ஜாதிக் கட்சிகள் சாதித்தது உண்டா?| Dinamalar

ஜாதிக் கட்சிகள் சாதித்தது உண்டா?

Added : ஜன 02, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜாதிக் கட்சிகள் சாதித்தது உண்டா?

ஜாதியின் பெயரைச் சொல்லி, கடந்த பல ஆண்டுகளில், ஏராளமான கட்சிகள் துவக்கப்பட்டாலும், அவற்றில் பல காணாமல் போய்விட்டதே வரலாறு. நிலைத்திருக்கும் ஒன்றிரண்டு கட்சிகளும், ஓரிரு இடங்களைப் பெறவே, பிரதான அரசியல் கட்சிகளின் தயவை நாடி இருக்கும் நிலையே உள்ளது. ஆனாலும், ஜாதியக் கட்சிகளை துவக்குவதிலும், ஜாதிகளின் தலைவர்களை ஒன்றிணைப்பதிலும், சிலர் ஈடுபட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களில், ஒருவர் தன் தரப்பு வாதத்தை முன்வைக்க, அதற்கு சரவெடியாக மற்றொருவர் அளித்த பதில் இதோ:
பெஸ்ட் ராமசாமி,தலைவர், கொங்குநாடு முன்னேற்ற கழகம்:திராவிட கட்சிகளே, மாறி மாறி ஆட்சி செய்து, எங்களைப் போன்ற சமூகங்களை கண்டு கொள்ளவில்லை. எங்கள் சமூகத்தினர், ஆளும் கட்சிகளில், பொறுப்புகளில் இருந்தாலும், அது அக்கட்சியின் வளர்ச்சிக்கு தான் பயன்படுகிறதே அன்றி, சமூகத்துக்கு, அவர்களால் பலனில்லை. அதனால், கொங்கு மக்களின் முன்னேற்றத்துக்காக, கட்சி ஆரம்பித்தோம்.இந்த கட்சி, கவுண்டர்களுக்காக மட்டும் செயல்பட்டால் பலனில்லை. அதனால், மக்களின் முழுமையான ஆதரவை பெற முடியாது என, அனைத்து சமூகத்தினரையும் இணைக்க முயன்றோம்.அனைத்துத் தரப்பினரையும், இணைத்து செல்ல வேண்டும் என்பதற்காக, 54 சமூகத்தை சேர்ந்தவர்களை இணைத்து, தேசிய சமுதாய கூட்டமைப்பை, கொங்குநாடு முன்னேற்ற கழகம் உருவாக்கியுள்ளது. இதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிரதிநிதித்துவம் அளிக்க விரும்புகிறோம்.ஆனால், கூட்டமைப்பில் உள்ள, சில சமூகங்கள் இதை ஏற்க மறுக்கின்றன.அதனால், அவர்களிடம் தொடர் ஆலோசனைகளை நடத்தி, தாழ்த்தப்பட்ட மக்களையும், கூட்டமைப்பில் சேர்க்க முயற்சிக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களும், இந்நாட்டின் குடிமக்களே. அவர்களும் படித்து முன்னேறினால் தான், சமத்துவ சமுதாயம் ஏற்படும்.எங்களைப் பொறுத்தவரை, சமூகங்கள் முன்னேறினால் தான், பரவலான வளர்ச்சி, நாட்டில் ஏற்படும். இல்லையேல், தகராறுகளே அதிகரிக்கும்.அரசியல் கட்சிகளால், சமூக வளர்ச்சிக்கு பலனில்லை என்பதால், சமூக அமைப்புகளை உருவாக்கி, தேர்தலை சந்திக்கிறோம். இதில், தவறு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.
அருணன்,கவுரவ தலைவர், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்:'ஒரு சமூகம் வளரவில்லை; அதற்காக கட்சி ஆரம்பிக்கிறோம்; தேர்தலில் போட்டியிடுகிறோம்' என, கூறுவது அர்த்தமற்றது. பல, 100 ஆண்டுகளாக, பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த சமூகங்களை மேம்படுத்தவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜாதி கட்சிகள், அவர்கள் சமூகத்தில், வளர்ச்சியடையவில்லை என, யாரைக் கூறுகிறார்கள் என, தெரியவில்லை.பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை அணி திரட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே. ஜாதி கட்சிகள் விடுக்கும் முக்கிய கோரிக்கை, 'வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என்பதே.கேட்டால், 'அதன்மூலம், தாழ்த்தப்பட்ட மக்கள், எங்களை மிரட்டுகின்றனர்' என, குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால், இச்சட்டம் மூலம், பல வழக்குகள் தொடரப்பட்டாலும், அந்த வழக்குகளில், தண்டிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, விரல் விட்டும் எண்ணும் அளவுக்கே உள்ளது.குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெறுவதையோ, பொருளாதாரத்தில் முன்னேறுவதையோ, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரால், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடே, தங்கள் சமூகத்தை வளர்க்கிறோம் என, பறைசாற்றி, ஜாதிக்காரர்களை அணி திரட்டுகின்றனர்.இங்கு உருவாகியுள்ள ஜாதிக் கட்சிகளின் கூட்டமைப்பு, நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிரிக்கும் சூழலையே உருவாக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X