கரூர் மாவட்டத்தில் உள்ள சுருமான்பட்டி என்ற இடத்தில், "வானகம்' என்ற இயற்கை வேளாண் பண்ணை அமைத்து, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை சந்தித்து, இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்தும், கிராமப்புற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களாக, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அத்திவெட்டி கிராமத்தில் உள்ள, லெனின் என்பவர் வீட்டில் தங்கி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. நேற்று இரவு, 8 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மரணமடைந்தார். அவரது உடல், கரூர் மாவட்டம், சுருமான்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, "வானகம்' வேளாண் பண்ணையில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்