கேட்டாள் தாலி; காதலி "காலி': கோவை அருகே கொடூரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேட்டாள் தாலி; காதலி "காலி': கோவை அருகே கொடூரம்

Added : ஜன 01, 2014 | கருத்துகள் (26)
Advertisement
கேட்டாள் தாலி; காதலி "காலி': கோவை அருகே கொடூரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண், காதலனால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு பிறகு உடல் கைப்பற்றப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த பட்டுராஜா மகள் சசிகலா, 24. கோதவாடியிலுள்ள, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த அக்., 24 ம் தேதி வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. இது குறித்து, பட்டுராஜா பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், உடன் வேலை பார்த்த ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த வினோத்,26, என்பவரை சசிகலா காதலித்து வந்ததும், இவர் காணாமல் போன நாள் முதல் காதலனும், தலைமறைவானதும் தெரிய வந்தது. சந்தேகமடைந்த போலீசார், தலைமறைவான வினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவையில் சுற்றித்திரிந்த வினோத், போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சசிகலாவை கொலை செய்து, ஈச்சனாரி பை-பாஸ் ரோடு பகுதியில் புதைத்தது, தெரியவந்தது.


இது குறித்து போலீசார் கூறியதாவது:

ஒரே இடத்தில் பணிபுரிந்த, வினோத், சசிகலா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து இருக்கின்றனர். இடையில் வினோத், வேறு வேலைக்கு சென்றுவிட்டார். ஒரு கட்டத்தில், சசிகலாவிடம் வினோத் திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த அக்., 24ம் தேதி, அவரை காரில் அழைத்துச்சென்ற வினோத், திரும்ப திருமணம் பற்றி பேசியுள்ளார். சசிகலா சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த வினோத் தாக்கியதில், அவர் மயங்கி விழுந்துள்ளார். பின், அவரது கழுத்தை நெரித்து கொன்று விட்டு, உடலை, ஈச்சனாரி பை-பாஸ் ரோட்டில், முட்புதர்களுக்கு இடையே உள்ள குழியில் தள்ளி புதைத்து விட்டார். பின் தலைமறைவாகி, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த வினோத், கோவை வந்த போது, மொபைல் போன் சிக்னல் உதவியால் பிடிபட்டார். வினோத் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து, அழுகிய நிலையில், சசிகலாவின் உடல் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bagavathi Govindaraj - tamil nadu,இந்தியா
05-ஜன-201409:36:11 IST Report Abuse
Bagavathi Govindaraj என்ன சார் தலைப்பு ? கேட்டாள் தாலி முடித்தான் ஜோலி அன்னு .....
Rate this:
Share this comment
Cancel
Rajeshvelmurugan - virudhunagar,இந்தியா
02-ஜன-201421:08:40 IST Report Abuse
Rajeshvelmurugan காதலிப்பதே திருமணம் செய்து கொள்ளத்தானே .... பிறகு ஏன் அவள் மறுத்தாள்... தவறு யார் மீது? அவன் கொலை செய்தது தவறு..... அதற்காகவா காதலித்தான்.... அவன் காதலித்தது உண்மை என்றால் அவனால் அதனை செய்திருக்க முடியாது... அப்படியே செய்திருந்தாலும் அவனும் மாய்ந்திருக்க வேண்டும்.. அதுதான் காதல்.... இவளிடம் திருமணம் செய்து கொள்ளத்தானே கேட்டான்..... அவள் ஒத்துக்கொண்டிருக்கலாமே ....? ஏன் மறுத்தாள்.... மறுத்திருக்க மாட்டாள் .... நடந்தது வேறு... இதன் பின்னணி வேறு... அவன் அளித்த வாக்குமூலம் பொய்யாக இருக்கலாம்... ஏனென்றால் திருமணம் வேண்டாம் என்று கூறியவள் அவன்மீது நம்பிக்கையுடன் காரில் சென்றிருக்க மாட்டாள்.... அவள் காதல் உண்மையாகத்தான் இருந்திருக்கும்.... இது திட்டமிட்ட கொலை..... இன்னும் விசாரிக்க வேண்டும்.... அவனுக்கு மரண தண்டனைதான் விதிக்க பட வேண்டும்.... காதல் என்னும் வார்த்தையை கொச்சப்படுத்தும் பாவி அவன்....
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
02-ஜன-201420:04:15 IST Report Abuse
Mohandhas பெற்றோர் பேச்சை கேட்காதவங்க வாழ்க்கை இப்படிதான் ஆகும் ....
Rate this:
Share this comment
Cancel
GATASASA - Fahaheel,குவைத்
02-ஜன-201419:17:55 IST Report Abuse
GATASASA திருந்துங்கடா..அவ தான் கல்யாணத்துக்கு சம்மதிக்கலயே. விட்டுட்டு போகவேண்டியது தானே, காதலித்த பெண்ணையே.. கல்யாணம்.. பண்ணனுமுன்னு நினச்சா உலகத்துல பாதிபேரு பிரமசாரியாதான் வாழணும்.
Rate this:
Share this comment
Cancel
kuchipudi gumma - chennai,இந்தியா
02-ஜன-201417:14:17 IST Report Abuse
kuchipudi gumma பேயாய் அலையும் அந்த பெண்ணிற்கு இப்போது தண்ணீர் , உணவு யார் கொடுப்பார்கள் , உரிமை பெசினவர்களா /பேசுபவர்களா /பேசபோகின்றவர்களா??? பரலோக சுகமான வாழ்விற்கு அவரவர்கள் தங்களை இவ்வுலகில் நெறியோடு வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Vaithi Esvaran - Chennai,இந்தியா
02-ஜன-201414:07:33 IST Report Abuse
Vaithi Esvaran கல்யாணம் செய்துகொள்ள இஷ்டமில்லாத பெண் தனது முன்னாள் காதலருடன் காரில்(?) ஏன் செல்ல வேண்டும் ??? "சொந்த செலவில் சூன்யம்" அல்லது "ஆப்பை தேடி சென்று அமர்வது" என்பது இதுதான் .
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
02-ஜன-201413:42:46 IST Report Abuse
சகுனி தவறான தலைப்பு .......
Rate this:
Share this comment
Cancel
Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
02-ஜன-201413:27:29 IST Report Abuse
Selvaraaj Prabu தினமலர் தலைப்பை மாற்ற வேண்டும். முழுதாக செய்தியை படிக்காமல் நிறைய பேர் இந்த ஆணை திட்டுகிறார்கள். இந்த பெண் எதற்கு காதலித்ததோ யாருக்கு தெரியும். கொலை செய்யாமல் "போய்த் தொலைடி" என்று விட்டுருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
hariharan gunasekaran - Sheffield,யுனைடெட் கிங்டம்
02-ஜன-201412:55:10 IST Report Abuse
hariharan gunasekaran Even if girl ask for the marriage to boy and suicide it will be a different case...... Why the girl is not agree for the marriage if anyone can tell... what ever he ed its a murder.... why did girl doesnt agree..... is there any reason.................. why always blaming boys
Rate this:
Share this comment
Cancel
Dindigul Nana - Erode,இந்தியா
02-ஜன-201412:42:30 IST Report Abuse
Dindigul Nana ஒழுங்கா படித்தோமா, வேலைக்குப் போனோமா , அம்மா அப்பா குடும்ப உறுப்பினர்களை கவனித்தோமா என்று இருக்க இக்கால இளைஞர் இளைஞிகள் பழக வேண்டும். பெற்று வளர்த்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தெரியும். அதுவரை பொறுமையாக இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை