அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Added : ஜன 01, 2014
அய்யாவாடி கோவிலில் நிகும்பலா யாகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை: அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், நேற்று நடந்த நிகும்பலா யாகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில், மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு, ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் அம்பாளை பூஜித்து, வரம் பெற்றதாகவும், அமாவாசைதோறும் நடக்கும் நிகும்பலா யாகத்தில் பங்கற்று அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். மார்கழி மாத அமாவாசையான நேற்று காலை, மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, 9.00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மதியம் 1.00 மணிக்கு, தண்டபாணி குருக்கள், யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தினார். ஆண்டின் தொடக்க நாளான நேற்று நடந்த யாகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்தியங்கிரா தேவியை தரிசித்தனர். கும்பகோணத்திலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X