BJP shock over vijayakanth's condition | விஜயகாந்த் போட்ட 'குண்டு': பா.ஜ., தலைவர்கள் கலக்கம்| Dinamalar

விஜயகாந்த் போட்ட 'குண்டு': பா.ஜ., தலைவர்கள் கலக்கம்

Added : ஜன 01, 2014 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விஜயகாந்த் போட்ட 'குண்டு': பா.ஜ., தலைவர்கள் கலக்கம்

பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இணைய, அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளால், பா.ஜ., மாநில தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

வரும், மே மாதம் நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலுக்காக, தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில், வலுவான கூட்டணியை ஏற்படுத்த, அக்கட்சியின், மாநில தலைவர்கள் முதல், தேசிய தலைவர்கள் வரை, கடந்த சில மாதங்களாக முயற்சித்து வருகின்றனர்.இதற்காக, ம.தி.மு.க., - பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான, அடிப்படையான, சில களப்பணிகளை, காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் செய்தார். இதையடுத்து, விஜயகாந்தை சந்தித்துப் பேச, பா.ஜ., தலைவர்கள் விரும்பினர். அதற்கான பிரதிநிதியாக, பா.ஜ., தேசிய செயலர், முரளிதர்ராவ் நியமிக்கப்பட்டார். அவரும், விஜயகாந்தை தொடர்பு கொண்டு, தான் சந்தித்துப் பேச விரும்புவது குறித்து தெரிவித்தார்.ஆனால் விஜயகாந்த், தன் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணி செயலருமான, சுதீஷிடம் முதலில் பேசும்படி கூறியுள்ளார்.இதையடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், சுதீஷை சந்தித்தார் முரளிதர்ராவ். அப்போது, விஜயகாந்த் தரப்பில், பா.ஜ.,வுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார் சுதீஷ்.

அந்த நிபந்தனைகள் தொடர்பாக, பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
*கூட்டணி, தே.மு.தி.க., தலைைமயில்தான் அமைய வேண்டும். கூட்டணித் தலைவராக, விஜயகாந்த் செயல்பட்டு, கூட்டணியில் இடம் பெறும், பா.ஜ., உட்பட, அனைத்து கட்சிகளுக்கும், அவர்தான், 'சீட்'களை பிரித்துக் கொடுப்பார்.
*தமிழகத்தில், வட மாவட்டங்களில் உள்ள, லோக்சபா தொகுதிகளில், சரி பாதியில், தே.மு.தி.க.,வே போட்டியிடும்.
*தேர்தலுக்கான மொத்த செலவையும், தேசிய கட்சியான, பா.ஜ.,வே, ஏற்றுக் கொள்ள வேண்டும்.
'இந்த நிபந்தனைகளை, பா.ஜ., மேலிடம் ஏற்றுக் கொண்டால், அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் தயாராக உள்ளார்' என, முரளிதர்ராவிடம், சுதீஷ் கூறியுள்ளார்.

பா.ஜ.,வின் வரலாற்றிலேயே இதுபோன்ற நிபந்தனைகளை, எந்தக் கூட்டணி கட்சியும் விதித்தது இல்லை என்பதால், அதிர்ச்சி அடைந்த முரளிதர்ராவ், அதற்கு மேல், எதுவும் பேச முடியாமல், 'மீண்டும் பேசுவோம்' என்று, மட்டும் கூறி விட்டு, அமைதியாக கட்சி அலுவலகம் திரும்பி விட்டார்.'என்னய்யா... சினிமாவில் வசனம் பேசுவது போல, நிபந்தனைகளை அள்ளி வீசுகிறாரே, விஜயகாந்த், அவரை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை; ஒரே குழப்பமாக உள்ளது' என, பா.ஜ., மாநில நிர்வாகிகளிடம் புலம்பியுள்ளார், முரளிதர்ராவ். இருந்தாலும், விஜயகாந்தை எப்படியும் பா.ஜ., கூட்டணிக்கு கொண்டு வருவோம்.இவ்வாறு, பா.ஜ., நிர்வாகி கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajen.tnl - tirunelveli,இந்தியா
01-ஜன-201412:45:02 IST Report Abuse
rajen.tnl தனித்து விடப்பட்டால் அழிந்து போவார் ....
Rate this:
Share this comment
Cancel
Selambanan - Coimbatore,இந்தியா
01-ஜன-201408:33:33 IST Report Abuse
Selambanan ஆட்சியில இருந்தும், ஆட்சியில ஒட்டீட்டும் இருந்தும் பணம் நெறைய சம்பாரிச்ச கட்சிக , சின்ன, உதிரி, ஜாதி, நடிகர் கட்சிகள நிறைய பணம் குடுத்து இழுக்க ஆரம்பிச்சுட்டாங்கலாம் சேதி நம்முளுக்கு தெரியுமுங்களா ?
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
01-ஜன-201406:53:48 IST Report Abuse
SURESH SUBBU இவரு கேக்குற 19 தொகுதிய எந்த கட்சிகளும் கொடுக்காது... அதுனால தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி வச்சு தேர்தல் செலவை மக்கள் கிட்டயும் தெய்வத்துகிட்டையும் கேட்டா என்ன...விஜயகாந்து இதை பத்தி யோசிக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X